முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


பாஜக வினர்தான் என்னை வெட்டினார்கள்; வெற்றி பரபரப்பு பேட்டி:


முத்துப்பேட்டை, ஜூலை 30: விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  திருவாரூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் வெற்றி. இவருக்கு  இஸ்லாமிய இளைஞர்களின்  பழக்க வழக்கம் அதிகம் .இவர் மர இழைக்கும் ஆசாரி தொழில் செய்து வருகிறார். கடந்த  5 ஆம் தேதி 4 பேர் கொண்ட மதவெறி கும்பல் வெற்றியை அரிவாளால் மிக கொடூரமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.

இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்த வெற்றியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாதாகவும், ஆனால் காவல்துறை, தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்,முதலில்முதல் கட்ட போராட்டமாக  சாலை மறியல் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை காவல் துறை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக  தெரிகிறது.

கொலைவெறி கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள், தனது இரண்டாம் கட்ட போராட்டத்தை கையிலெடுத்து  "மயான கொட்டகையில்" சாகும் வரை உண்ணாவிரத  போராட்டத்தை மேற்கொண்டனர் . உண்ணாவிரத போராட்டம் இருந்தவர்களை வழுக் கட்டாயமாக காவல்துறை வெளியேற்றியது.

இரண்டுகட்ட போராட்டங்களிலும் நீதி கிடைக்காத காரணத்தினால் மனவுளைச் சலடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் இரண்டு பேர்  செல் போன் கோபுரத்தின்  உச்சிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர்.

நடைபெற்ற அத்தனை சம்பவங்களின் உண்மையும், பின்னணியையும் பற்றி   நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் விளக்கியுள்ளார் வெற்றி.

வெற்றியின் பரபரப்பு பேட்டி விரைவில் வீடியோ வடிவில் காணத் தவறாதீர்கள்.

சந்திப்பு: ஜே: ஷேக்பரீத்

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "கொய்யா" முஜாஹிதீன் அழைப்பு...முத்துப்பேட்டை,ஜூலை 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

M. முஹம்மது முஜாஹிதீன் (ஆலிம்) ஸலாஹி..
Managing Director of Nana Motors 

முத்துப்பேட்டையில் இந்துக்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி- ஆத்மநாதன், வீரசேகரன் ஆகியோரின் மனிதநேயம்!!!


முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் கட்சியை சார்தவர்கள் தற்பொழுது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஒரு வணிக நிகழ்ச்சியாகவும், முஸ்லிம்களை ஏமாற்றும் நிகழ்ச்சியாகவும் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில்,  இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் சேர்ந்து இஸ்லாமியர்களுக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தியிருப்பது மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில்இருந்தது .

முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்தவர் நடுப்பண்ணை என்கிற ஆத்மநான். அதே போல் உப்பூரை சேர்ந்தவர் வீரசேகரன் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக தமிழக மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் G. பஷீர் அஹமது அவர்கள் "இஸ்லாமும் மனித நேயமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், இளைஞர்களும், பெரியோர்களும் பாகுபாடின்றி திறந்த மனதுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். சரியாக 6:40 மணியளவில் கொய்யா மகாலில் உள்ள முதல் தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் நோன்பு திறப்பதற்காக கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.

 கீழ்தளத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக பேரிதம்பழம் , நோன்பு கஞ்சி, கடல் பாசி, கேசரி, சமூசா, போன்ற உணவுப்பொருட்கள் வரிசையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நோன்பு திறந்தவுடன் இங்கு மக்ரிப் தொழுகையும் நடைபெற்றது. அதன் பின்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களான ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன்  ஆகியோரை அனைவரும்  மனமார வாழ்த்தி ஆர தழுவி இருவரையும் இறைவனிடத்தில் பிரார்த்தனை  செய்ததாகவும் கூறினார்கள். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகிய இருவரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு கூட்டாக அளித்த பேட்டி பின்வருமாறு: 

எங்களுக்கு இந்து நண்பர்களைவிட இஸ்லாமிய நண்பர்கள் தான் அதிகம் என்றும், நான் வசித்து வரும் ஜாம்புவோனோடை பகுதியில் ஒரு சிலர் மத துவேசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என்றும், நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அவர்களுக்கு பாலூட்டி வளத்தவர் ஓர் இஸ்லாமிய தாய் ஆய்ஷா பேகம் என்பதை நாங்கள் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். என் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாமியர்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.மாற்று மத சகோதர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 500 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


