முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடந்தது என்ன.? வெளிவராத பரபரப்பு காட்சிகளும் - செய்திகளும்:














முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்ததாகவும், மேலும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்டையிலிருந்து குட்டியார் பள்ளி வழியாகவும், தம்பிக்கோட்டையிலிருந்து புதுத்தெரு பள்ளிவாசல் வழியாகவும் பெருநாள் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், மேலும் ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகேயும் பட்டாசுகளை வெடித்து வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், இதை பார்த்த சில இஸ்லாமிய நண்பர்கள் இவற்றை தட்டிக்கேட்ட தாகவும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று இரவு இஸ்லாமிய நண்பர்கள் 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததற்கு போலிசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இன்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக வருவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இதனிடையே பிரச்சனையை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் 40க்கும்  மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றதாகவும், அப்போது அனைத்து  இளைஞர்கள் மீது போலிசார் லத்தி சார்ஜ் பண்ணியதாகவும், இதனால்  இளைஞர்கள் மீது காலில் பலமாக உள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ஆசாத் நகர் நாகூர் கனி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)மேலும் காயல் பட்டினத்தை சேர்ந்த ஓர் இஸ்லாமியரை முத்துப்பேட்டை சந்தை அருகே வைத்து பா.ஜ.க. வினர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடையாளம் தெரியாத சில பேர் நான்கு கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி வர்த்தகம் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

"இந்நிலையில் அனுமதி இன்றி பேரணியாக வந்ததற்காகவும், வன்முறையை தூண்டும் வகையில் கோசங்களை எழுப்பியதற்காகவும், மக்கள் நடமாடும் பகுதிகளில் பட்டாசு மற்றும் சக்தி வாய்ந்த வெடிகளை வெடித்து பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்திய தற்காகவும், பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி  சரியாக மதியம் 3 மணியளவில் பாப்புலர் பிரண்ட் முத்துப்பேட்டை நகரத் தலைவர் அப்துல் மாலிக், SDPI கட்சியை சார்ந்த சர்தார், மற்றும் சேக் மைதீன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. மேலும் புகார் மனு அளிக்கச்சென்ற மூவரையும் காவல்நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் பெரியக்கடைத் தெருவில் கூடினர். சிறை வைக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்யக்கோரி சரியாக 4 மணியளவில் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சரிபா வாய்ஸ் முக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் செய்த சற்று நேரத்தில் முத்துப்பேட்டையின் DSP தலமையில் காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு SDPI சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அரைமணி நேரத்திக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் சித்திக்கின் உத்தரவால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் பெரிய கடைத்தெருவில் அதிக எண்ணிக்கையில் குழுமி இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக், முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க. வினர் நடந்து கொள்கின்றனர் என்றும், இப்போது நடத்தப்பட்ட இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் சாக்கில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க. வினர் சதி செய்வதாகவும் கூறினார். மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு விளக்கம் கேட்பதற்காகத்தான் காவல் நிலையம் சென்றிருந்ததாகவும் அப்போது அங்கிருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உன்னை போட்டு தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டியதாகவும்   செய்தியாளருக்கு பேட்டியளித்தார் சித்திக்.

பின்னர் சரியாக 6 மணியளவில் 10 பேர் கொண்ட குழு காவல் நிலையம் சென்றது. அப்போது மூவரும் விடுவிக்கப்பட்டு சரியாக 7:30 மணிக்கு பெரிய கடைத்தெருவிற்கு வந்தடைந்தனர். அப்போது அங்கே குழுமி இருந்தவர்கள் நாரே தக்பீர்.! அல்லாஹ் அக்பர்.! என்று கோசங்களை எழுப்பினர்.

பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய சித்திக், இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும், இது போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் தீய சக்திகளிடமிருந்து முத்துப்பேட்டை மக்களை பாதுகாக்கலாம் என்றும் கூறினார். சரியாக 20 நிமிடங்கள் சிற்றுரை யாற்றினார் சித்திக். பின்னர் அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

இந்நிலையில் அப்துல் மாலிக், சர்தார், சேக் மைதீன் ஆகிய மூவர் மீதும் காவல்துறை வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சித்திக் மீது 4 வழக்குகளும், பா.ஜ.க மாநில செயலாளர் முருகானந்தம் மீது 1 வழக்கும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி வாகனப்பேரணி நடத்தியதற்காக SDPI கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீதும், பா.ஜ.கவை சேர்ந்த 60-க்கு மேற்பட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தர்ஹா பாக்கர் அலி தலைமையில் மனித உரிமைகள் அமைப்பின் மாநில தலைவர் G .பஷீர் அஹமது ,மமக மாவட்ட செயலாளர் மாலிக் உள்ளிட்டோர் மாவட்ட SP யை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அனைத்து தொலைக்காட்சிகளிலும் முத்துப்பேட்டையில் பதற்றம் என பரபரப்பு செய்தியாய் வெளியிட்டது. தொலைகாட்சி செய்தியின் வாயிலாக சம்பவத்தை கேள்விப்பட்ட சமூக ஆர்வலரும், மனித நேயருமான பேராசிரியர். ஆ. மார்க்ஸ் அவர்கள், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சம்பவங்களை கேட்டறிந்தார். எனவே யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க வேண்டுமென முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில்  கேட்டுக்கொள்கிறது.

களத்தொகுப்பு: ஜே.ஷேக்பரீத்
                                 M.A.journalism & mass communication
                                  Member TamilNadu Press Club
                                   Chennai.



முத்துப்பேட்டையில் ஈகைப் பெருநாள் கொண்டாட்டம்: மகிழ்ச்சி வெள்ளத்தில் இஸ்லாமியர்கள்...










முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும், கொண்டாடப்பட்டது. முத்துப்பேட்டையில் குட்டியார் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், ஆசாத்நகர் பள்ளிவாசல், TNTJ பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சரியாக 8:30 மணியளவில் அனைத்து முஹல்லா வாசிகளும் முஹல்லா  வாரியாக குட்டியார் பள்ளியை சென்றடைந்தனர். சரியாக 9:15 மணிக்கு குட்டியார் பள்ளியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து முஹல்லாவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். 

தொகுப்பு:

EK. முனவர் அஹ்மத் கான்

இந்து அறநிலையத்துறை நிகழ்ச்சியில் இஸ்லாமியர் -முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கம் !!







முத்துப்பேட்டையில் இயங்கிவரும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருடாவருடம்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது .அதே போல் இந்த வருடமும் சுதந்திர தின விழா கொண்டாட பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது .இந்த பள்ளியானது இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும் .இந்த வருடம் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 8-ஆவது வார்டின் முன்னாள் உறுப்பினர் ரசூல் பீவி என்கிற ஒரு இஸ்லாமிய பெண்மணியை கொடியேற்றி வைத்து சிறப்பிக்குமாறு அழைத்துள்ளது பள்ளிநிர்வாகம் .

முத்துப்பேட்டையில் பதற்றம்: முஸ்லிம் இளைஞர்கள் மீது போலிசார் தடியடி...


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 09: முத்துப்பேட்டையில் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப் பட்டதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்ததாகவும், மேலும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்டையிலிருந்து குட்டியார் பள்ளி வழியாகவும், தம்பிக்கோட்டையிலிருந்து புதுத்தெரு பள்ளிவாசல் வழியாகவும் பெருநாள் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், மேலும் ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகேயும் பட்டாசுகளை வெடித்து வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், இதை பார்த்த சில இஸ்லாமிய நண்பர்கள் இவற்றை தட்டிக்கேட்ட தாகவும் கூறப்படிகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

மேலும் நேற்று இரவு இஸ்லாமிய நண்பர்கள் 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததற்கு போலிசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இன்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக வருவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இதனிடையே பிரச்சனையை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் 40க்கும்  மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றதாகவும், அப்போது அனைத்து  இளைஞர்கள் மீது போலிசார் லத்தி சார்ஜ் பண்ணியதாகவும், இதனால்  இளைஞர்கள் மீது காலில் பலமாக உள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ஆசாத் நகர் நாகூர் கனி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

மேலும் காயல் பட்டினத்தை சேர்ந்த ஓர் இஸ்லாமியரை முத்துப்பேட்டை சந்தை அருகே வைத்து பா.ஜ.க. வினர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

