
சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ளது அலமாதி எனும்
கிராமம் .இங்கு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இஸ்லாமிய இஜ்திமா மாநாட்டில்
சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர் .இதற்காக பிரம்மாண்டமான முறையில் பல
விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில்
உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட
ராட்சத பந்தல்கள் போடப்பட்டு அதில் சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன .மைதானத்தின்...

முத்துப்பேட்டை,பிப்ரவரி 15: S.S. பாக்கர் அலி அவர்களின் செல்வப்புதல்வனுமாகிய தீன்குலச்செல்வன் S.S.B. சபியுல்லா மணமகனுக்கும், J. சாதிக் பாட்சா லெப்பை அவர்களின் செல்வப்புதல்வியுமான தீன்குலச்செல்வி S. ஜீமைரா சித்தீகா மணமகளுக்கும் நிக்காஹ் முத்துப்பேட்டை தர்ஹா அலங்கார வாசலில் அனைத்து ஜமாத்தார்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றத...

இந்தியா, பிப்ரவரி 16: ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே
கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ்
வெளியிட்டு உள்ளது.
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 16: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, சீத்தவாடி சந்து மர்ஹூம் அமீர் முகைதீன் அவர்களின் மனைவியும், கால்நடை மருத்துவர் M.S.முஹம்மது அலியார் அவர்களின் சகோதரியும், சுல்தான் அவர்களின் தாயாரும், அதிராம்பட்டினம் அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் 15.02.2013 காலை 7.00 மணியளவில் மெளத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா 15.02.2013 மாலை 4.00 மணியளவில் அரபு சாஹிபு...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 16: முத்துப்பேட்டை கடல் பகுதி ஆசியாவிலேயே காணாத ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள லகூன் தீவுக்கு பெரிய வரலாறு உண்டு. இப்பகுதியில் அதிகளவில் கொடுவா, வெள்ளான், மடவா, இறால் போன்ற மீன் வகைகள் அதிகளவில் கிடைப்பதால், இப்பகுதி மீன்களுக்கு தனி மவுசு உண்டு. முத்துப்பேட்டை சுற்றியுள்ள ஜாம்புவானோடை, செங்காங்காடு, முனாங்காடு, தில்லைவிளாகம், ஆசாத் நகர், பேட்டை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடித்து பிழைப்பு...

பிப்ரவரி 14: சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பிலே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு...

சென்னை, பிப்ரவரி 14: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான சகோதரர் ஜே.ஷேக்பரீத் அவர்கள் கடந்த வாரம் சென்னையில் , நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினரான கவிஞர் கனிமொழியை சந்தித்தார் .சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற் இந்த சந்திப்பில் முத்துப்பேட்டை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் , வருடாவருடம் இந்து முன்னணியினரால் நடத்தப்படும் விநாயகர் ஊர்வலத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது...

முத்துப்பேட்டை,பிப்ரவரி 12: நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத் தள மானது கடந்த ஒரு வருடத்தை தாண்டி இரண்டாம் ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கும் நிலையில் இந்த இணையத்தளம் ஊர் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இந்த இணையத்தளத்தை விரிவுப் படுத்தவும் உடனுக்குடன் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆஹவே...

முத்துப்பேட்டை,பிப்ரவரி 13: முத்துப்பேட்டை செம்படவன்காடு பைபாஸ்சாலை அருகே நேற்று மாலை பட்டுக்கோட்டையை அடுத்த காசியங்காடு பகுதியிலிருந்து கீற்று ஏற்றி கொண்டு ஒரு மினி முத்துப்பேட்டை நோக்கி வந்தது. லாரியை விஜயகுமார் (32) ஒட்டி வந்தார். அப்போது, தம்பிக்கோட்டை கீழ்காட்டை சார்ந்த ராஜேந்திரன் முத்துப்பேட்டை யிலிருந்து பைக்கில் வந்து கொண்டு இருந்தார். சம்பவ இடத்தில், மினி லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. பின்னர், லாரி தலைகுப்புற...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 12: SDPI கட்சியின் முத்துப்பேட்டை நகரத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் விபரம்:
நகர தலைவர் A. முஹம்மது மைதீன், துணை தலைவர் M . ஷேக் மைதீன் , செயலாளர் M . முஹம்மது யாசிர் , துணை செயலாளர்கள் K. நைனா முஹம்மது, சர்தார், பொருளாளர் S. நிஸார் தீன் , செயற்குழு உறுப்பினர்கள் : M. சவுக்கத் அலி, H. ஹைதர் அலி, முஹம்மது ஆசிப் ஆகியோர்...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் அவர்கள் 9.2.13 மதியம் 3 மணியளவில் வருகை புரிந்தார்கள். அவருக்கு சகோதரர் ஜே. ஷேக் பரீத் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரமுகர் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.
சில மாதங்கள் முன் நடந்த சகோதரர் ஷேக் பரீத் திருமணம்...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டை – கல்கேணித் தெரு மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனாரும், மல்லிப்பட்டினம் மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ஜமால், சலீம்கான், முகமது ரபிக் ஆகியோர்களின் மச்சானும், துளசியாப்பட்டினம் ஹெச். ஹாஜகான் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் மு. முகம்மது காசிம், முகம்மது அலி ஆகியோர்களின் மருமகனும், ராஜா சுகர்னோ, ஃபைசல் சுகர்னோ ஆகியோர்களின் தகப்பானருமாகிய முகம்மது ஹெச். சுகர்னோ அவர்கள் 11.2.13...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு வருகை வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் பாக்கர் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி விட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாத் எந்த காலக்கட்டத்திலும் தேர்தலில் போட்டியிடாது வருகிற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சி இட ஒதுக்கீட்டில் உறுதியாக கூறுகிறார்களோ. அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் உண்மையான குற்றவாளியாக இருந்தால்...