முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ராமநாதபுரம் எஸ் பி வெள்ளைத்துரைக்கு மனநல மருத்துவம் பார்க்க வேண்டும் -மதுரை வக்கீல் சங்கம் கோரிக்கை !!

ராமநாதபுரம் தடியடிக்கு காரணமான ஏடி.எஸ்.பியும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுமான வெள்ளைத்துரைக்கு மனநல சிகிச்சை அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்க செயற்குழு கூட்டம் வக்கீல் சங்க செயலாளர் ஏ.கே.மாணிக்கம் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் அமர்நாத், இணை செயலாளர் முகமது அப்பாஸ் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மதுரை வக்கீல் சங்க உறுப்பினர்களான எம்.காஜா நஜ்முதீன், எஸ்.ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய நாமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
தாக்குதலுக்கு உள்ளான வக்கீலுக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை பொதுமக்கள், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார். எனவே, அவரை மனநல மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உட்படுத்த வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் வெள்ளத்துரைக்கு மனநல சிகிச்சை அளிக்கக்கோரி 21ந் தேதி ஐகோர்ட்டு கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேளும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல் அமைச்சருக்கு நன்றியும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)