முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பூட்டிய அறைக்குள் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் பயங்கர ரகளை.!!

முத்துப்பேட்டை, ஜூலை 30 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் கோ. அருணாச்சலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலக மாடியில்தான் கதவுகள் திறந்த நிலையில் நடைபெறுவது வழக்கம், ஆனால் கூட்டம் துவங்குவதற்கு முன்பு கதவுகள் பூட்டப்பட்டு பூட்டிய அறைக்குள் துவங்கிய கூட்டம் சில மணி நேரத்தில் ஆ. ஊ.., என்றும் அய்யோ, அம்மா, என்றும் கடுமையான புரியாத வாக்குவாதமும் சேர்களை தூக்கி வீசியது, டேபிளை தட்டிய சத்தமும் நீண்ட தூரத்துக்கு...

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..

முத்துப்பேட்டை, ஜூலை 29 : முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையில் நேற்று மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் S.S. பாக்கர் சாஹிப் தலைமை வஹித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்து கொண்டு நோன்பு திறந்தார், அப்போது அவர் பேசியதாவது. இந்த நோன்பில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு மாதா காலம் தங்களின் உடலை வர்த்தி நோன்பு இருப்பது என்பது...

மவுத்து அறிவிப்பு: " ஹாஜிமா ஆசியா மர்யம்"

முத்துப்பேட்டை, ஜூலை 29 : அலியார் சந்து மர்ஹும் ஹாஜி முஹம்மது அவிக்கனார் அவர்களின் மனைவியும், முஹம்மது அலி, முஹம்மது யூனுஸ் ஆகியோரின் தாயாரும், இம்ரான், இர்ஃபான் ஆகியோரின் பாட்டியாரும், S.M. யூசுப் அவர்களின் மாமியாருமாகிய "ஹாஜிமா ஆசியா மர்யம்" அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அண்ணாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்....

முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் மின்னணு இயந்திரம்.

முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் புதிய மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் திருவாரூர் மாவட்டத்திலேயே இந்த பள்ளியில் தான் முதலாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் பல்வேறு சகோதர சகோதரிகள் தங்களது நன்கொடைகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இந்த புதிய மின்னணு இயந்திரத்தை ஜனாப். அல்ஹாஜி B.A. மைநூர்தீன் அவர்கள்...

மவுத்து அறிவிப்பு: "முஹைதீன் பக்கீர்"

முத்துப்பேட்டை, ஜூலை 26 : தெற்குத் தெரு மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மகனும், பேட்டை அய்துருஸ் சகோதரர்களின் சிறிய தகப்பனாரும், மர்ஹும் நெய்னா மூஸா, மர்ஹும் அப்துல் மஜீத், அப்துல் ரஹ்மான் ஆகோயோரின் மச்சானும், நாட்சிக்குளம் காதர் முஹைதீன் அவர்களின் மாமனாரும், அப்துல் மஜீத் அவர்களின் பாட்டனாரும், தாஜ் ஹோட்டல் ஷாஜஹான் அவர்களின் தகப்பனாருமாகிய "முஹைதீன் பக்கீர்" அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்)....

முத்துப்பேட்டையில் விரைவில் திறப்பு விழா காண தயாராகும் ஆசாத் நகர் பள்ளி வாசல்.

முத்துப்பேட்டை, ஜூலை 26 : அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவுற்று திறப்பு விழாவும் காண உள்ளது. (அல்ஹம்து லில்லாஹ்) இந்த இறை இல்ல கட்டுமானப் பணிகளுக்கு இந்த நோன்பு நாட்களில் தங்களுடைய சதக்க, ஜக்காத் ஆகிய உங்களது நன்கொடைகளை வாரி வழங்குமாறு...

இளம்பெண்கள், குடும்பப் பெண்கள், யாருடன் கொஞ்சிப் பேசலாம்? ஓர் பார்வை.!!!

உலகம், ஜுலை 26 : பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.] ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும்...

ம.ம.க. கட்சியிலிருந்து விலகி SDPI கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட 30 செயல் வீரர்கள்.

