
இலங்கை, ஏப்ரல் 20௦: இலங்கை நாட்டில் சுமார் 60 வருடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான தம்புள்ள ஜும்மாஹ் பள்ளிவாசல் பேரினவாத சக்திகளான புத்தமத்தினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. மேலும் இன்று வெள்ளி கிழமை ஜும்மாஹ் தொளுகைக்காக சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளியில் வர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளி வாசலை முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மேற்கூரை மட்டும் பள்ளியில் சிறு...