முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டைக்கு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்


முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் அவர்கள் 9.2.13 மதியம் 3 மணியளவில் வருகை புரிந்தார்கள். அவருக்கு சகோதரர் ஜே. ஷேக் பரீத் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரமுகர் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

சில மாதங்கள் முன் நடந்த சகோதரர் ஷேக் பரீத் திருமணம் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தில் மத்திய அமைச்சர் அவர்களால் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் தற்போது வந்து அந்த குறையினை நிவர்த்தி செய்து விட்டார் அமைச்சர் அவர்கள்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

அன்மை செய்தி : முத்துபேட்டை சுகர்னோ மரணம் :


முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டை – கல்கேணித் தெரு மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனாரும், மல்லிப்பட்டினம் மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ஜமால், சலீம்கான், முகமது ரபிக் ஆகியோர்களின் மச்சானும், துளசியாப்பட்டினம் ஹெச். ஹாஜகான் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் மு. முகம்மது காசிம், முகம்மது அலி ஆகியோர்களின் மருமகனும், ராஜா சுகர்னோ, ஃபைசல் சுகர்னோ ஆகியோர்களின் தகப்பானருமாகிய முகம்மது ஹெச். சுகர்னோ அவர்கள் 11.2.13 காலை 4 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள். (“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்”).
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பவர் :
ராஜா சுகர்னோ
ஃபைசல் சுகர்னோ


நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை வந்தடைந்தத நீதி கேட்டு நெடும்பயண ஊர்திமுத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு வருகை வந்த  இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் பாக்கர் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி விட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாத் எந்த காலக்கட்டத்திலும் தேர்தலில் போட்டியிடாது வருகிற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சி இட ஒதுக்கீட்டில் உறுதியாக கூறுகிறார்களோ. அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் உண்மையான குற்றவாளியாக இருந்தால் கசாப், அப்சல் குரு ஆகியவர்களை தூக்கில் போட்டதை நாங்கள் வரவேற்கிறோம். 

நாட்டிற்காக துரோகம் செய்வபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது பா.ஜ.க அரசாக இருந்து இருந்தால் இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையான ஆர்.எஸ்.எஸ். கொள்கை படைத்தவர்களான காங்கிரஸை வைத்து கச்சிதமாக முடித்து விட்டது பா.ஜ.க. எல்லாம் அமைச்சர் ஷிண்டேவை வைத்து நாடகம் ஆடிவிட்டது அரசு.

பாபர் மஸ்ஜித் இடத்தில் பா.ஜ.க அரசு இருந்த போது கோயில் கட்ட நினைக்க வில்லை ஆனால் காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் விசயத்தில் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்து விட்டது அப்படி இல்லையென்றால் உண்மையான குற்றவாளியான அத்வானியை தூக்கில் போட்டு இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்ற மோடியையும் தூக்கில் இட்டு இருக்க வேண்டும் மோடி நரகத்தில் இருக்க கூடியவர் பிரதமருக்கு ஒருகாலும் தகுதியில்லாதவர் இவ்வாறு கூறினார்.

தொகுப்பு:

ஜெ. ஷேக் பரீது 


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)