நேரடி களத்தொகுப்பு :ஜே:ஷேக் பரீத் 

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி: துபாயில் கோலாகலம்...
துபாய், ஜூலை 27: முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய 4-ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள அல் தவார் பார்க்கில் மிக கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நமதூரை சேர்ந்த நண்பர்கள் அபு தாபி, ஷார்ஜா, அஜ்மான், அலைன், ராசல் கைமா, உம்முல் குயிம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து முஹல்லா வாசிகளும், வெளியூர் வாசிகளும் தங்களுடைய சிரமத்தை பொருட் படுத்தாமல் இந்த நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி காட்டிட வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் இப்தாரின் போது பழம் மற்றும் கனி வகைகள், ஜூஸ் வகைகள், சமூசா, நோன்பு கஞ்சி, ஆகியவைகள் வழங்கப்பட்டது. தொழுகைக்கு பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் இது போன்ற நிகழ்ச்சியை வருடம் வருடம்  நடத்த வேண்டும் என்றும், மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தான் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து நண்பர்களின் ஒற்றுமை ஓரணிக்கு வரும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியின் போது எதாவது சிறப்பு பயன்கள் ஏற்பாடு செய்திரிக்கலாம் என்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மூன் லைட் கிரிக்கெட் அணியினர், கடந்த நிகழ்சிகளில் அவ்வாறு செய்திருந்தோம் என்றும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து இயக்க சகோதரர்களும், அனைத்து சங்க சகோதரர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும் போது யாரையும் மனம் நோகும் படி செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் பயான் வைக்கவில்லை என்றும், மேலும் இவற்றை நாங்கள் நடுநிலையாக நடத்த வேண்டும் என்று கமிட்டி மூலம் முடிவு செய்து அமைதியான முறையில் நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

இது போன்ற நிகழ்ச்சியானது வருடம் வருடம் நடைபெற வேண்டும், இதற்காக வல்ல இறைவனிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பில் பிரார்த்திப்போம் என்றும், நமது வாசகர்களுக்கும் அவற்றை எடுத்துரைத்து துவா செய்ய வலியுருத்தும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள:

K.M. Riyaz : 00971- 50 253 5563

Mohammed Mahadeer: 00971 - 50 427 7145

Shaik Dawood (Raja): 00971 - 52 901 0740

Thameem: 00971 - 50 496 2324


நேரடி களத்தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ்.
MBA., MA. (Journalism & Mass Communication)

மேலும் தொடர்புக்கு: public.mttexpress@gmail.com...துபாயில் உள்ள சில நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது..
துபாய், ஜூலை  24: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு துபாய், ஷார்ஜாஹ், அபுதாபி ஆகிய இடங்களுக்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. 

1)  3D VISUALIZER (sHARJAH)
      Mail to your CV: 360intdesign@gmail.com
2)  UNIOR ACCOUNTANT 1-2 YEARS EXPERIENCE 
     Who has experience in Tally software,
     Salary: 1,500 - 2000
     Mail to your CV: sbmaaccountsser@accamail.com, priyanthisoloman@yahoo.com 

3)  ACCOUNT CUM ADMINISTRATION (Abu Dhabi)
     For a Trading Company in Abu Dhabi 
     Mail to your CV: rectradition@gmail.com.

4)  URGENTLY REQUIRED ACCOUNTS ASSISTANT 
     A Fruits and Vegetables Company in Dubai (Aweer)
     Looking for a accounts to do the data entry in tally ERP9 the candidates 
     should be immediately available to join. 
     Salary: from 3,000
     Mail to your CV: hr.foodnetwork@gmail.com

5) CCTV CAMERA AND PABX ENGINEER VACANCY IN (Abu Dhabi)
     Minimum 3 years experience like cctv, DVR connection 
     Mail to your CV: nelsonengineers1@gmail.com

6)  SITE SUPERVISOR - CIVIL ENG.(DIP DUBAI)
     Civil engineering degree with DM approval 4 years exp. + driving license 
     Salary: from 5,000 - 6,000
     Mail to your CV: madhu@golden-link.com
     mobile #: 050 674 3160.

7) JUNIOR WEB DEVELOPER : ASP, .NET, C#
     2 Years of experience in web development, specially CMS development 
     Skills: ASP, .NET, C#, SQL SERVER, XML, XHTML/HTML, Jquery, CSS.
     please mention your expected your salary and your online projects in CV,
     otherwise your cv will be rejected. 
     Mail to your CV: info@hopejewellery.com
     Contact #: 04 225 8111.

8)  LOOKING FOR ACCOUNT WITH 0-3 YRS EXPERIENCE
      Basic for all Account known even balance sheet also
      Salary from: 3,000 - 3,500
      Mail to your CV: recruitment@anmgroup.ae

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ் 
      
     
  
      

ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர் பார்ப்பது என்ன?

