
நாகூர், பிப்ரவரி 03/2016: நாகை மாவட்டம் நாகூரில் (INTJ) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பொது கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நாகூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் மூன்று முறை சந்தித்தபோதும் நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள் கோரிக்கைகளில்...

அமெரிக்க, பிப்ரவரி 03/2016: அமெரிக்க அதிபரான பின்னர் முதன் முறையாக முஸ்லிம் வழிபாட்டுத்தளமான மசூதிக்கு செல்கிறார் ஒபாமா. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க முஸ்லிம்கள் தாங்கள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறும் வேளையில் ஒபாமாவின் இந்த மசூதி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பால்டிமோர் இஸ்லாமிக் சொசைட்டிக்கு சென்றுவிட்டு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அவர் செல்கிறார்....

முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே புதுப்பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இதன் அருகே இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 27 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திரியெம் அஜீஸ் என்பவர் திரியெம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு தனது ஓட்டலை திரியெம் அஜீஸ் அவரின் உறவினரான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு ஹாஜா மைதீன்...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 03/2016: முத்துப்பேட்டையில் நகர தி.மு.க சார்பில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் அவலங்களை விளக்கிய பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் ஹனிபா நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளரும் நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை...

துபாய், பிப்ரவரி 03/2016: இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டி சார்பாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் செயல்வீரர்கள் ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் துபை தேராவில் உள்ள மலபார் ரெஸ்டாரண்டில் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்தை இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் துபை மண்டல தலைவர் யூசுஃப் தலைமையேற்று துவங்கி வைத்தார். இந்தியல் கல்ச்சுரல் சொஸைட்டின் பொது செயளாலர் பத்ரு ஜமான் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக...