முத்துப்பேட்டை கொத்பா பள்ளியில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய இப்தார் விருந்து நிகழ்ச்சி.
சுல்தானின் மகளை அடிமை திருமணம் செய்யலாம்.

மவுத் அறிவிப்பு: "A .ஹாஜா முஹைதீன்"

முத்துப்பேட்டையில் எழுச்சி மிக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...

ஆகஸ்ட் 22: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இதுவரை நடைபெறாத நோன்பு திரோக்கும் நிகழ்ச்சியை K .N . ஆத்மநாதன் பெரிய பண்ணை ஜாம்பை-வடகாடு, R .S .வீர சேகரன் உப்பூர், P . பாலசுந்தரம் என மூன்று மாற்று மத சகோதரர்கள் நேற்று 21 .08 .2011 முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டையை சார்ந்த அனைத்து முஹல்லா நிர்வாகிகள், மற்றும் முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாற்று மத முக்கியஸ்தர்கள், மற்றும் சான்றோர்கள் சமய நல்லிணக்க ஆர்வலர்கள் வர்த்தக பெருமக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறபித்தார்கள். இந்நிகழ்ச்சி இரு சமூகங்களுக்கிடையேயான சகோதருத்துவம் மிக்க நெகல்வான ஒரு சந்திப்பாகவே நடந்தேறியது. முத்துப்பேட்டையில் நற்சிந்தனையோடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை யில் அனைத்து மக்களிடையேயும் மிகவும் சகோதர வாஞ்சையை ஏற்படுத்தியது. இப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. எதிவரும் காலங்களில் நாமும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு கொடுத்து விருந்து உபசரிப்பு செய்வது என முடிவெடுக்கப்பட்டது . இந்நிகழ்ச்சி உண்மையில் மிகப்பெரியதொரு நிகழ்வை உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெருவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 90472 61919 ...
குறிப்பு:
இந்நிகழ்ச்சியில் மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்னவெனில் முத்துப்பேட்டை காவல் துறையைச்சார்ந்த DSP,INSPECTER,SI, மற்றும் உளவு பிரிவுகளுக்கு அழைப்பு கொடுத்தும் வரவில்லை என்பது மக்கள் மத்தியிலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியிலும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இரு சமூகங்களின் நல்லிணக்க ஒற்றுமைக்கு மிகவும் முக்கியமான இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை கலந்து கொண்டிருந்தாள் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற நெப்போலியனும்!
கடிதம் பிரிட்டிஷார் வசம்
திப்புவின் தூதர் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்ற நெப்போலியன்
ஹிந்து பத்திரிகையில் 19.12.1982 அன்று வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி விபரம்:
முத்துப்பேட்டை பொது மக்களை கஷ்டங்களுக்கு உட்படுத்தும் HP சிலிண்டர் நிறுவனம்!!!

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 20 : (Exclusive Muthupettai Express)திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுமார் 75 ஆயிரம் மக்கள்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் முஸ்லிம்களே வசிப்பது யாவரும் அறிந்ததே. எனினும் முத்துப்பேட்டை மக்கள் மாதம் ஒரு முறை சிலிண்டர் (கேஸ்) வாங்குவதற்கு பல மணி நேரம் வெவ்வேறு இடங்களிலிருந்தும் வந்து காத்து கிடப்பது மிகப்பெரிய ஓர் துயரமாகத்தான் இருக்கிறது. எனினும் பக்கத்து ஊருகலான அதிராம்பட்டினம், திருத்துறைப் பூண்டி, பட்டுக்கோட்டை, நாட்சிகுலம், மதுக்கூர் இன்னும் பல்வேறு முஸ்லிம்கள் வசிக்க கூடிய இடங்களில் வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்யும் இந்த "HP கேஸ் நிறுவனம்" ஏன் முத்துப்பேட்டையில் மட்டும் செய்வதில்லை. இது குறித்து "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்" பொது மக்களிடம் கேட்டபோது அம்மக்கள் கூறும் பதில். இதில் பெண்களாகிய நாங்கள் மிகவும் சிரமத்திற்கும், கஷ்டத்திற்கும் ஆளாகிறோம். பொதுவாக முத்துப்பேட்டை பகுதிகளுக்கு சிலிண்டர் வந்தால் வீட்டில் யாரும் ஆட்கள் இல்லாதபோது வெளியில் உள்ள ஆட்களிடம் வாங்கி கேட்டல் அதற்கு அவர்கள் 50 ரூபாய், அல்லது 100 ரூபாய் , தாருங்கள் என்று கேட்கின்றனர். அனால் ஒரு சிலிண்டரின் விலை தற்போது 430 இப்படி இருக்கும் நிலையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எனவே வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்ய வேண்டும். ஆண்கள் வியாபாரம் செய்யும் நேரத்தில் வியாபாரத்தை போட்டுவிட்டு வரக்கூடிய மிக மோசமான சூழ்நிலைதான் இந்த முத்துப்பேட்டையில் அரங்கேறி வருகின்றது. ஏன் இந்த நிலை? இதற்க்கு நிரந்தர தீர்வுதான் என்ன? அரசியல் வாதிகளின் சதியா? அல்லது அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியா? பொறுந்திருந்து பாப்போம் இதற்கு விடை கிடைக்குமா என்று?
ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.
முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டிய ஊடகத்துறை!!!
உலகம் ஆகஸ்ட் 20 : ஊடகம் (மீடியா) இன்று உலகை சுருக்கிகி உள்ளங்கையில் தந்து விட்டது. அதன் வளர்ச்சியும் பிரம்மாண்டமும் இன்று ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பிரம்மிக்கத் தக்க வளர்ச்சியும் வளமும் கொண்டதாய் திகழ்கின்றது. வெகு ஜன கருத்தை உருவாக்கவும் மக்கள் சமூகத்தின் ஆளுமையை வளர்பதிலும் கூட அது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது .ஆனால் இவ்வளவு ஆற்றல் மிகுந்த ஊடகம் (மீடியா) எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது. என்பதைப் பற்றி ஆராயும் முன்பு ஊடகம் (மீடியா) என்றல் என்ன? என்பதனைப்பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்
.gif)
