முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


துபையில் வாழும் முத்துபேட்டை மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தி!துபாய் அக்டோபர் 01 : அஸ்ஸலாமு அழைக்கும், அன்பார்ந்த முத்துப்பேட்டை சஹோதரர்கலே இன்ஷா அல்லா இன்று மலை 6 மணியளவில், முத்துப்பேட்டை நண்பர்கள் தங்கியுள்ள இடமான துபாய் "ஹோர் அல் ஆன்ஸ்" ஆல் குரைர் பில்டிங்கில் ரூம் நம்பர் 217 லில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக, யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பன பல்வேறு கருத்துகளை ஆலோசனை செய்ய இருப்பதால் அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் முத்துப்பேட்டை நலன் விரும்பும் சகோதரர்கள்.
Source from muthupettaiexpress
நமது நிருபர்

S.ஷாகுல் ஹமீது (துபாய்)

உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் மன்றத்தை சந்திப்பது என SDPI முடிவு: மா.செ. பேட்டி!!!முத்துப்பேட்டை 01 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசிலனையில் தாக்கல் செய்த அனைத்து மக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நபர் மட்டும் வாபஸ் பெற்றுள்ளார், அதன் அடிப்படையில் தற்போது 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலைத்த SDPI யின் மாவட்ட தலைவர் ஜனாப் தமரே ஆலம் அவர்கள் அளித்த பேட்டி பின் வருமாறு, முஸ்லிம்களில் இருக்கக் கூடிய நபர்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தனர். அதில் தகுதியான வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்குவதை விட்டு விட்டு கடந்த 5 ஆண்டுகளில் சட்ட மன்ற தேர்தலில் அனைத்து மக்களால் துடைத்தெரியப்பட்ட முத்துப்பேட்டை பேரூராட்சியை நிர்வாகித்து மக்கள் பணத்தை சூறையாடிய தி.மு.க.விற்கு ஆதரவான நிலையை மக்கள் மீது திணித்தனர், அதனால் இந்த கருத்துக்கு SDPI வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தலித்துகள், கிருஸ்தவர்கள், இன்னும் குறைவாக இருக்கக் கூடிய பல்வேறு சாதியினரை ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து அடக்கு முறைக்கு உள்ளக் கப்பட்டு வருகின்றனர். மேலும் கட்சி தனக்கு போட்டியிட வாய்ப்பு தந்ததை வேட்பாளர் தனது கட்சி தலைவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் அவல நிலையம் நடந்தேறியது என்பது மிகவும் வேதனைக் குரிய விஷயம், அல்லாஹ் விற்கு அடிபணிய வேண்டிய நாம் இவர்களின் காலில் விழுவது மிகவும் வேதனை. (muthupettai express) இதிலிருந்து மீட்டெடுத்து ஒட்டு மொத்த மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகள் கிடைபதற்காக தேர்தல் களத்தில் SDPI இறங்கியுள்ளது. எனவே முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் ஆதரவு தந்து வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். SDPI யின் மாநிலச் செயலாளர் ஜனாப்.A. அபூபக்கர் சித்திக் உடனிருந்தார்.
Source From Muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

TNTJ நடத்திய மாபெரும் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்!!!


சேதுபாவாசந்திரம், அக்டோபர் 01 : புதுபட்டினம் மஸ்ஜிதுர் ரஹ்மான் புது பள்ளி வாசலைத் தாக்கிய காவி தீவிர வாதிகளை உடனே கைது செய்யக்கோரியும், அதற்கு உறுதுணையாக செயல் பட்ட சேது பாவாசத்திரம் காவல் துறை ஆய்வாளர் ரவீந்திர பூபதியை பனி நீக்கம் செய்யக் கோரியும், TNTJ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) மாநில தலைமையகம் மாபெரும் முஸ்லிம்களின் காவல் நிலையம் முற்றுகை போராட்டத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் (30.09.2011) சுமார் 5 மணியளவில் திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் சுமார் 15 ஆயரம் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் சேதுபாவா சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட அதிகரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் காவி தீவிர வாதிகளின் அட்டூளியத்திருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் மேலும் இது போன்ற கோசங்களை எழுப்பியது. இந்த கோசம் விண்ணை பிளக்க வைத்தது.muththuppettai express இது குறித்து அப்போது அங்கு பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்,ஜனாப். பக்கீர் முஹம்மத் அல்தாபி பேசும் போது, நாங்கள் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்றும் இந்திய மண்ணிற்கு சொந்தகாரவர்கள் என்றும், கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரியையும், காவி தீவிர வாதிகளையும் உடனே நடவடிக்கை எடுக்க வில்லை என்றாள் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை இந்த TNTJ தலைமையகம் அறிவிக்கும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன்.
Source from muththuppettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

நமது நிருபர்

ஹாஜா மைதீன்

முத்துப்பேட்டையில் 7 வது வார்டுக்கு சுயேட்சையாக போட்டி இடும் கருதப்ப என்கிற முஹம்மத் சித்திக்:
முத்துப்பேட்டை, அக்டோபர் 01 : திருவர்ரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 7 வது வார்டுக்கு போட்டியிடப் போவதாக கருத்தப்ப என்கிற முஹம்மத் சித்திக் தெருவித்துள்ளர். இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், நான் எந்த அரசியல் கட்சிகளுக்கு விலை போக மாட்டேன் என்றும், 7 வது வார்டு மக்களுக்குகாக கடுமையாக உழைப்பேன் என்றும், அவர்களின் தேவையை நிறைவேற்றி தருவேன் என்றும் அவர் தெருவித்தர். ,மேலும் சிமென்ட் சாலை, தார் சாலை அமைக்க போராடுவேன் மேலும் இவைகளைக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை என்றும் அவற்றைஇ முறையாக செயல் படுத்துவேன் என்றும் அவர் தெய்ருவித்தர். கிட்டங்கி தெருவில் போடப் பட்ட அந்த சிமன்ட் சாலை மக்களுக்கு பயன் தரக் கூடியது இல்லை என்றும் முழுக்க முழுக்க அந்த சாலை தனது சம்பாத்தியத்தை இலக்காக கொண்டுதான் போடப் பட்டுள்ளது என்றும் அவர் தெருவித்தார். அரசு பணத்திற்காக லாபம் தேடும் ஒரு அரசியல் வாதி நான் அல்ல என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன்.பஞ்சாயத் போர்டு கோட்டம் கூடும் போதெல்லாம் 7 வது வார்டு முக்கியஸ்தர்களை அழைத்து அவர்களின் ஆலோசனைகளை ஏற்று அந்த கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் வீடு வீடாக சிலிண்டர் கொடுப் பதற்கு என்ன என்ன வழிமுறைகள் இருக்கின்றதோ அவற்றை மக்களின் ஒத்துளைப் போடு தொடர்ந்து அறவழி போராட்டங்களின் மூலம் முயற்ச்சி செய்வேன் என்றும் அவர் தெருவித்தார். (source from muththuppettai எக்ஸ்பிரஸ்)
குறிப்பு: மருத்துவம், ரெத்தம், ஆம்புலன்ஸ், இரவு நேர வாகன ஏற்பாடு, தொழில் பற்றிய கருத்துரை, மேலும் எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம் செய்ய உள்ளதாகவும் அப்போது அவர் தெருவித்தார். இதனை பற்றிய தகவல் தெரிய பொது மக்கள் அழைக்க வேண்டிய தொலை பேசி எண் : 9171929248

source from muththuppettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)