
|

|
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 12 : கடந்த ஆச்சியில் வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் குழப்பங்கள் நடப்பதாக தமிழகம் முழுவதும் பரவலாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சாலை மறியல் போராட்டத்தை நடத்தி நாகை, திருவாரூர் மாவட்டத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் மக்கள். இதன் விளைவாக யானைக்கு சோழப்போரியை போட்ட கதையாக ருபாய் 5 ஆயிரம் நிவாரண தொகைக்கு பதிலாக 500 , 800 , 1200 என வழங்கப்பட்டது
முத்துப்பேட்டை அகஸ்ட் 08 : தெற்குத் தெரு பேட்டை ரோடு மர்ஹும் M.K. சுல்தான் முஹிதீன், மர்ஹும் M.K. காதர் முஹைதீன், மர்ஹும் M.K. ஷேக் நூர்தின் இவர்களின் தம்பி மகனும், மர்ஹும் M. காதர் உசேன் அவர்களின் தம்பியும், M.K.S பரக்கதலி அவர்களின் மைத்துனரும் M. முஹம்மத் சாதிக் ப்ரோதேர்ஸ் அவர்களின் மச்சானும், M.K. முஹம்மத் ராவுத்தர் அவர்களின் மகனுமஹிய செல்ல வாப்பா என்ற "ஹாஜா சர்புதின்" அவர்கள், நேற்று முத்தினம் இரவு 7 மணியளவில் அஜ்மான் துபாயில் மவுத்தாஹி விட்டார்கள், (இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹீ ராஜிவூன்)
ஆகஸ்ட் 07 : உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.
04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.
05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 07 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜமோநடை தர்ஹாவில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன் நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ். எஸ். பாக்கர் சாஹிப் தலைமை வகித்தார். தர்கா டிரஸ்டி. எ.தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர், திரு. முனியநாதன்.IAS. அவர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் பற்றி பேசினார். இன் நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர். கே. உலகநாதன்,முத்துப்பேட்டை ஒன்றியப் பெருந்தலைவர். கல்யாண சுந்தர தேவர், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எஸ். அருணாசலம், உள்பட பலரும் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற து. தலைவர். கே,எம், ஹனிபா, பேரூராட்சி உறுப்பினர், மெட்ரோ மாலிக், IUML, நகர செயலாளர், ஜனாப். கோல்டன் தம்பி மறைகையர், மாநில மனித உரிமை, ஜனாப்.கவிஞர். G. பசிர் அஹ்மத், பேரூராட்சி மன்ற உறுப்பினர், ஜனாப். எம்.ஜபருல்லாஹ். சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர், ஜனாப். மு.முஹைதீன் பிச்சை. தமு மு க. மாவட்ட துணை செயலாளர். ஜனாப். எல்.தீன் முஹம்மது, ஜனாப்.SDPI, தப்ரே ஆலம், ஜனாப். ஜெ. மைநூர்தின், உள்பட அனைத்து மிரமுகர்களும் கலந்து கொண்டு தர்கா முதன்மை அறங்காவலர்,எஸ். எஸ். பாக்கர் சாஹிப், நோன்பு திறக்கும் துவா ஓதி, நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.




விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போதுஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது.இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச்சொல்லித் தந்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்;கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன்தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடாகஇருக்க சுய இன்பப்பழக்கம் நிச்சயம் உதவவே செய்யாது. நோன்புநோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம்விபச்சாரத்தில் இருந்து காப்பற்றும்.
இதையும் மீறி உடலில் ரொம்ப முறுக்கு ஏறி விட்டால் தூக்கத்தில்ஸ்கலிதமாவதன் மூலம் அதற்கு அல்லாஹ் இயற்கையாக வடிகாலைஅமைத்துள்ளான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற செயலில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள்அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ளவேண்டும்.
சுய இன்பம் பற்றி விஞ்ஞானம்...!இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை பாதிக்கும் சில முறைகளை கூறினார்.
01.அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது (சுய இன்பம்)
02.உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது,
03எப்போதுமே குப்புறப்படுத்துக் கொள்வது,
04.மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது,
05.கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது.
06.பெண்களை நிமிர்ந்து பார்க்கக்கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது.
07.செக்ஸ் புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பது,
08.செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது,
09.சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம்,
10.தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
”இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.“



