முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் பைத்துல்மால் நடத்திய ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா -மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது கொய்யா மஹால் !!

முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மிக அற்புதமாக நடைபெற்றது .சரியாக மாலை 6:30 மணிக்கு புதுப்பள்ளி இமாமின்  கிராஅத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது .

அதனை தொடர்ந்து பைத்துல் மால் நிர்வாகி சலீம் பைத்துல் மாலின் அவசியம் குறித்து விளக்கி பேசினார் .பின்னர் முத்துப்பேட்டை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாஅத் நிர்வாகிகள் ,மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி பேசினர் .
இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் லியாகத் அலி அவர்கள்  முத்துப்பேட்டை பைத்துல்மால் வழங்கிய ஆம்புலன்சை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்பணிப்பு செய்தார் .
ஆம்புலன்சின் சாவியை முத்துப்பேட்டை பைத்துல்மாலின் தலைவர் இலுமுல்லா சனுபர் பெற்றுகொண்டார் . முத்துப்பேட்டை பைத்துல்மாலின் பொருளாளர் மீரா உசேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . மாலிக் ரஹ்மான் நன்றியுரையாற்றினார் .

ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சியை காண முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் திரளாக குழுமி இருந்தனர் .இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற கொய்யா மஹால் மக்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் விழாக்கோலம் போல் காட்சியளித்தது .

இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சாப்பாடு பரிமாறப்பட்டது .

கொய்யா மஹாலின் வெளிப்புறத்தில் முத்துப்பேட்டை பைத்துல்மால்  வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுழல் விளக்கு எரியவிடப்பட்ட நிலையில் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன .இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்ததுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர் .

 முத்துப்பேட்டையில் பைத்துல்மால்  விருப்பு வெறுப்பற்ற ஒரு வலுவான மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றது .

தொகுப்பு :ஜே :ஷேக்பரீத்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)