
சென்னை, ஜனவரி 18: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கருணாநிதியுடன் சந்திப்பு
கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு...