முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஜவாஹிருல்லாஹ் வந்த கார் விபத்துக்குள்ளானது :

தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக வரும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் கார் விபத்துக்குள்ளானது. இறைவனின் கிருபையால் பேராசிரியர் அவர்கள் நலமுடன் உள்ளார்கள். எந்த பாதிப்பும் இல்லை. காரை ஓட்டி வந்த டிரைவர் ஆதில் அவர்களுக்கு காது அருகில் லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நலமுடன் உள்ளார்கள்.

டி.ஜி.பி. ராமானுஜத்தை பொய்யராக்கிய போலீசார்!

சென்னை, அக்டோபர் 10: பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை''

மேற்கண்ட இந்த வரிகளை பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தமது முகநூல் பதிவில் போட்டிருக்கிறார்.எவ்வளவு எதார்த்தமான வரிகள் இவை.உண்மையில் மீடியாக்கள் இந்த விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் மருந்துக்கு கூட அவற்றிடம் ஊடக தர்மம் இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல் ஒருவித வன்மத்துடன் இந்த செய்திகள் எழுதப்படுகின்றன.

பிடிபட்ட மூவரும் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லை.இவர்கள் பயங்கரவாதிகள் என்று போலீஸ் இந்த நிமிடம் வரை நிரூபிக்கவில்லை.போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் வெறும் விசாரணை தான் மேற்கொண்டிருக்கிறோம்.பயங்கரவாதிகள் ,தீவிரவாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை.ஊடகங்கள் தான் சொல்லுகின்றன என்கிறார்கள்..பின்னர் எந்த அடிப்படையில் இந்த ஊடகங்கள் சர்வதேச பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்து காலையிலும்,மாலையிலும் புது புது செய்திகளை தரவேண்டும்?இப்படி வெளியிடும் செய்திகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா ஊடகங்களிடம்?ஊடகங்களிடம் கேட்டால் போலீஸ் தரும் செய்திகளை தான் நாங்கள் வெளியிடுகிறோம் என்கின்றன?போலீசும் ஊடகங்களும் சேர்ந்து நடத்தும் நாடகமா இது?

அக் 7, 2013 ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ஒரு செய்தியை பார்த்தால் டி.ஜி.பி. ராமானுஜம் பொய் சொல்கிறாரா அல்லது இந்த வழக்கை விசாரிக்கும் காவல் படை பிரிவுகள் பொய் சொல்கின்றனவா என்றும் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அல்லது போடப்போகும் வழக்குகள் பொய் என்று ஒரு தரப்பினரால் போலீஸ் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உன்மைதானா என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

தி இந்து நாளிதழில், வந்துள்ள அந்த செய்தி படி,போலீஸ் பக்ருதீனை வேலூர் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை போலீஸ் கஸ்டடியில் எடுப்பதற்காக சமர்ப்பித்த மனுவில்,

''கடந்த 2012 அக்டோபர் மாதம் வேலூரில் பா.ஜ.க. மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடியில் முருகன் என்ற முருகேசன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்குடன் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் போலீஸ் பக்ருதீன் ஒப்புக்கொண்டார். அவர் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து வெடி மருந்துகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது கூட்டாளிகள் குறித்து விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரை 13 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.''

போலீஸ் வாங்கும் வாக்குமூலத்தின் லட்சணம் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.ஆனால் இங்கே போலீஸ் சமர்பித்த மனு மிக அவசர கோலத்தில் எதையும் ஆராயாமல் சமர்பித்ருக்கிறது என்பதற்கும் இது நல்லஆதாரம்.வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டி,பரமக்குடி முருகேசன் ஆகியோரை கொலை செய்ததாக பக்ருதீன் வாக்குமூலம் தந்தார் என்று போலீசார் சொல்கிறார்கள்.ஆனால் இந்த இருவரையும் யார் கொன்றார்கள் என்பதை டி.ஜி.பி.ராமானுஜம் கடந்த ஜூலை 26 அன்று வெளியிட்ட அறிக்கையல் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்....
.
'வேலூரில் கடந்த 23.10.2012 அன்று பா.ஜக. மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல்– வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ. ராஜா, பிச்சைபெருமாள், தரணிகுமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது'

