முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு வருகை வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் பாக்கர் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி விட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாத் எந்த காலக்கட்டத்திலும் தேர்தலில் போட்டியிடாது வருகிற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சி இட ஒதுக்கீட்டில் உறுதியாக கூறுகிறார்களோ. அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் உண்மையான குற்றவாளியாக இருந்தால் கசாப், அப்சல் குரு ஆகியவர்களை தூக்கில் போட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
நாட்டிற்காக துரோகம் செய்வபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது பா.ஜ.க அரசாக இருந்து இருந்தால் இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையான ஆர்.எஸ்.எஸ். கொள்கை படைத்தவர்களான காங்கிரஸை வைத்து கச்சிதமாக முடித்து விட்டது பா.ஜ.க. எல்லாம் அமைச்சர் ஷிண்டேவை வைத்து நாடகம் ஆடிவிட்டது அரசு.
பாபர் மஸ்ஜித் இடத்தில் பா.ஜ.க அரசு இருந்த போது கோயில் கட்ட நினைக்க வில்லை ஆனால் காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் விசயத்தில் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்து விட்டது அப்படி இல்லையென்றால் உண்மையான குற்றவாளியான அத்வானியை தூக்கில் போட்டு இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்ற மோடியையும் தூக்கில் இட்டு இருக்க வேண்டும் மோடி நரகத்தில் இருக்க கூடியவர் பிரதமருக்கு ஒருகாலும் தகுதியில்லாதவர் இவ்வாறு கூறினார்.
தொகுப்பு:
ஜெ. ஷேக் பரீது

0 comments:
Post a Comment