முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேரூராட்சி உள் கூட்டத்தில் நடந்தது என்ன.? ஓர் நேரடி ரிப்போர்ட்.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 04: முத்துப்பேட்டை மன்ற கூட்டம் கடந்த 27.07.2012 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணிக்கு துவங்கியது. இப்பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சில பொருட்கள் மீது கருத்துக்கள் கூறப்பட்ட போது நடைபெற்ற கருத்துரையாடல்களை மக்களின் கவனத்திற்கு சமர்பிக்கின்றோம்.

பேரூராட்சி மன்ற கூட்டத்தின் போது சிவா ஐயப்பன் என்பவர் சென்ற மாத கூட்டத்தில் ஒத்திவைப்பு செய்யப்பட தீர்மானங்களை மேற்கோள் காட்டி இந்த மாத கூட்டப் பொருளில் (அஜெண்டாவில்) காட்டப்படாமால் தன்னிச்சையாக மீண்டும் செலவினங்களுக்காக ஒப்புதல் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டுல்லாதே அது ஏன்.? என்றும் சென்ற மாத செலவின வவுட்சர்களும் இந்த மாத செலவின வவுட்சர்களும் மன்ற உருபினர்களுக்கு காட்டப்படாமல் மறைக்கப்படுகிரதே இதுவும் ஏன்.? என்ற இரு கேள்விகளை எழுப்பினார்.

இதற்க்கு பதிலளித்த பேரூராட்சி மன்றத் தலைவர் நாங்கள் மட்டும் பார்த்தல் போதுமானது உங்களிடமெல்லாம் காட்ட தேவை இல்லை என்றும், மேலும் உதவி இயக்குனர், கலெக்டர் யாரிடத்திலும் புகார் செய்து கொள் என்றும் கூறி உள்ளார். இவ்விவாதத்தின் போது கலந்து கொண்ட பாவா பகுருதீன் அவர்கள் மன்ற உறுபினர்கள் கவுன்சிலர்களை பார்க்க உரிமை உண்டு என்றும், இது கடந்த கால கட்டத்தில் செயல்முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகும் என்றும் அப்போது அவர் கூறியுள்ளார். மன்ற உருபினர்களுக்கு வரவு செலவு வவுத்கார்களை பார்க்க அனுமதிக்க வில்லை என்றால் ஒப்புதல் கேட்டு தீர்மானம் கொண்டு வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தலைவர் கூறும் பதில் சரியானதல்ல என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் ஒத்திவைக்கப்பட்ட பொருளை மீண்டும் சேர்க்காமல் விட்டு விடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும், கடந்த காலம் கொண்டு வரப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டுபவர்களுக்கு அபராதமாக ரூபாய் 10,000 ஆயீரம் வித்திக்க வேண்டும் என்ற தீர்மானமும், பேரூராட்சி அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்பு எடுத்தவர்களுக்கும், அடிபைப்பு, மோட்டார் வைத்துள்ளவர்களுக்கும் ரூபாய் 5௦௦௦ ஆயீரம் அபராதம் விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் மக்களுக்கு குறிப்பிட்ட காலமாக 6,மாதம் அல்லது 3 மாதம் அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களையும், E.O. தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி மிரட்டும் செயலில் ஈடுபடுவது ஏன் என்றும் அவர் வாதித்துள்ளார். இது சரிதான என்று வாதித்தபோது ஆளும் கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் அவரவர் வார்டு பிரச்சனைகளை மட்டும் தான் பேசணும் என்றும் அடுத்த வார்டு பிரத்கானைகளை எப்படி பேசுவது என்றும், மேஜைகளை தட்டிக்கொண்டும், கூச்சலிட்டுக்கொண்டும், சத்தமிட்டு வாதம் செய்பவர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தொடரும்...
source from: www.muthupettaixpress.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)