
முத்துப்பேட்டை, ஜனவரி 17: முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அற்புதம் என்ற தனியார் டவுன் பஸ் சென்று வருகிறது. வழக்கம் போல் நேற்று பகல் 1 மணிக்கு முத்துப்பேட்டையிலிருந்து புறப்பட ஆயத்தமாகி இருந்தது. அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் கடும் குடி போதையில் ஏறி உள்ளார். நடத்துனர் சுதாகரிடம் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துவரங்குறிச்சிக்கு டிக்கெட்டும் எடுத்து உள்ளார். அவர் இறக்கும்...