முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருமணச் செய்தி: "S.ஹபீப்கான்,ஆய்ஷா பர்வீன்"

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 11 , 30.08.2012 மாலை 4 மணியளவில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஜனாப் மர்ஹும் சர்புதீன் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S.ஹபீப்கான் மணாளருக்கும், முத்துப்பேட்டை ஜனாப்.இக்பால் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஆய்ஷா பர்வீன் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 1 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை பேட்டை பள்ளி இமாம். U. பத்ரு ஜமான், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்....

முத்துப்பேட்டை 13 வது வார்டு SDPI யின் புதிய கிளை சார்பாக கொடி ஏற்றப்பட்டது.

முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 30: முத்துப்பேட்டை புதிய கிளை SDPI கட்சியின் சார்பில் நேற்று கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கிளை பொருப்புத் தலைவர் தேனா,சீனா.ஜெஹபர் அலி 13 வது வார்டில் நடக்கக்கூடிய...

மவுத்து அறிவிப்பு: " அஹமது ஜலாலுதீன்"

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 29 : குண்டாங் குலத்தெரு PSK காலனி மர்ஹும் நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், ஜா(என்கிற)செக்கரியா அவர்களின் சகோதரரும், PKT மஜ்பா வாட்சி கம்பேனி முஹம்மது ரபீக், முஹம்மது ரியாஸ், அப்துல் சலாம் ஆகியோரின் தகப்பனாரும், குரைசி அவர்களின் சிறிய தகப்பனாரும், அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானும், பெட்டிக்கடை முஹம்மது தாவூது, முஹம்மது இலியாஸ், ஆகியோரின் மாமனாரும், PSK அப்துல் காதர் அவர்களின் சகலையுமாகிய "அஹமது ஜலாலுதீன்" அவர்கள் இன்று காலை...

செவ்வாய் கிரகத்தில் மனித குரல் கேட்கிறதாம்..!

உலகம், ஆகஸ்ட் 29 : செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும்...

ஒரு முஸ்லிம் தேசம் 2020 இல் வாழத் தகுதியற்றதாகிறது..!

பலஸ்தீனின், ஆகஸ்ட் 29 : பலஸ்தீனின்ச காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. “காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது” என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர்...

முத்துப்பேட்டையில் கொடிய விசமுள்ள இரு பாம்புகள், பொதுமக்களே பிடித்தனர்..

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28 : முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அதிகமான கருவை காடுகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் நடமாட அச்சம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியிலிருந்து ரோட்டுக்கு வந்த நல்ல பாம்பு மற்றும் காட்டு விரியன் பாம்பும் அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது இவற்றை கண்ட அப்பகுதி பொது மக்கள் சாமாத்தியமாக அப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனை பார்க்க...

மவுத்து அறிவிப்பு: "நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால்"

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : PKT ரோடு மர்ஹும் நே.கா.மு. சேக் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் லத்திப், மர்ஹும் மவுளா அபூபக்கர் ஆகியோரின் தம்பியும், H. முஹம்மது லத்திப் அவர்களின் தகப்பனாரும், ஜெஹபருதீன் அவர்களின் மாமனாருமாகிய நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால் அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்) நாளை காலை 10 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்....

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டம்..

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இச்சங்கத்தின் தலைவர் ஜனாப். ஜஹபர் உசேன் அவர்களின் இல்லத்தில் நேற்று அஷர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மேலும் முத்துப்பேட்டை பிரதிநிதி கா.மு நெய்னார் முஹம்மது அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் ஃபித்ரா அரிசி விநியோகம் மற்றும் உதவித்தொகை பெர கடிதம் எழுதி அனுப்பிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் விரைவில் உதவித்தொகைகள் வழங்கப்படும் என்றும்...

அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசூல் செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : அசாமில் பாதிக்கப்பட்ட நமது முஸ்லிம் சமுதாய மக்களை கொன்று குவித்து வரும் புத்த மத வெறியர்களுக்கு அல்லாஹ் விரைவில் ஹிதாயத் கொடுக்க இந்த இனிய நாளில் நாம் துவா செய்வோம். இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் அழிவை பார்த்து எத்துணையோ மனித உரிமை ஆணையம் வாய் பொத்தி மவுனம் சாதித்து வருகிறது. இந்த மக்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு இன்று நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நமது சமுதாய மக்களிடம்...

முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் குறித்த ஓர் பார்வை...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20 : முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினரும் ஒன்று சேர்ந்து அவரவர்களுக்கு தெரிந்ததை மிக சிறப்பான முறையில் பேனர்களை வைத்து குட்டியார் பள்ளி வாசல் மற்றும் ஆசாத் நகர் பள்ளி வாசலை சுற்றி அலங்கரித்துல்லானர். இது குறித்த ஓர் பார்வையாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.source from:www.muthupettaiexpress.blogspot.comதொகுப்புமுத்துப்பேட்டை...

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப் பட்ட நோன்பு பெருநாள் ஓர் பார்வை.

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 20: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை சரியாக 7.30 மணியளவில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுத்தெரு திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். தொழுகைக்கு பின்பு சிறப்பு பயனும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து குட்டியார் ஜும்மாஹ் பள்ளிவாசலில் சரியாக 9 மணியளவில் தொழுகை நடைபெற்றுது. இதனைத்தொடர்ந்து ஆசாத் நகர் ஜும்மாஹ் பள்ளி வாசாளில் தொழுகை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)