உலகம், ஜூலை 26: இரண்டு வருடம்மூன்று வருடம்நான்கு வருடம்சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்துவெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
 இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில்
கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.

இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.

.பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தைஅர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.

பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.]

 ஆலிமாக்கள் என்றால் யார்?
இரண்டு வருடம்மூன்று வருடம்நான்கு வருடம்சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.
1. தாய்தந்தைஅண்ணன்தம்பி என்று குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் வீட்டை விட்டு விடுதிகளில் தங்கவேண்டிய கட்டாயக் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
2. ஒரு கைக்குட்டையைக்(கர்ச்சிப்) கூட துவைக்கத் தெரியாத காலத்தில் தங்கள் ஆடைகள் அனைத்தையும் தாங்களே துவைக்க வேண்டிய நிலை.(ஆண்களும் இதே கஷ்டத்தை அனுபவித்தாலும் பெண்கள் படும் கஷ்டத்திற்கும் ஆண்கள் படும் கஷ்டத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகிறது).
3. பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தைஅர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.
4. வீட்டில் எத்தனையோ விஷேசங்கள் நடந்தாலும் இவர்கள் அத்தனையையும் தவிர்ந்து கொள்ளும் ஒரு நிலை.
இப்படி பல தியாகங்களைச் செய்துதான் இந்த ஆலிமாச் சகோதரிகள் தங்கள் மார்க்கப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கும் இந்தச் சகோதரிகள் தங்கள் படிப்பு முடிந்தபின் என்ன நிலையில் இருக்கிறார்கள்?
மார்கத்தில் அவர்களின் நிலை என்னவாகிறது?
அவர்களின் எதிர்கால கணவு என்னாகின்றது?
குடும்ப வாழ்க்கைக்கும் இஸ்லாமிய நெறிக்கும் தொடர்பு இருக்கிறதா?
திருமணத்தின் பின் இந்தச் சகோதரிகளின் நிலை மாற்றம் என்னஎப்படி அமைகிறது?
ஆடை விஷயத்தில் இவர்களின் நடை முறை செயல்பாடு எப்படி அமைகிறது?
மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்லும் நிலை இருக்கிறதாஇல்லையா?
அதிகமான ஆலிமாக்களை தஃவாக் களத்தில் காணமுடியவில்லையே அது ஏன்?
ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்னஉலகவரலாற்றை கொஞ்சம் பின் நோக்கிப் பார்த்தால் இந்த உலக மக்களின்முன்னேற்றத்திற்கு ஆண்களுக்கு சமனாக பெண்கள் செய்த சேவைகள் கண்முன் கொண்டு வந்து நிருத்தப்படும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடங்கிநாம் வாழும் இந்தக் காலம் வரை இந்த உலகத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருப்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் பெண்களின் நிலை என்ன?
பெண் என்றால் போதைக்காக பயண்படுபவள் என்ற மாயையை உடைத்தெரிந்தது இஸ்லாம்.
பெண்களுக்கும் ஆண்மா உண்டென்று உலகுக்குக் காட்டியது இஸ்லாம்.
வீட்டினுல் முடங்கிக் கிடந்தவர்களை உத்தமர்களாக இந்த உலகுக்கு படம் பிடித்துக் காட்டியது இஸ்லாம்.
பெண்கள் சமுதாயத்தில் இடம் பிடிக்கக் கூடாது என்று பல மார்கங்களும்,மதங்களும்சித்தாந்தங்களும் கருத்துச் சொன்ன நேரத்தில்ஸஸ..
பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று பெண்விடுதலைக்கு வித்திட்டது இஸ்லாம்.
வீடுகணவன்பிள்ளைகள் என்றிருந்தவர்களை கல்வித் துறையில் கல்லூரி வரை உயர்தியது இந்த இஸ்லாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய பெண்களின் கல்வி நிலைஒழுக்கம்,நன்நடத்தைகள் என்று அனைத்தும் கேள்விக்குறியாகியிருப்பதை நாம் காண முடிகிறது.
 நாங்களும் சாதித்துக் காட்டுவோம் :
ஆண்கள் கூட கல்வியைப் பற்றிக் கண்டு கொள்ளாத இக்காலத்தில் பெண்கள் தங்கள் கல்விக்காக செய்யும் தியாகங்கள் அதிகம்.
இந்த தியாகங்களை செய்வதற்கு அவர்களுக்கு பின்னனியாக இருப்பது இரும்புக் கோட்டையின் பலத்திற்கு நிகரான ஒரு எண்ணம் தான்.
அதாவது நாங்களும் சாதித்துக் காட்டுவோம் எங்களாலும் முடியும் எங்களை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை நாங்களும் கல்விக்குவித்திட்டவர்கள் தான் இது தான் ஆலிமாவாக மாறுவதற்கு அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முதல் எண்ணம்.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களாஎன்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெருவார்கள். (அல்குர்ஆன் 39:09)
கல்வியை கற்பதில் எங்களுக்கும் தகுதியுண்டு ஜாஹில்யத்தைதுடைத்தெரிந்த நபிக்கு இறக்கிக் கொடுக்கப்பட்ட வேதத்தில் கற்றவர்களுக்குகல்வி கற்காதவர்களை விட மிகப் பெரியதொரு அந்தஸ்த்து இருக்கிறது.
அந்த அந்தஸ்த்து எங்களுக்கும் கிடைக்க வேண்டும் நாங்கள் எதையும் கேட்டுத் தெரிந்து அறிந்து அதன்படி தான் நடப்போம்.
கண்மூடிக் கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் அபலைகளும் அல்ல எங்கள் அண்னையர் எங்களுக்கு அப்படி வழிகாட்டவும் இல்லை.
இதுதான் அவர்களின் திடமான கொள்கை.
நபியிடத்திலேயே தட்டிக் கேட்டவர்கள் அல்லவா?
இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
(ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''எவர்(மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனைசெய்யப்படுவார்'' என்று கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''அல்லாஹ் (குர்ஆனில்) 'வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டுவழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8)என்றல்லவா கூறுகின்றான்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இ ''இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள். (புகாரி 103)
நபியவர்கள் ஒரு செய்தியைச் சொல்கிறார்கள் அதனை ஒட்டி ஒரு எதிர்க் கேள்வியைக் கேட்டு நபியவர்கள் சொன்ன செய்தியின் உண்மை விளக்கத்தை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைக்கிறார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
(ஒருசமயம்) பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக்காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள்.

''உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்)இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திரி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்'' என்றுகூறினார்கள். உடனே ஒரு பெண்மணி 'இரண்டு குழந்தைகளை ஒருத்திஇழந்துவிட்டால்...?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''(ஆம்) இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்''என்றும் அவ்வுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹுபுகாரி 101)
நபியவர்களின் வார்த்தைகளில் கூட மேலதிக விளக்கம் வேண்டி கேள்வி கேட்ட அண்ணையர்களின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?
கேள்வி கேட்டாயினும் நாம் மார்க்கத்தை தெளிவாக அறிய வேண்டும் என்ற எண்ணம் உயிரில் ஊரியிருக்காதா என்ன?
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.


பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, இஸ்லாமிய தலைவர்களுக்கும் வழங்க வேண்டும்..


தமிழகம், ஜூலை 24: கடந்த வெள்ளியன்று பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் இந்து அமைப்பினர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று  கூறி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று பாஜக, ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்க அலுவலகங்களுக்கும், இந்து அமைப்பை சார்ந்த நிர்வாகிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கியது.

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்  , மற்றும் இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கியது .வன்முறையே கொள்கை, வன்முறையே தீர்வு என்று வீதியெங்கும் முழங்கும் இவர்களுக்கெல்லாம்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்திருப்பது மிகவும் வியப்பாக உள்ளது .

இதேபோல் தமுமுக, SDPI, தவ்ஹீத் ஜமாஅத், INTJ, PFI, முஸ்லிம் லீக்,உள்ளிட்ட அணைத்து இஸ்லாமிய இயக்க அலுவலகங்களுக்கும் ,நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் தலையாய கடமையாகும் .

 தமுமுக வை சேர்ந்த மாநில செயலாளர் திருநெல்வேலி மைதீன் சேட்கான், தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த முன்னாள் மாநில செயலாளர் முத்துப்பேட்டை அன்சாரி, SDPI கட்சியை சார்ந்த மாநில செயலாளர் முத்துபேட்டை  அபூபக்கர் சித்திக் உள்ளிட்டோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் .

தமுமுக வை சேர்ந்த மைதீன் சேட்கான் அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு டெல்லி பேரணி தொடர்பான பணிகளில் ஈடுப்பட்ட பொது ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற பயங்கர வாத அமைப்பினரால் கொலை வெறி தாக்குதல் நடத்தபட்டு அல்லாவின் பேருதவியால் மீண்டெழுந்தார் .

அதேபோல் கடந்த 1999 ஆம் ஆண்டு  முத்துப்பேட்டையை சேர்ந்த அன்சாரி அவர்களின்  கடை பயங்கர வாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. அதே போல் SDPI கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் முத்துப்பேட்டை அபூபக்கர் சித்திக் அவர்களை கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பேரூந்து நிலையம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல்  அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சில தேச விரோத சக்திகள் இவரை சுற்றி வளைத்து  தாக்க முயற்சித்தனர் .

