முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பெண்களுக்கான வாராந்திர பயான்-- ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர் !!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2014 அன்று வாரந்திர பெண்கள் பயான் தமானியா தோப்பில் உள்ள சகோதரர் சமது அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது


பெண்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு வெளியே பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்து சொற்பொழிவு நடத்தப்பட்டது பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்

அதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் இதோடு பல சிறுமிகளும் ஆர்வத்துடன் உரைநிகழ்த்தினார்கள்

இதில் கிருஸ்த்துவ மதத்தை சேர்ந்த பழனி அவர்களின் மகள் காயத்திரி அவர்கள் தானாக முன்வந்து நான் இதுவரை அறிந்த இஸ்லாத்தை பற்றிகூறுகிறேன் என்று மேடையில் ஏறி மிக அருமையாக இஸ்லாத்தை பற்றி விளக்கிகூறினார்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் 10–ந்தேதி அறிவிப்பு--மீண்டும் களத்தில் இரக்கபடுவாரா தமீமுன் அன்சாரி ?சென்னை, மார்ச். 6–
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் வருகிற 10–ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் அந்த கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது.
கடந்த பாராளு மன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் தனித்து போட்டியிட்டது. இதனால் அந்த கட்சி இந்த முறையும் அதே தொகுதியை தேர்வு செய்துள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பாரதிமோகன் போட்டியிடுகிறார்.

முஸ்லீம் லீக்கிற்கு வேலூர் --முத்துபேட்டை அப்துல் ரஹ்மான் MP மீண்டும் போட்டியா?

வேலூர், மார்ச்.6–
வேலூர் தொகுதியில் மீண்டும் அப்துல் ரகுமான் போட்டி?வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக அப்துல்ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்க தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து ஒப்பந்த அறிக்கையில் கருணாநிதி முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கையெழுத்திட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் வேலூர் தொகுதியில் ஏற்கனவே காதர் மொய்தீன், அப்துல் ரகுமான் ஆகியோர் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றுள்ளனர். 3வது முறையாக அக்கட்சி வேலூர் தொகுதியில் களத்தில் இறங்கியுள்ளது.
கட்சியில் வேட்பாளர் தேர்வு மும்முரமாக நடக்கிறது. கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் போட்டியிட சாத்தியமில்லை எனக் கூறுகின்றனர்.
இதனால் அப்துல் ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர் பிரமுகர்கள் தொடர்பு, வேலூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிந்தவர் அப்துல்ரகுமான், மேலும் அவரது சாதனைகளை கூறி ஓட்டு கேட்டால் எளிதில் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என கட்சி மேலிடம் கருதுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 8ந் தேதி நடக்கிறது. இதில் வேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அப்துல் ரகுமான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:–

அப்துல் ரகுமான் – 3,60,474, எல்.கே.எம்.பி.வாசு (அ.தி.மு.க.) – 2,53,081, சவுகத் செரீப் (தே.மு.தி.க.) – 62,696, ஏ.கே.ராஜேந்திரன் (பா.ஜ.க.) – 11,184.

5 தொகுதிகளை கேட்டு அடம் பிடித்த திருமாவளவன் --2 தொகுதிகளை கொடுத்து விசுவாசத்தை நிரூபித்த கருணாநிதி !!

சென்னை, மார்ச். 6–
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5 தொகுதிகள் கேட்டு கடிதம் கொடுத்திருந்தார்.


இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அப்போது சிதம்பரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தினார்.

ஆனால் 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் திருமாவளவன் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளையாவது ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த தொடங்கினார். இதனால் நேற்று உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டது. எந்த முடிவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த திருமாவளவன் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.

இதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமாவளவனுடன் இரவில் போனில் பேசியதாக தெரிகிறது. இதில் 2 தொகுதிகளை பெற திருமாவளவன் சம்மதித்து விட்டார்.
அவருக்கு சிதம்பரம், திருவள்ளூர், தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று அறிவாலயத்தில் இதற்கான உடன்பாடு ஏற்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)