முத்துப்பேட்டைஆகஸ்ட் 02: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகமாகவே வசித்து வருகிறார்கள். விக்கிலீக்ஸ் என்றதொரு இணையத்தளம் தற்போது முத்துப்பேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து வெளி இட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2011 ல் மட்டும் இரண்டு மடங்கு மக்கள் தொகை வளர்ச்சி அடைத்துள்ளது என்று வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் மட்டும்தான் இந்த வளர்ச்சி என்று பார்த்தல் இல்லை குறிப்பாக கல்வி, தொழில், சமுதாய பனி, ஆகிய அணைத்து விதமான செயல்களிலும் பிற வூர்களை காட்டிலும் முத்துப்பேட்டை அதிக வளர்ச்சி கண்டு அதிக புகழுக்குரிய இடமாக மாறிவருவது மிகவும் வர வேற்கத் தக்கதே. குறிப்பாக,முத்துப்பேட்டை மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து அதனை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் களமிறங்கியது. அதில் "பேட்டை பள்ளிவாசல்" முஹல்லாவை முதலில் தேர்வு செய்து மாணவ மாணவியரின் நிலை குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டு அறிந்த செய்தியை உங்கள் முன் பார்வைக்கு கொண்டு வருகிறோம் இதோ.
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 01 : கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமைப் படுத்தக் கூடிய ஓர் ஆயுதமாகும். கல்வி கற்காத மனிதன் அரை மனிதன் என்று சமுதாயத்தில் தூற்றப்படுவான். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமதூர்முத்துப்பேட்டையில் கல்வி கற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தற்போது அல்லஹ்வின் நாட்டத்தால் அந்நிலை மாறி கல்வி கற்றோர், கர்பிப்போர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. பொதுவாகவே முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் கல்வி கற்காமலே வெளிநாட்டுக்கு சென்று சம்பதிபதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் தற்போது அந்நிலை மாறி வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அளவிற்கு நமது சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது வரவேற்க்கத்தக்கதே.முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பள்ளி, அரபு சாஹிப் பள்ளி, குட்டியர் பள்ளி, கொத்பா பள்ளி, ஜாமியா பள்ளி, முஹைதீன் பள்ளி, மதினா பள்ளி. புது பள்ளி, மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி ,ஆசாத்நகர் பள்ளி, தர்ஹா பள்ளி, ஆகிய 13 பள்ளிவாசல் அனைத்து முஹல்லா வாரியாக படிப்பவர்களின் எண்ணிக்கை குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் ஆய்வில் இறங்கியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் (ஆண், பெண்) களின் எண்ணிக்கையின் தொகுப்பை தங்களுடைய பார்வைக்கு வெளியிடுகிறோம். இன்ஷா அல்லாஹ் இதனின் தொகுப்பு வருடம் வருடம் ஆய்வில் இறங்கி உங்களுடைய பார்வைக்கு கொண்டு வருவோம் என்பதையும் இதன் மூலம் தெய்ரிவித்துக் கொள்கிறோம்.நமது நிருபர்
தொகுப்பு, ரிபோட்டர் இல்யாஸ் & ரிபோட்டர் உமர் முக்தார் &
ASNS.அப்துல் பாரி
முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மரைகாயர் தெரு மர்ஹும் ஹாஜி A.N.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மகளும் மர்ஹும் A.N.A. நெய்னா மரைகாயர் அவர்களின் மனைவியும் S.K.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மாமியாரும், A.N.A. அயுப்கான் அவர்களின் தாயாருமாகிய "உம்மா கன்னி அம்மாள்" இன்று பகல் 1 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மவுத் அறிவிப்பு, OPM. தெரு கும்மி வீடு மர்ஹும் சு.மு. ஷேக் தாவூத் அவர்களின் பேரனும், மர்ஹும் S.M. தாவூத், ஹமீது அவர்களின் மகனும், ஆசாத் நகர் கா.சு. நெய்னா முஹம்மத் அவர்களின் மருமகனும் சென்னை A. ஜைனுல் ஆப்தின், இஸ்லாம்தீன், அவர்களின் மைத்துனரும், அகமது கபீர், ஷேக் தாவூத், அப்துல் சமது, அன்வர் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ரஹ்மான், ஜாகிர் ஹுசைன், ஷாஜஹான், ஆகியோரின் சகோதரருமாகிய "முஹம்மத் ரபீக்" அவர்கள் இன்று அதி காலை 4 :30 மணி அளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைகி ராஜிவூன்).