ஆகவே இவர்களுக்கும் பாதுகாப்பளித்து இவர்களை காக்க வேண்டியதும் அரசின் கட்டாய கடமையாகும் .

போலீஸ் பாதுகாப்பில் கீழ்கண்ட பிரிவுகள் :

ஏ -பிரிவு பாதுகாப்பு =24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பி -பிரிவு பாதுகாப்பு = வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மட்டும் பாதுகாப்பு

கீழ்கண்ட தலைவர்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் :

1.குணங்குடி ஹனீபா -தமுமுக  (ஏ பிரிவு பாதுகாப்பு )

2.தடா அப்துல் ரஹீம் -இந்திய தேசிய லீக்  (ஏ பிரிவு பாதுகாப்பு )

3.பி .ஜைனுலாபிதீன் -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஏ பிரிவு பாதுகாப்பு )

4.ஜவாஹிருல்லாஹ் -மனிதநேய மக்கள் கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

5.எஸ் .எம்  .பாக்கர்      -இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏ பிரிவு பாதுகாப்பு )

6.தெஹ்லான் பாகவி  -SDPI கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

7.ஹைதர் அலி              - தமுமுக (ஏ பிரிவு பாதுகாப்பு )

8.தமீமுன் அன்சாரி      -மனிதநேய மக்கள் கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

9.கோவை செய்யது      -தமுமுக (ஏ பிரிவு பாதுகாப்பு )

10.குலாம் முஹம்மது -வைகறை (ஏ பிரிவு பாதுகாப்பு )

11.ஏ.எஸ் .இஸ்மாயில் -பாப்புலர் பிரண்ட் (ஏ பிரிவு பாதுகாப்பு )


தொகுப்பு :  ஜே:ஷேக்பரீத்
                       (MA .Journalism & Mass Communication )
                       Member Tamilnadu Press Club
                       Chennai .

தொடரும் பா ஜ க வினர் கொலை...பின்னணி என்ன? ஓர் பார்வை!!!


தமிழகம், ஜூலை 23: தொடரும் பா ஜ க வினர் கொலை, உண்மையில் மேற்படி கொலைகளை யார், எதற்காக செய்தார்கள் ? ஓர் அலசல் ரிப்போர்ட். 

‪‎கோயம்பேடு‬ விட்டல் கொலை 27.4.2012 .

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127-வது வட்ட பா.ஜனதா தலைவராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.


கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

‪டாக்டர்‬ அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12 .

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24ம்இரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .


கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .


விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார் .
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .


‪#‎ராமேஸ்வரம்‬ குட்டநம்பு கொலை 7.7.13 ,

ராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வந்தார்.சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.


விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது .இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் .

‪#‎நாகப்பட்டிணம்‬ புகழேந்தி கொலை 5.7.12 .

நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.


சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:-
கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினான். ஆனால் போலீஸ் விசாரணையில் .

கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும் , சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார் .

‪#‎பரமக்குடி‬ முருகன் கொலை 19.3.13

பரமக்குடி. பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன்இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது .

‪#‎வேலூர்‬ வெள்ளையப்பன் கொலை .

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.


வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர் .


இது தொடர்பாக ஜூலை 02,2013 வெளிவந்த தினமலர் செய்தியில் ''


வேலூர், புது பஸ்நிலையம் அருகே, இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், 45, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில், கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப் பட்டிருந்த வெடி குண்டை, கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது, பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென் மாவட்டங்களில் பிரபலம் என்பதால், தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர், இதில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.


இப்படியாக இந்த பிஜேபி இந்து முன்னணியினர் குடிபோதை கந்துவட்டி கள்ளத்தொடர்பு நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு பாதிகப் பட்டவனால் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்யப் பட்டபோது அந்த பழியை மற்றவர்கள் மீது போட்டு , பஸ் எரிப்பு கடையடைப்பு பந்த் நடத்தி அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் அடைகின்றனர் .இவர்களை அடக்கி ஒடுக்காமல் அதிமுக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று புரியவில்லை . 
கொலையாளிகள் யாராக இருந்தாலும் இதற்கு முற்று புள்ளி வைத்து மக்கள் முன் தெளிவு படுத்தினால் தான் பதற்றம் தணியும். அரசு செய்யுமா ???


நன்றி - தமிசுதீன் என்கிற முஹைதீன் (நாகை) 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)