மேலும் அடையாளம் தெரியாத சில பேர் நான்கு கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி வர்த்தகம் சங்கம் சார்பில் புகார் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)

எனவே யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க வேண்டுமென முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில்  கேட்டுக்கொள்கிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)




சமுதாய சேவையே எங்கள் லட்சியம் -அல்மஹா ஹைதர் அலி பேட்டி:

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 07: அல்மஹா அறக்கட்டளையின் நிறுவனர் ஹாஜி S .M ஹைதர் அலி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டி:

முத்துப்பேட்டையில் அல்மஹா அறக்கட்டளையின் சார்பாக இலவச மதரசாவை அல்லாஹ்வின் உதவியால் நடத்தி வருகிறோம் .
6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எங்கள் மதரசாவில் சுமார் 40 பேர் பயின்று வருகின்றனர் .

மார்க்க கல்விபாடத்தின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும் .எங்கள் மதரசாவில் மார்க்க கல்வி மட்டுமல்லாமல் இலவசமாக கணினி பயிற்சி ,இலவச தையல் பயிற்சி ,இலவச ஆசிரியர் பயிற்சி போன்றவற்றை நடத்தி வருகிறோம்


.கணினி பாடப்பிரிவில் 100- மாணவர்களும் ,டைலரிங் பாடப்பிரிவில் 100-மாணவர்களும் ,இலவசமாக பயின்று வருகின்றனர் .

அதுமட்டுமில்லாமல் ஏழை பெண்களுக்கு 5000/வீதம் வட்டி  இல்லா கடன் உதவியும் வழங்கி வருகிறோம் .

எங்கள் மதரசாவில் வகுப்பு எடுக்க ஆலிமா ஆசிரியர் தேவைப்படுகிறது. மாத சம்பளமாக 10000/ மும்  இலவசமாக தங்கும் இட வசதியும் செய்து கொடுக்கிறோம்.தகுதி உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .இவ்வாறு அல்மஹா ஹைதர் அலி கூறினார் .

சந்திப்பு :ஜே :ஷேக்பரீத் 

டைரக்டர் சேரன் ‘விரட்டி விரட்டி’ அடித்த சந்துரு யார்? : ‘அதிர்ச்சி’ தரும் விரிவான உண்மைத் தகவல்கள்! -

சென்னை, ஆகஸ்ட் 05: டைரக்டர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் தான் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் விறுவிறுப்பான பேச்சாக இருக்கிறது.

 அவர் காதலித்து வரும் சந்துரு என்பவர் தமிழ்சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டர் என்றும், டான்ஸர் என்றும், எம்.பி.ஏ பட்டதாரி என்றும் ஆளாளுக்கு ஒவ்வொரு தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் யார்..? அவரின் குடும்பப் பின்னணி என்ன..? என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் தேட நாம் விசாரித்தபோது அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.


இதோ அவரை பற்றிய விரிவான தகவல்கள் :


சந்துரு என்கின்ற சந்திரசேகரன் தமிழ்சினிமாவில் எந்த டைரக்டரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை, அவருடைய அப்பா சினிமாவில் சில காலம் வேலை பார்த்தவர். இவரது அம்மா பத்மா ஆந்திராவை சேர்ந்தவர். சந்துருவின் அப்பாவும், அம்மாவும் சினிமாத்துறையிலேயே இருந்ததால் அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவருமே கலப்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது சந்துருவின் அம்மா ஒரு இருதய நோயாளியாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.


சந்துருவின் அக்கா கெளரிக்கு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க பிரமுகர் சீனிக்கட்டியின் மச்சானான முகம்மது இலியாஸ் என்பவரோடு 8 வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு, இலியாஸை ரகசிய திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி இருந்திருக்கிறார். ஆனால் ஏன் ரகசிய திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டால் இலியாஸுக்கு கெளரி முதல் மனைவி அல்ல. முதல் மனைவி உயிரோடு இருந்தபோதே அவருக்கு இரண்டாவதாக வாக்கப்பட்டவர் தான் சந்துருவின் அக்கா கெளரி.


