
முத்துப்பேட்டை, ஜூன் 22: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தபட்டு இருக்கும் முத்துப்பேட்டை சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் காளிதாஸ் ஆகியோர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய ஆரசும் , தமிழக அரசும் முயற்ச்சி எடுக்க வலியுறுத்தி
மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்து இன்று 22.06.2013 காலை 10 மணி அளவில் முத்துப்பேட்டையில் முழு கடை அடைப்பு மற்றும் மத்திய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து கட்சிகள்,வர்த்தக கழகம்,வர்த்தக சங்கம்,பெரியகடை தெரு வர்த்தக சங்கம்,ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளார் நலச்சங்கம்(பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம்,பங்களவாசல்),கார்,வேன்,லாரி,டிரேக்டர் ஒட்டுனர் உரிமையாளார் சங்கம்,அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
தகவல்: MM .பைசல் BBA
0 comments:
Post a Comment