முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்த C .M .இப்ராஹீம் :




அதிராம்பட்டினம், மே 23: முத்துப்பேட்டை சூப்பர் கிங்ஸ்கைப்பந்து கழகம் சார்பாக   இளைஞர்களால் வருடாவருடம்முத்துப்பேட்டை  கொத்பா பள்ளி திடலில்  மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒன்று .பொதுவாகவே விளையாட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென்றால் பரிசுகள் கொடுப்பவர்களை (SPONSORSHIP )தேடி பிடிப்பது என்பது இயலாத ,மிகவும்  கடினமான காரியமாகும் .
கடந்த நான்கு ஆண்டிற்கு முன் 10 பேர் கொண்ட அணியின் நிர்வாகிகள் பரிசை பெறுவதற்காக ((SPONSORSHIP ) அதிரைக்கு சென்றிருந்தோம் .முதலில் அதிரையில் உள்ள முக்கியஸ்தர்கள் ,செல்வந்தர்கள் ,மற்றும் அரசியல் பிரபலங்களை சந்திப்பது என்று முடிவெடுத்தோம் .பின்னர் ஒருசில பிரபலங்களை சந்தித்தோம் .பலன் ஒன்றும் இல்லை .


பரிசு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அனைவரும் கடற்கரை தெருவில் உள்ள ஒரு ஆள மரத்தடியில்  அமர்ந்தோம் .அப்போது அங்கே அதிரை சார்ந்த மாநில அளவிலான விளையாட்டு வீரர் சாகுல் வந்தார் ,பின்னர் இங்கே ஒரு ஆள் இருக்கிறார் வாருங்கள் போய் சந்திப்போம் என்று கூறி எங்களை கடற்கரை தெருவிற்கு உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார் .


அந்த வீட்டிற்கு சென்ற மறுகணமே ஒரு வயதான தோற்றத்தில் ,இளைஞர் போன்ற சுருசுருபோடு நம்மை ஒருவர் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார் .அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுத்து கவனித்த அவர் உங்களுக்கு என்ன உதவி  வேண்டும் என்று பணிவாக கேட்டார் .அப்போது நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் விளையாட்டு போட்டி நடத்துவதற்கு  பரிசு உதவி செய்ய வேண்டும் கடைசி பரிசான நான்காவது பரிசு வழங்கினால் போதும் என்று கூறினோம் .உடனே அந்த வயதானவர் குறிக்கிட்டு நான் நான்காவது பரிசெல்லாம் தரமுடியாது ...முதல் பரிசுதான் கொடுப்பேன் என்று தமாசாக பேசி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .பின்னர்தான் அந்த நபர் மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய C .M .இப்ராஹீம் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம் .


முத்துபேட்டை சூப்பர் கிங்ஸ்வருடாவருடம்  நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு  முதல் பரிசை கொடுப்பது மட்டுமில்லாமல் ,போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்து வாழ்த்துரையும் வழங்கிவிட்டு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது .


மாறாத நினைவுகளுடன் :  ஜே. ஷேக் பரீத் 
                                                    


4 comments:

  1. முத்துப்பேட்டையிலேயே இத்தனை செல்வந்தர்கள் இருந்தும் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தபோதிலும் ,தான் ஒரு பிற ஊரை சார்ந்தவர் என்று பாராமல் விளையாட்டிற்கு ஊக்கமளித்த மர்கூம் ஹாஜி .C .M .இப்ராஹீம் அவர்களுக்கு நாம் அனைவரும் கண்டிப்பாக துவா செய்ய வேண்டும் :

    துபாயிலிருந்து : A .சாஹுல்ஹமீத் ,S .தீன் முஹம்மது ,ஜாகிர் உசேன் ,

    ReplyDelete
  2. முத்துப்பேட்டை சூப்பர் கிங்ஸ் நடத்திய அத்துனை போட்டிகளுக்குமே முதல் பரிசை வாரி வழங்கியவர் அன்பிற்கினிய பெரியவர் மர்ஹும் ஹாஜி .C .M .இப்ராஹீம் அவர்களுக்கு வல்ல இறைவனிடம் பிராத்திப்போம் :

    குவைத்திலிருந்து : S .நசீர் முஹம்மது .S .அப்துல் அலீம் ,A .இபுறாஹீம்

    ReplyDelete
  3. மர்ஹும் ஹாஜி :C .M .இப்ராஹீம் அவர்கள் இத்தனை வயதில் கூட விளையாட்டில் இத்தனை ஆர்வம் கொண்டவரா என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது .எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறோம் :

    கத்தாரிலிருந்து : கே .சலீம் ,க .மீரா ஹுசைன் ,கே .நவாஸ்கான் மற்றும் முத்துப்பேட்டை அல் ஆசாத் நகர் நண்பர்கள்

    ReplyDelete
  4. முத்துப்பேட்டையில் விளையாட்டு போட்டி நடப்பதற்கு உறுதுணையாக இருந்த மர்ஹும் ,ஹாஜி :c .M .இப்ராஹீம் காக்காஅவர்களுக்கு பிரார்த்திப்போம் ;

    அபுதாபியிலிருந்து : K .நாசர் ,c .பரக்கத்துல்லா .Y .யூனுஸ் .

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)