சந்துருவும், அவருடைய அக்கா கெளரியும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அன்பு நகரில் 7 வருடங்கள் இருந்திருக்கின்றனர். இலியாஸுக்கு சொந்தமான பொன்னி ஃபில்லிங் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் பங்க்கை இவர்கள் தான் நடத்தி வந்துள்ளனர்.


ஒருநிலையில் இலியாஸின் முதல் மனைவி, சந்துருவின் அக்கா கெளரி செய்து கொண்ட சட்டவிரோத திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கெளரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் சந்துரு, அவருடைய அக்கா கெளரி, தாய் பத்மா உள்ளிட்ட அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள். இந்நிலையில் கெளரிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.


அதன்பிறகு, சொத்தை பிரித்து தரச்சொல்லி இலியாஸை கெளரி கட்டாயப்படுத்த, கெளரியின் குணம் அறிந்த இலியாஸ், தர மறுத்திருக்கிறார்.


இதனால் டென்ஷனான கெளரி, இலியாஸ் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தன்னிடம் இருந்த ஏராளமான நகைகளை பிடுங்கிக் கொண்டதாகவும் இலியாஸ் மீது போலீஸில் போலியாக புகார் கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த இலியாஸின் உறவினர்கள் கெளரி குடும்பத்தினரை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.


அதன்பிறகு சிங்கப்பூர் சென்ற இலியாஸ் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.


உடனே, தன்னையும் இலியாஸின் சொத்துக்கு வாரிசாக ஏற்க வேண்டும் என்று உச்சிப்புளி முஸ்லிம் ஜமாத்தில் கெளரி புகார் செய்தார். ஜமாத் பிரமுகர்கள் விஷயத்தை ஆராய்ந்து, இஸ்லாமியர்கள் பின்பற்றும் தொழுகை, இஸ்லாத்தை தழுவிய பெண்கள் செய்ய வேண்டிய மத விஷயங்கள் உட்பட எந்த காரியங்களையும் கெளரி செய்யாமல் இருந்ததைக் கண்டித்தும், கெளரி இலியாஸை இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்யவில்லை என்பதை கூறியும் கெளரியின் புகாரை புறக்கணித்துள்ளனர்.


வேறுவழியில்லாத நிலையில் கெளரி, தன் தம்பி சந்துருவுடன் மீண்டும் சென்னையில் குடியேறினார். அதன்பின், சென்னையில் கெளரி மீண்டும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.


சந்துரு, தன்னுடைய 18 வயதில் அண்ணாமலை நகரில் இருந்த ஒரு முஸ்லிம் பெண்ணில் பின்னால் சுற்றியிருக்கிறார். இது தெரிந்து, அங்குள்ள கன்னார் தெரு முஸ்லிம் ஜமாத்தார்கள் சந்துருவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.


ஆரம்பத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் நடன குழுக்களில் ஆடி வந்திருக்கிறார் சந்துரு. அப்படித்தான் கலைஞர் டிவியில் கலா மாஸ்டர் நடத்திய ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் பங்குபெறும் வாய்ப்பை பெற்று நடனம் ஆடி பரிசு வாங்கியிருக்கிறார்.


மேலும் சந்துரு 10-ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாராம். மற்றபடி மீடியாக்களில் வருவதுபோல அவர் எம்.பி.ஏ. பட்டதாரி என்பதற்கான ஆதாரமோ, சினிமாவில் அவர் உதவி இயக்குனராக வேலை செய்தார் என்பதற்கான ஆதாரமோ இல்லவே இல்லை.


மானாட மயிலாட நிகழ்ச்சியில் கிடைத்த பெயரை வைத்து பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்திருக்கிறார் சந்துரு. அப்படித்தான் ஒரு கலைநிகழ்ச்சியில் தாமினியை சந்தித்து உண்மையாக காதலிப்பது போல நடித்து அந்தப்பெண்ணை மடக்கியிருக்கிறார்.


இப்படித்தான் இந்த சந்துரு என்பவரின் வாழ்க்கைப் பின்னணி இருந்து வந்திருக்கிறது.


இந்த விசயங்களை முன்னிறுத்தி தான் தன் மகள் சந்துருவை காதலிப்பதை எதிர்த்து வருவதாய் இயக்குநர் சேரன் தெரிவிக்கிறார்.


