முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை கலவரம் -இந்துமுன்னனிக்கு SDPI பொதுசெயலாளர் நிஜாம் முஹைதீன் எச்சரிக்கை !!

கடந்த 03.09.2014 அன்று முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வணிக வளாகம் மற்றும் வீடுகளின் மீது சமூகவிரோதிகள் கல், உருட்டுக்கட்டை, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சதி திட்டம் தீட்டி மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், இந்து முன்னணி மற்றும் பிஜேபி கட்சியினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு தகுந்தாற்போல் இரவு நேரங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதிக்குள் ஊர்வலம் நடத்தி வன்முறையை தூண்டி வருகின்றனர். ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளின் மீது கற்களை வீசுவதும், ஆபாசமான முறையில் நடந்துகொண்டு, மத வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வன்முறை நடவடிக்கைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்த கலவர கும்பலலுக்கு தலைமை ஏற்று நடத்திவருபவர் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு என்ற முருகனாந்தத்தம் ஆவார்.

ஆகவே கருப்பு முருகானந்தம் தலைமையில் வன்முறையை நிகழ்த்தும் சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, முத்துபேட்டையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டி, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் குழு புகார் மனுவினை அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கையினை மேற்க்கொள்வதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களையும் மற்றும் முத்துபேட்டை ஊர் ஜமாஅத் நிர்வாகிகளையும் நேரில் சென்று சந்தித்து சம்வத்தின் உண்மை நிலைமையை கண்டு அறிந்தனர்.

இந்த நேரடி ஆய்வில் திருவாரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் M.A.லத்தீப், மாவட்ட பொதுச் செயலாளர் நைனா முஹம்மது, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் குழு மற்றும் முத்துபேட்டை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)