
கடையநல்லூர், நவம்பர் 30 : அன்பார்ந்த இஸ்லாமிய சமுதாய சகோதர, சகோதரிகளே கடந்த சில வருடங்களாக நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினையாக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த குறும்படத்தை எழுதி,இயக்கிய கடையநல்லூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.இப்படத்தின் மூலம் நாம் பயனடையும் நன்மைகள்:பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய்...

முத்துப்பேட்டை,நவம்பர் 30 : "ஜம்மியத்துள் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" சார்பில் வருகிற ஜனவரி மாதம் 14 , 15 ஆகிய தேதிகளில் "படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி" என்ற முழக்கத்துடன் மாபெரும் சிர்க் ஒழிப்பு மாநாடு கோவையில் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். டாக்டர். முஹமது மீரா லப்பை அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாரூர் மாவட்ட தலைவர் டாக்டர். முஹமது...

முத்துப்பேட்டை, நவம்பர் 29: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. எனினும் இம்மழையின் காரணத்தால் தண்ணீர் ஆங்காங்கே வெள்ளம் போல தேங்கி கிடக்கின்றன. அவற்றில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ரோட்டில் (பிர்லியான்ட் பள்ளிகூடம் எதிரில்) உள்ள ரஹ்மத் பள்ளிவாயில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சாலைகள், ஆகிய இடங்களில் அதிகமான வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும்...

டெல்லி, நவம்பர் 29: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் சமூக எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ஏராளாமான இமாம்கள் , அரசியல் தலைவர்கள் , எழுத்தாளர்கள் , உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பல்வேறு கருத்துகளை பரிமாறினார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஜனாப். அப்துர் ரஹ்மான் சாஹீப் அவர்கள் கோடியை ஏற்றிய பின்னர் மாநாடு துவங்கப்பட்டன. இந்த மாநாட்டின் நுழைவாயிலில் வரக்கூடிய அனைத்து...

முத்துப்பேட்டை, நவம்பர் 27 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஓர் இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதில் வேதாரணியத்தில் பத்திரிகை நிருபர் சந்தித்த அந்த நபர் கூறும்போது, "வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கின்றது என்றும், முத்துப்பேட்டையில் எந்தப் பெண்ணும் தனியாக நடமாட முடியவில்லை என்றும் மிக வேதனையோடு அவர் கூறினார்.அந்த நபரிடம் பத்திரிகை நிருபர் இது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது. கடைசி பஸ்ஸை தவறவிட்ட ஓர் கிராமத்து...

முத்துப்பேட்டை,நவம்பர் 26 : செக்கடித்தெரு மர்ஹும் குஞ்சளியப்பா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் K . ஜைனுல் ஆப்தீன் அவர்களின் சகோதரரும், J .பகுருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய "K .ஜெக்கரிய்யா" அவர்கள் நேற்று மாலை 5 .30 மணியளவில் பட்டுக்கோட்டை வளவாம்புறம் அவரது இல்லத்தில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் பட்டுக்கோட்டை ஜும்மா பள்ளி வாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என...

முத்துப்பேட்டை, நவம்பர் 25 : தமிழ்நாடு பொது பணித்துறை மூலம் வெண்ணார், காவேரி, மற்றும் கல்லனைக் கால்வாய் பாசன பார்வையில் மழை நீரை பாது காப்பாக கடலுக்கு கொண்டு சேர்ப்பதற்கும், மக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் விதமாக, அவற்றிருக்கு வெல்ல தடுப்பு முறையை செயல்படுத்த ஆசியா வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது. இந்த செயல் திட்டத்தை முத்துப்பேட்டையில் எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருமதி. சிண்டி...

முத்துப்பேட்டை, நவம்பர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நள்ளிரவிலிருந்து பெய்து வரும் கனத்த மழையால் ஆ.நே பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிர்லியான்ட் பள்ளி, பேட்டை பள்ளி, ஆகிய அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழையால் முத்துப்பேட்டையில் வியாபாரம் சற்று குறைவாகவே இருக்கின்றது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்....

முத்துப்பேட்டை, நவம்பர் 23 : பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வுக்கான பரிந்துரை ஆகியவைகளை கண்டித்து SDPI சார்பாக நேற்று காலை 11 :30 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றம் எதிரே நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் சமுதாய நலம்விரும்பிகள் இதில் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். மேலும் இதனைத் தொடர்ந்து கண்டன உரை நிகழ்த்திய SDPI - யின் மாநில செயலாளர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், அ.தி.மு.க. ஆட்சி...

மேலப்பாளையம், நவம்பர் 23 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்த பாபர் மஸ்ஜித் ரத யாத்திரையை கடைசி நேரத்தில் ரத்து செய்த காவல் துறை கடுமையான கெடு பிடி செய்து ரதயாத்திரையை முடக்க நினைத்தது ஒரு பக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடையது நாங்கள் எந்த ரதயாத்ரையும் நடத்த வில்லை, எனவே இதை தடுக்க வேண்டும் என அண்ணன் ஜமாஅத் மேலப்பாளையம் மேலாண்மை புகார் அளித்து கொடுத்த மன உளைச்சல் இன்னொரு பக்கம் இத்தனையையும் தாண்டி சென்னையில் இருந்து ரதத்தை நெல்லை...

முத்துப்பேட்டை, நவம்பர் 22: முத்துப்பேட்டையில் திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி வயது (25 ) இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகிறது. இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டை கீழ்க்காட்டில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 19 ம் தேதி காலை சதீஸ்குமார்...