முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது குடிநீர் ஆப்ரேட்டர் சரமாரி தாக்கு...



முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை அடுத்த விளாங்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளி வளாகத்துக்குள் அந்த கிராம மக்களுக்கு விணியோகிக்கப்படும் குடிநீர்; டேங்கும் உள்ளது. அதனை அதே பகுதியைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் ஆப்ரேட்டர் தமிழ்மாறன் இயக்கி வருகிறார். தினமும் மின் மோட்டார் மூலம் தண்ணீரை டேங்கிலில் ஏற்றி பின்னர் குடிநீர் டேங்கிலிருந்து தண்ணீரை திறந்து விடும் தமிழ்மாறன் தண்ணீரை நிறுத்த வருவதில்லை. இதனால் தினமும் டேங்கிலிருந்து தண்ணீர் வழிந்து பள்ளி வளாகத்துக்குள் சென்று தண்ணீர் சேரும் சகதியுமாக ஆகி வந்துள்ளது. இதனால் பள்ளியின் மாணவ மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

இதனை ஆப்ரேட்டர் தமிழ்மாறனிடம் பலமுறை பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார்(45) எடுத்து கூறி உள்ளார். ஆனாலும் ஆப்ரேட்டர் தமிழ்மாறன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இது குறித்து தலைமை ஆசிரியர் குமார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமனிடம் புகார் தெரிவித்துள்ளார். உடன் ஊராட்சி மன்ற தலைவர், குடிநீர் ஆப்ரேட்டர் தமிழ்மாறனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மாறன் நேற்று பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியர் குமாரை உள்ளே புகுந்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர் குமார் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குடிநீர் ஆப்ரேட்டர் தமிழ்மாறனை தேடி வருகிறார்.

அன்பு சகோதரர்களே.!!!.சகோதரிக்காக பிரார்த்திப்போம் வாருங்கள்...



காத்தான்குடி, ஜனவரி 14/15: எனது இனிய நண்பர்களே,சகோதரர்களே புகைப்படத்தில் இருப்பவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை "லத்தீபா அப்துல் ஹமீட்" சுகவீனமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆறு நாட்களாக சுய நினைவின்றி இருக்கிறார்கள் இவர்கள் இரண்டு பிள்ளைகளின் தாயும் கூட அன்னார் குணமடைந்து தேகஆரோக்கியத்துடன் நீடூழி காலம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை ஐவேளை தொழுகையிலும்,தஹஜ்ஜத்திலும் பிராத்திக்குமாறு பணிவாய் வேண்டிக் கொள்கிறோம். யா அல்லாஹ் அன்னாருக்கு சுகத்தையும், ஆரோக்கியத்தையும், நீடிய ஆயுளையும் வழங்குவாயாக!

நன்றி 

சகோதரர் முஜா

இஸ்லாத்திர்கும் தீவிரவாதத்திர்கும் தொடர்ப்பில்லை என்பதை வலியுறுத்தி ஜெர்மனின் அனைத்து சமூக மக்களும் ஒன்று திரண்டு நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேரணி.


பிரான்ஸில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை முஸ்லிம் விரோதிகள் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பதர்கு கருவியாக பயன்படுத்திவரும் நிலையில்
ஜெர்மன் நாட்டை சார்ந்த அனைத்து மத மக்களும் ஒன்று திரண்டு பிரனாஸ் தாக்குதலுக்கும் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கிழக்கு ஜெர்மனில் உள்ள டிரெஸ்டென் (DRESDEN) நகரில் மிக பெரிய பேரணி ஒன்றை நடத்தினர.

இந்த பேரணியில் கிருத்துவர்கள் யுதர்கள் முஸ்லிம்கள் என 35 ஆயிரம் பொது மக்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி நடத்துவதர்கு உரிய அனைத்து உதவிகளையும் ஜெர்மன் அரசு முன் நின்று செய்தது பிரான்ஸ் தாக்குதலை இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் தொடர்ப்பு படுத்தும் ஊடகங்களுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்த அந்த பேரணி ஜெர்மனில் முஸ்லிமும் கிருத்துவரும் யுதரும் அண்ணன் தம்பிகளாகவே வாழ்கிறோம் எங்கள் ஒற்றுமையை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது இதே ஒற்றுமையையும் சகிப்பு தன்மையும் உலகெங்கும் தழைத்து ஓங்க வேண்டும் என்ப போன்ற கருத்துகளை கொண்ட பதாகைகளை போராட்ட காரர்கள் கையில் ஏந்தி வந்தனர்.