கொரடசேரி, ஜூலை 26 : திருவாரூர் மாவட்டம் கொரடசேரியில் SDPI கட்சியின் புதிய கிளையின் சார்பாக கட்சிக் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றி வைத்தார்.பிறகு மாலை 5.30 மணியளவில் ம ம கவில் இருந்த ம ம க நகர பொறுப்பாளர் ஹாஜி தலைமையில் 30 செயல் வீரர்கள் ம ம கவை விட்டு விலகி SDPI கட்சியில் புதிதாக இணைந்த போது அவர்களுக்கு அறிமுக உரையை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர்...

முத்துப்பேட்டையில் 2 வருடமாக நோன்பு நோற்று சாதனை படைத்தது வரும் 4 வயது சிறுவன்.

முத்துப்பேட்டை, ஜூலை 25 : முத்துப்பேட்டையில் இரண்டாவது வருடமாக 4 வயது சிறுவன் நோன்பு நோற்று வருகிறான். கடந்த சனிக்கிழமை இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு துவங்கியது. இந்த நோன்பு சுமார் ஒரு மாதம் கடைபிடிக்கப்படும் என்பது யாவரும் அறிந்ததே. அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து சாப்பிட்டு பின்னர் மாலை 6.30 மணிக்கு அவற்றை விடுதல் வேண்டும். இவற்றில் இடைவெளியில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும், அதில் சுபுஹு தொழுகை காலை 5.15 மணிக்கும், மதியம் லுகார் தொழுகை...

பாராட்டுவதா.?பரிதாபப்படுவதா? கிழக்குதேர்தலில் குதித்துள்ள முஸ்லிம் சகோதரி ஓர் பார்வை

இலங்கை, ஜூலை 25 : எமது குடும்ப சாப்பாட்டை ஒரு சோறும் ஒரு கறியும் ஒரு சுண்டலுடன் மட்டுப்படுத்தி தியாகத்துடன் வாழ்ந்து சமூக சேவை செய்யும் நான் எனது கணவர் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தை மிச்சம் பிடித்து அதையும் சமூக சேவைக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன் படுத்துவேன் என கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாழைச்சேனையைச் சேர்ந்த புகாரி சித்தி சபீக்கா KWC க்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.கேள்வி:நீங்கள்...

மலேசியா விமான நிலையத்தில் தமிழர்களுக்கு அடி,உதை 300 பேர் பாஸ்போர்ட் தீ வைப்பு..!!!

முத்துப்பேட்டை, ஜூலை 22 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் சேக்ஜி. இவர் அடிக்கடி மலேசியா, சிங்கபூர் நாடுகளுக்கு சென்று ஜோதிடம் மற்றும் வியாபாரம் செய்வதற்காக சென்று வருபவர். வழக்கம் போல கடந்த 15 ஆம் தேதி அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அன்று இரவு மலேசியாவிற்கு சென்று உள்ளார். அங்கே உள்ள விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவருடன் சென்று 38 பேரையும் எமிகிரேசன் கிளியர் (விசா பரிசோதனை செய்யும் இடம்) இடத்துக்கு...

முத்துப்பேட்டை 9 வது வார்டுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் வடிகால் குழாய் அமைப்பு.

முத்துப்பேட்டை, 22 : முத்துப்பேட்டை 9 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கழிவு நீர்களை குழாய்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தும் விதமாக வார்டு கவுன்சிலர் ஜனாப். பாவா பகுருதீன் அவர்கள் தற்போது 10 லட்சம் பாதிப்புள்ள வடிகால் குழாய் அமைத்து நடைமுறைக்கு வருகிறது. இதில் முஹைதீன் பள்ளி தெரு மெய்ன் ரோடு, முஹைதீன் பள்ளி தெரு O.M. வீட்டு சந்து, முஹைதீன் பள்ளி பைந்தப்ப வீட்டு சந்து, குட்டியார் பள்ளி வடக்கு தெரு சந்து,...

