







திறக்கப்பட்டது என்றாலும் இன்னும் அதை புதிய பேருந்து நிலையம் என்று தான் அனைத்து மக்களாலும் அழைக்கப்படுகிறது. மேலும் இன்னும் முறையாக செயல் படாததால் ஒவ்வொரு ஆட்சிகாலத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் புதிப்பிக்கப்பட்டு இந்த பேருந்து நிலையத்தை நடைமுரைப்படுத்துவார்கள்.
சில நாட்கள், சில மாதங்கள் ஆனதும் பழைய குருடி கதவ திரடி என்ற பல மொழிக்கொப்ப மறுபடியும் பேருந்துகள் இங்கு வந்து செல்லாமல் இருந்தது. இதனால் புதிய பேருந்து வளாகம் அப்படியே வெறிச்சோடி போகிவிடும், மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும். இதுதான் இந்த புதிய பேருந்து நிலையத்தின் 20 வருட பரிதாப நிலையாகும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கம் போல் இந்த புதிய பேருந்து நிலையத்தை முறைபடுத்த எண்ணியபோது முத்துப்பேட்டை நகரத்தில் உள்ள பொது நல அமைப்புகள் சீரமைத்து போட்டால் பத்தாது என்றும், இவற்றை நிரந்தரமான நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு படி பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தை முழுமையாக சீரமைத்து, சில சகல வசதிகளுடன் சில மாதங்களுக்கு முன்பு புது பொலிவுடன் திறக்கப்பட்டது.
இதில் காவல்துறை, போக்குவரத்து துறை உதவியுடன் பேருந்துகளும் முறையாக உள்ளே வந்து சென்றது. இதன் மூலம் சுமார் இருபது ஆண்டுகால கனவு நனவாகியதை கண்டு பொது மக்களும், பயணிகளும் மற்றும் அப்பகுதி வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அடைந்த சில மாதங்களில் மகிழ்ச்சியில் "இடி" விழுந்தது போல் பேருந்துகள் இங்கு சரிவர வராமல் போனதுடன் இதனால் பயணிகளின் கூட்டம் குறைந்தது. இதனால் பழைய நிலைக்கு பேருந்து நிலையம் திரும்பி விடுமோ என்ற கேள்விக்குறியில் உள்ளது.
மேலும் பேருந்து நிலையம் புதுபிக்கும் போது பெயரளவில் போடப்பட்ட சாலை கப்பிசாலையாக மாறி ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும் மேலும் சேரும், சகதிமாகவும் மாறி பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. பேருந்து நிலையத்துக்குள் வரும் பயணிகள், மற்றும் இரண்டு சக்கரத்தில் வருபவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள் இதனால் பயணிகள் பேருந்து நிலையத்தில் கூட்டம் மிக குறைவாகத்தான் காணப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம், மறைவாக இருப்பதால் பயணிகளுக்கு தெரியாத வகையில் அமைத்திருந்தாலும் அவற்றை பார்பதற்கு ஆட்கள் இல்லாததால் இலவசமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் மாற்று திறநாளிகளுக்கு கட்டப்பட்ட கழிப்பறையும் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தா.மு.எ.ச. நிருவாகயும் சமூக ஆர்வலருமான P. உலக நாதன் அவர்கள் கூறியதாவது, தமிழ் நாட்டில் எந்த ஒரு பேருந்து நிலையமும் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் போல் குண்டு குழியுமாக மிக மோசமான நிலையை காண முடியாது என்றும், 1990 ல் திறக்கப்பட்ட பின் பேருந்தே செல்லாமல் மோசமான நிலை உருவாகி உள்ளது என்றும், சென்ற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நலச்சங்கம் முயற்சியால் பஸ் மறியல் செய்து பேருந்து நிலையம் உயிர் பெற்று வரும் நிலையில் மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேரும் சகதியும், குண்டும், குழியுமாக காட்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஓட்டுனர்கள் வேதனையுடன் பேருந்தை இயக்குவதுடன் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் பேரூராட்சி நிர்வாகம் இன்னும் நடவடிக்கை எடுக்காதது பேருந்து நிலையம் மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுமோ என்று மக்களுடன் நாங்களும் ஏங்குகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வர்த்தகக் கழக கெளரவ தலைவர் இரா. திருஞானம் அவர்கள் கூறியதாவது, பேருந்து நிலையம் நடைமுரைபடுத்தியத்தில் வியாபாரிகள் மிகுந்த சந்தோசம் அடைந்தார்கள் என்றும், அந்த பகுதியும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் எனவே இவற்றை பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து அவற்றை தக்க வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கூறியதாவது,
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை தர்ஹா டிரஸ்டி முதன்மை அரங்காவலர் S.S. பாக்கர் அலி அவர்கள் கூறியதாவது, தர்ஹா, லகூன் சிறப்பு மிக்க பகுதிகளின் சுற்றுலா தளமாக காணப்படும் இந்த ஊருக்கு அடையாள சின்னமாக இந்த பேருந்து நிலையம் காணப்படுகின்றன என்றும், தற்போதைய நிலைமையை காணும் பொது வரும் சுற்றுலா பயணிகள் கேவலமாக நினைக்கும் நிலமை உருவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் கோ.அரூனாச்சலம் அவர்கள் கூறியதாவது,
பேருந்து நிலையங்கள் இல்லாத எத்துணையோ ஊர்கள் இருக்கும் வேளையில் இருக்கின்ற இந்த பேருந்து நிலையத்தை நடைமுறையில் தக்க வைத்துக்கொள்வதுதான் புத்திசாலி தனம் ஆகும். சென்ற ஆட்சியில் இந்த நகரத்தை தனி தாலுக்காவாக அறிவித்து விரைவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இதில் இந்த பேரூராட்சியை நகராட்சியாகவும் மாற்ற திட்டமும் பரிசீலனையில் இருக்கும் இந்த வேளையில் இந்த பேருந்து நிலையம் சுற்று புறமும் சிமெண்ட் சாலையாகவும் மாற்றி, சுற்று சுவரும் எழுப்பி சுற்றுப்புற காலி இடங்களில் வணிக வளாகமும் கட்டி வண்ண விளக்குகள் அமைத்து அலங்கரித்தால் இந்த ஊரின் பெருமை தமிழகம் முழுவதும் உள்ள சில கேவலமான பேரூராட்சிகள் நம்ம ஊரை ஓர் பாடமாக எடுத்துக் கொள்வார்கள். இதற்க்கு நிரந்தர் தீர்வு தான் என்ன என்று பொறுத்திருந்து பாப்போம்...
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com, www.muthupettaixpress.com,
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment