முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: வகுப்புவாத கோஷங்கள்; உலக தலைவர்கள் அதிர்ச்சி!

இதுவரை இந்திய பிரதமர்கள் பதவி ஏற்பு விழாவில் இல்லாத நடைமுறையாக நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன் முறையாக வகுப்புவாத கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது வெளிநாட்டு பார்வையாளர்களையும், விருந்தினர்களையும்,  மதசார்பற்றவாதிகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இன்று மாலை 6.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவி பிரமாணம் நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ‘ஜெய் ஶ்ரீராம்..! பாரத் மாதாகி ஜெய்!!” – என்ற கோஷங்கள் உரக்க எழுந்தன.
அதன் பிறகு மரபு ரீதியாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேடைக்கு வர தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் முடிந்ததும், மேடையிலிருந்த பாஜக தலைவர்களும், பார்வையாளர்கள் மத்தியிலிருந்த இந்துத்துவவாதிகளும் மீண்டும் “ஜெய் ஶ்ரீராம்..! பாரத் மாதாகி ஜெய்..!!” என்று கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

இது பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் மதசார்பற்றவாதிகள் மத்தியில் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஏனென்றால், மதசார்பற்ற அரசியலமைப்பின் ஆட்சி, அதிகாரம் கொண்ட இந்திய நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. அத்தோடு, இதே கோஷங்கள்தான் 1990-களில், இந்துத்துவ வெறி இயக்கமாக உருவெடுத்தது. அதன் விளைவாக உத்திரப்பிரதேசத்தின் அயோத்தியில் 15-ம், நூற்றாண்டின் பழமைவாய்ந்த பாபரி மசூதி இடிக்கப்பட்டது. இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் கேலிகூத்தாக்கப்பட்டன.
மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு 44 பேர் கொண்ட அவரது புதிய அரசின் உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பாஜகவின் தலைவர் ராஜநாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி மற்றும் நஜ்மா ஹெப்துல்லாஹ் ஆகியோர் இதில் அடங்குவர்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)