எப்போது திறக்கப்படும் இந்த பள்ளிவாசல் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸின் நேரடி ரிப்போர்ட்..!!

திருவாரூர், ஜூலை 21 : திருவாரூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அருகில் ஐக்கிய ஜமாத்திற்கு சொந்தமான சுமார் 60 ௦ ஆயிரம் ஸ்கொயர் பீட்டில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் உள்ள ஒரு சிறிய பகுதியில் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்னதாக கட்ட துவங்கினார்கள். அதற்க்கு எல்லா விதமான அரசு அனுமதிகளும் பெற்று அனைத்து பணிகளும் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதில் பள்ளி மக்தப் மதரசாவும் மேலும் வெளியூரூ வாசிகள்தொழுகைக்கு உரிய இடமாகவும் அமைக்கக் கூடியவை அடையாளப்...

மவுத்து அறிவிப்பு: ராஜா முஹம்மது (என்கிற) முஹம்மது அலி ஜின்னா

முத்துப்பேட்டை, ஜூலை 20 : சரிப் தெரு மர்ஹும் ஹாஜி வா.மு.வாட்சா முஹைதீன் அவர்களின் மகனும், ஆசாத் நகர் மர்ஹும் A.M. ஷாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், M. முஹம்மது தம்பி, M. அப்துல் ரஹ்மான் இவர்களின் சிறிய தகப்பனாரின் மகனும், ஷாகுல் ஹமீது, முஹம்மது யூசுப், முஹம்மது இபுறாஹீம், நிஜாம் மன்சூர் ஆகோயோரின் சகோதரரும், அதிராம்பட்டினம் K.M. முஹம்மது அலியார் அவர்களின் மைத்துனரும், ஆசாத் நகர் அஜீஸ் வாத்தியார், தீன் முஹம்மது, தாஜுதீன் ஆகியோரின் சகலையும், ஆசாத் நகர்...

உயிரை எடுக்கும் மொபைல் ஃபோன்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்...!!!

இந்தியா, ஜூலை 05 : நாட்டின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் மட்டும் 94.7 (1.07%) லட்சம் அதிகரித்து 89.38 கோடியானது. நவம்பரில் இது 88.43 கோடியாக இருந்தது. எம்.பி.பி.எஸ். முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து. ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில்,...

முத்துப்பேட்டையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான இரு கார்கள்..

முத்துப்பேட்டை, ஜூலை 03 : முத்துப்பேட்டையில் இன்று அதிகாலையில் நேருக்கு நேராக மோதிக்கொண்டு இரு கார்களும் நாசமடைந்துள்ளது. இன்று அதிகாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்த காரும் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த காரும் முத்துப்பேட்டை ECR பகுதியில் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களை தஞ்சாவூர் அரசு மருத்துவமைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார்...

முத்துப்பேட்டையில் அடையாலம் தெரியாத வாகனம் மோதி டிராக்டர் டிரைவர் பிணம்.

முத்துப்பேட்டை, ஜூலை 03 : முத்துப்பேட்டையில் நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிராக்டர் டிரைவர் கணபதி இறந்து கிடந்தார். நேற்று அவர் ECR பாதை வழியில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது எதிர் பாராமல் அவர் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. source from: www.mttexpress.com,...

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் புதிய வெளியிடு ஓர் பார்வை.

முத்துபேட்டை,ஜூலை 03 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தற்போது வெப் டிசைன், வெப் ஹோஸ்டிங் என்ற புதிய விளம்பரத்தை உங்கள் முன்பு அறிமுகம் செய்துள்ளது. இதில் என்னவெனில் வர்த்தகம் சார்ந்தவை, விளையாட்டு சார்ந்தவை, செய்திகள் சார்ந்தவை, சமூகம் மற்றும் சமுதாயம் ஆகிய பெயரில் வலைத்தளம் உருவாக்குவது குறித்து உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம் தாங்கள் விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதை மிக குறைந்த விலையில் உங்களுக்கு டொமைன் நேம் மற்றும்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)