முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


ஏழை குடும்ப இஸ்லாமிய பெண்ணின் திருமண உதவி குறித்து நமது இணையத்தளத்திற்கு வந்த கடிதம்திருநெல்வேலி, ஜூலை 16: அன்பார்ந்த எக்ஸ்பிரஸ் இணையத்தள வாகர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நமது எக்ஸ்பிரஸ் இணையத் தளத்திற்கு உதவி நாடி வந்த கடிதத்தை உங்கள் முன்பு பகிர்ந்து கொள்கிறோம். 

என் மூத்த சகோதரிக்கு மூன்று பெண் குழந்தைகள் , இரண்டாவது பெண் பொறியியல் கல்வி பயில கடந்த வருடம் உதவி கேட்டு நமது குழுவில் விண்ணப்பித்து இருந்தேன் . நல் உள்ளம் கொண்ட  சகோதர் கடந்த இரு வருடங்களாக கல்வி உதவி தொகை வழங்கி வருகிறார் . அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக .
சகோதரியின் மூன்றாவது பெண் இவ்வருட SSLC  தேர்வில் 483 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார் . அவரையும் + 1 வகுப்பில் சேர்த்துள்ளார் என் சகோதரி.

இப்பொழுது தனது முதல் மகள் சாஜிதா அவர்களுக்கு நிக்காஹ் செய்ய மணமகன் தேடி வந்தார் . அல்லாஹ் கிருபையால் ஒரு மணமகன் அமைந்துள்ளார். இன்ஸா அல்லாஹ் வரும் ரமலான் பெருநாள் முடிந்ததும் நிக்காஹ் வைக்க நினைத்துள்ளார் .

சகோதர்களுக்கு ஒரு வேண்டுகோள் .எனது மச்சான் (சகோதரி கணவர் ).தினசரி கூலி  ( drum  பெட்டி ) வேலை பார்க்கும் தொழிலாளி . என் சகோதரிக்கு தான் கஷ்டபட்டாலும் தன் குழந்தைகள் ஒரு பட்ட படிப்பு படித்து விட வேண்டும் என்ற எண்ணத்தால் தனது மூன்று பெண்குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

முதல் பெண் Bsc படிப்பு முடித்துள்ளார். அவருக்குதான் இப்பொழுது நிக்காஹ் செய்ய தீர்மானித்துள்ளார் . நிக்காஹ் செய்ய பணமுடை உள்ளது . சகோதர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன் .

அதே சமயம் ஏழை குமாருக்கு திருமண உதவி செய்யும் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களையும் தந்தால் உதவியாக இருக்கும் .


நிக்காஹ் தேதி குறித்து இன்னும் என் சகோதரி தகவல் சொல்லவில்லை . இன்ஸா அல்லாஹ் எல்லாம் முடிவான பிறகு மறுபடியும் உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.


மேலும் தொடர்புக்கு:

அப்துல் ரஹ்மான் 

00974-33586521..........

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)