பிரான்ஸ் பிரச்சனைக்காக உலகில் வேறு எங்கும் இது போன்ற ஒரு பேரணி நடத்த படாத நிலையில் ஜெர்மன் மக்கள் முந்தி கொண்டு உலகிர்கு வழி காட்டியிருக்கிறார்.
ஜெர்மன் மக்கள் தொடங்கி வைத்துள்ள இந்த ஒற்றுமை கோசம் உலகெங்கும் எதிரொலிக்கட்டும் அதன் பலனாய் உலக மக்களை அமைதி தென்றல் தாலாட்டடும்.

முத்துப்பேட்டையில் 4 வருடமாக தேங்கி நிற்கும் சாக்கடை நீர். தொற்று நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.





முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளைகுளம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை சாலை இருப்பக்கமும் கழிவு நீர் வடிக்கால் கட்ட நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதிரடியாக அன்றே தினமே பணிகள் துவங்கியது. இரவு பகல் பாராமல் பணிகளை துவக்கிய பேரூராட்சி நிர்வாகம் என்ன காரணமோ பணியை பாதியில் நிறுத்தினர். அதனால் பணிகள் முழுமை பெறாமல் ஆங்காங்கே மட்டுமே பணிகள் நடந்து பாதியில் கிடப்பில் போடப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் இது வரை செய்து முடிக்கவில்லை. அதனால் பணி நடைபெற்ற இடங்களில் வரும் சாக்கடை நீர்கள் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. 

ஆனால் ஒதிக்கீடு செய்யப்பட்ட நிதி மட்டும் ஒப்பந்தக்காரருக்கு கிடைத்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தொவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்பது ஒரு பக்கம். ஆனால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த பணியால் நான்கு வருடமாக ஆங்காங்கே கழிவு நீர்;கள் தேங்கி வடிய வழியின்றி நிற்பது இப்பகுதியின் ஒரு கொடுமையான அவலமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் முக்கிய பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மத்தியில் தற்பொழுது 4 வருடமாக சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த அவல நிலையால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி பல்வேறு வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. 

இதனை சுகாதாரத்துறையும,; பேரூராட்சி நிர்வாகமும் கண்டுக்கொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் வடிய வழியின்றி திறந்து கிடக்கும் இந்த சாக்கடை நீரால் நோய்கள் பரவி வருவது ஒருபுறம் இருந்தாலும் அடிக்கடி திறந்து கிடக்கும் இந்த வடிக்காலுக்குள் மக்களும் வாகனங்களும் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் கூறுகையில்: நான்கு வருடத்துக்கு முன் முறைக்கேடாக போடப்பட்ட இந்த கழிவு நீர் வடிக்கால் திட்டத்தில் பெரும் அளவில் முறைக்கேடு ஏற்பட்டு உள்ளது. பணியை 15 சதவீதம் கூட முடிக்காமல் முழு பணத்தையும் கொள்ளையடித்து விட்டனர். 

இதனால் பாதிக்கப்படுவது இப்பகுதி மக்கள்தான். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வரை நூறு முறை புகார் தெரிவித்துவிட்டேன். எந்த பலனும் இல்லை. ஒரு முறை பேரூராட்சியில் தேங்கி நிற்கும் இந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்த கோரிய போது என் மீது போலீசில் புகார் கொடுத்து என் மீது நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் நான் தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறேன். இது வரை எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. சென்ற மாதம் கூட மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் கொடுத்தேன், பலனில்லை. செய்தியின்; மூலமாவது இதற்கு ஒரு தீர்வு ஏற்படும் என்று கடைசியாக நம்புகிறேன் என்றார். 

 நமது நிருபர்;

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

மவுத்து அறிவிப்பு: "K.M.S.ஜாகிர் உசேன்" அவர்கள்.






முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை ஆஸாத்நகர், மர்ஹூம் K.M. சுலைமான் அவர்களின் மகனாரும் K.M.S.சலீம் அவர்களின் சகோதரரும்மான, K.M.S.ஜாகிர் உசேன் இன்று (13-1-2015) மாலை 5 மணியழவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா நேற்று ஆசாத் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் கபுர் வாழ்க்கைக்கும் மறுமைக்கும் அல்லாஹ்விடம் துவாச்செய்யுங்கள்.




தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)