முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்ததின் பின்னணி என்ன ?


1) சென்ற 15-வது பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் எண்ணிக்கை முப்பதாக இருந்துள்ளது. 543 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் தற்போது இது 23 ஆக குறைந்துள்ளது.. இது மொத்தமுள்ள 23 பேர் என்பது 4.24 சதவிகிதமாகும்.இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 13.24 சதவிகிதம்
2) பாரதிய ஜனதா கட்சி அயோத்தியில் பாபர்மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுதல், பொதுசிவில்சட்டத்தை நடைமுறைப் படுத்துதல், காஷ்மீருக்கான தனிஅந்தஸ்தை நீக்குதல் உள்ளிட்ட முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை முன்வைத்து இந்துப் பெருமக்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ந்தது.சாதிய எல்லைகள் தாண்டி இந்துமயம் என்பதின் அரசியல் வெளிப்பாடு , இந்த அரசியலில் இந்துத்துவமனமாக கட்டமைக்கப்பட்டது
3) பாரதிய ஜனதா கட்சி நிறுத்திய 428 போட்டியாளர்களில் ஏழு வேட்பாளர்கள் முஸ்லிம்கள். இவர்களில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதியஜனதாவின் வேட்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் 9485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் மூன்றுமுறை எம்.பி.யாக இருந்தவர்.
4) பிஜேபி கூட்டணி கட்சியான எல்.ஜே. எஸ்.பி.(Lok jan shakthi party )சார்பில் பீகார் மாநிலத்தில் போட்டியிட்ட சவுத்ரி மெகபூப் அலி கைசெர் மட்டும் வெற்றி பெற்றார். இவரும் கூட பீகார் மாநில காங்கிரஸ் கட்சிபொறுப்பாளராக இருந்தும் அக்கட்சியால் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது எல்ஜேஎஸ்பி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5) முதன்முதலாக அமைந்த பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். மிக அதிக பட்சமாக ஏழாவது பாராளுமன்றத்தில் 51 எம்பிக்கள் இடம் பெற்றிருந்தார்கள். தற்போது இந்த எண்ணிக்கை 23.
6) முஸ்லிம்களின் வாக்குகள் பிஜேபி ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிஜேபிக்கு ஆதரவாகவே விழுந்திருக்கிறது. இல்லையென்றால் இத்தகையதொரு முழுவீச்சிலான வெற்றி பிஜேபிக்கு கிடைத்திருக்காது.
7) மேற்காணும் மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் வாழ்தல் குறித்த அச்சத்தினால் ஏற்பட்ட விளைவாகவும் சமரசமாகவும் இருக்கலாம். நம்பகரமான மாற்று கட்சிகள் அம்மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இல்லாமல் போனதும் சிறுபான்மையராக அவர்கள் இருப்பதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
8) பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்கள் பிஜேபிக்கு எதிராகவே வாக்களித்து உள்ளனர்.ஆனால் முஸ்லிம் வாக்கு வங்கி ,சமஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிரிந்து விழுந்த காரணத்தால் பிஜேபி அணி எளிதில் வெற்றி பெற முடிந்தது.
9) கன்னியாகுமரி பாரளுமன்ற தொகுதியிலும் இதுதான் நடந்துள்ளது பிஜேபி வேட்பாளர் பொன்ராதா கிருஷ்ணன் வெற்றி கூட இவ்வகையில்தான் என நாம் அனுமானிக்கலாம். சிறுபான்மை கிறிஸ்தவர் 51 சதவிகிதம், முஸ்லிம்கள் 5 சதவிகிதம் என 56 சதவிகிதம் சிறுபான்மையர் இருக்கின்ற ஒரு தொகுதியில் சிறுபான்மை கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், ஆம்ஆத்மி என கட்சிகளுக்கு பிரிந்து போனதும், சாதி வரம்புகளைத் தண்டி இந்து அடையாள அரசியல் மேலோங்கியதையும் பிஜேபியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக குறிப்பிடலாம்.
மேற்காணும் தகவல்கள் எனது நண்பர் Razool Hg அவர்களின் " பதினாறாவது பாராளுமன்றத்தில் இருபத்து மூன்று முஸ்லிம்கள் " என்கிற பதிவிலிருந்து எடுக்கப்பட்டது ..

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)