முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


நாகை வடகரையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் திறப்பு -மனிதநேயமக்கள்கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி முஸ்லீம் லீக் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வடகரை-அரங்கங்குடி சமுதாய மக்கள் நிறைந்து வாழும் ஊர்களில் ஒன்றாகும்.

அங்கு அல்-கறீம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற-கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான காப்பகம் கடந்த 08.06.14 அன்று திறக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வில் நானும் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளர் அப்துல் ரஹ்மான்(Ex MP) சிவகங்கை தொழிலதிபர் ஜலீல் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டோம்.
அறக்கட்டளை நிர்வாகி நண்பர் அர்ஷத் அவர்களின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்காப்பகம் சால வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

10வயதுக்கும் குறைவான தாய்-தந்தை இல்லாத பெண் குழந்தைகளையும், கடும் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளையும் இக்காப்பகத்தில் சேர்ந்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு மார்க்க கல்வி, மற்றும் உயர்படிப்பு வரை முழு செலவையும் இவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வி முடிந்ததும் அப்பெண்ணுக்கு திருமணத்தையும் இவர்களே நடத்தி கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள்.

பெண் குழந்தைகளை பலரும் சுமையாக கருதும் ஒரு காலக்கட்டத்தில், அல்-கறீம் அறக்கட்டளை எடுத்திருக்கும் இம்முயற்சி காலம், காலமாக தொடர்ந்து தொய்வின்றி நடைபெற பிரார்த்திப்போம்.
60 பிள்ளைகள் தங்கும் அளவுக்கு வசதி இங்கு உள்ளது பெற்றோரை இழந்த அல்லது கொடிய வறுமையில் வாழும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால், உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம்
தொடர்புக்கு; அர்ஷத் 94440 21144 (மாலை 5 மணிமுதல் 8 வரை மட்டும் தொடர்பு கொள்க)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)