'பரமக்குடியில் கடந்த 19.3.2013 அன்று நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய் கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் இந்த கொலை நடந்திருந்தது. இது தொடர்பாக ராஜா முகம்மது, மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'

இப்போது சொல்லுங்கள் டி.ஜி.பி,ராமானுஜம் பொய் சொல்கிறாரா? பக்ருதீனை விசாரிக்கும் போலீசார் பொய் சொல்கிறார்களா? இனி டி.ஜி.பி.எது சொன்னாலும் அதில் பொதுமக்களுக்கு நம்பிக்கை வராது... காவல்துறை மட்டத்திலும்,அமைப்புகள்,கட்சிகள் மட்டத்திலும் பெரிதும் மதிக்கப்படுபவர் டி.ஜி.பி.ராமானுஜம்.சிறந்த அதிகாரியாவார்.இவருக்கு கீழ் நிலை அதிகாரிகளால் போற்றப்படுபவர்.இவர் பல உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரோல் மாடலாகவும் இருக்கிறார்.இப்போது சி.பி.ஐ.யில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரே நம்மிடம் ஒருமுறை ''எனக்கு ராமானுஜம் சார் தான் ரோல் மாடல்'' என்று சொல்லியிருந்தார்.இத்தனை சிறப்புகள் கொண்டதாலும்,சிறந்த
அதிகாரி என்பதாலும் தான் இவரது பதவியை நீட்டித்தார் முதல்வர்.பாவம் இன்னும் கொஞ்ச காலம் அவர் பதவி வகிக்க
இருக்கிறார்.அதற்குள் அவரது பெயரை டேமேஜ் செய்யும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.டி.ஜி.பி.யின் அறிக்கை

கேலிக்கூத்தாக்கி அவரை பொய்யராக்கியுள்ளனர் போலீசார்.இத்தனைக்கும் காரணம் பக்ருதீன் மீது எப்படியாவது ஏதாவது வழக்கை போட்டு விடவேண்டும் என்கிற போலீசின் வன்மம் கொண்ட முனைப்பு என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

தவிர,பண்ண இஸ்மாயில்,பிலால் மாளிகை பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந்தப்படுத்தி தேடிவந்த போலீசார், இப்போது அதை பற்றி பேசாமல் இவர்களையும் சேலம்.ஆடிட்டர் ரமேஷ்,இந்து முன்னணி நிர்வாகி வேலூர்

வெள்ளையப்பன் கொலை வழக்கில் சேர்த்து விட துடிக்கிறது.அதன் பின்னால் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பிலும் சேர்ப்பார்கள்.
ஆதாரம் பற்றியோ அப்பாவிகளின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பது பற்றியோ இவர்களுக்கு என்ன கவலை?

நாம் இப்போதும் சொல்கிறோம்,பக்ருதீன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தரட்டும்.இஸ்லாமியார்களாக இருந்து கொண்டு இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற வகையில் அவர்கள் மீது நமக்கு வெறுப்பு தான் ஏற்படும்.ஆனால் அவர்கள் அப்பாவிகளாக இருந்து விட்டால் ...? இந்த சிந்தனை போலீசாரின் நடவடிக்கைகளால் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லையே!

பதவி உயர்வு,விருதுகளுக்காக மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் தமது பெயரும் இடம் பெற்று விடவேண்டும் என்ற சுயநலம் தான் போலீசாரிடம் விஞ்சி நிற்கிறது என்று சொல்வதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்.

எனது பார்வையில் போலீஸ் பக்ருதீனோ அவரது குழுவினரோ அல்ல;போலீசார் தான் பயங்கரவாதிகளாக தெரிகிறார்கள்!ஊடகங்களும் தான்!

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)