கல்லூரி தோழர்கள் இருவர்: முன்னணி இயக்கத்தின் பொது செயலாளர்கள்!!!

சென்னை, ஆகஸ்ட் 05: சென்னை புதுக்கல்லூரியில் பயின்றவர்கள் தான் இந்த இருவரும் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே சமுதாய உணர்வோடு முஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து சமுதாய இளைஞர்களை ஒன்றிணைத்து பல நல்ல காரியங்களை ஒன்றிணைந்து இந்த இருவரும் செய்து வந்தனர் .முஸ்லிம் லீக்கின் குடும்பத்தில் பிறந்தவரான அபூபக்கர் அவர்கள் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்து 1999ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டில் பல இளைஞர்களை ஒன்றிணைத்த பெருமை அபூபக்கர் அண்ணன் அவர்களையே சாரும் .


துடிப்போடு என்றும் உலா வரும் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் 1995 உருவாக்கப்பட்ட தமுமுகவில் இனைந்து பல போராட்டங்களில் பங்கேற்று சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னை உட்படுத்தியுள்ளார் .அபூபக்கர் அவர்கள் எதையும் பொறுமையோடு அறிவோடு கையாளும் பக்குவம் உடையவர் காரணம் இவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமது அவர்களின் அரசியல் வழியில் வந்தவர் .சகோதரர் தமீமுன் அன்சாரி ஒரு சிறந்த பேச்சாளர் இன்று இளைஞர்கள் அவரின் பேச்சில் சமுதாய உணர்வு இருக்கிறது நாமும் சமுதாய பணியாற்றணும் என்ற சிந்தனை இளைஞர்களிடத்தில் வந்துள்ளது .


இருவரும் சமுதாய முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பியதால் அல்லாஹ் இவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகளை வழங்கி சமுதாய பனி ஆற்ற வைத்துள்ளான் ஆகவே தான் இன்று முஸ்லிம் லீக் பொது செயலாளராகவும் மத்திய அரசின் மதரசா மேம்பாட்டுக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயல்படும் அண்ணன் அபூபக்கர் அவர்கள் இன்றும் முஸ்லிம் மாணவர் பேரவையில் எங்களை போன்ற நிர்வாகிகள் சமூகப்பணிகளை செய்ய சிறப்பாக வழி காட்டிவருகிறார் .


பேச்சால் உணர்வால் இன்று மமக வின் பொது செயலாளராக சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார் சிராஜுல் மில்லத் அவர்களின் மீது இன்றும் தனி ஒரு மரியாதையை சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் வைத்திருக்கிறார் காரணம் முஸ்லிம் லீக் தலைவர்களின் சமுதாய உணர்வும் தியாகமும் தான் என்றால் அது மிகையாகாது .


இந்த இரு கல்லூரி நண்பர்களும் இயக்கங்களில் வேறுபட்டிருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள் அல்லாஹ் இவர்களின் சேவைகளை பொருந்தி கொள்வானாக …..ஆமீன் !
குறிப்பு :என் மனதிற்கு தோன்றியதை எழுதினேன் இவர்களைப்போல் இயக்கங்களில் வேறுபட்டாலும் சமுக பணிகளில் நண்பர்களாய் ஒன்றிணைவோம் இன்ஷா அல்லாஹ்
என்றும் உங்கள் சகோதரன் :

தகவல் ;கீழக்கரை சமீர் 
                 புதுக்கல்லூரி மாணவர் 

நோன்பிருந்து இஃப்தார் நடத்திய திருமாவளவன், அரசியல் வாதிகளில் மாற்று முகம்..







சென்னை, ஆகஸ்ட் 02: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுத்தார். சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த இப்தார் நிகழச்சி நடைபெற்றது. கடந்த 9 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் 3 நோன்பிருந்து இப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். திருமாவளவன் நேற்று நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

நேரடி களத்தொகுப்பு: ஜே. ஷேக் பரீத்


தயாநிதிமாறன், ஜிகே மணி, கிருஷ்ணசாமி ஆகியோருடன் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள ஆசிரியர் சந்திப்பு:


சென்னை, அகஸ்ட் 01: முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரும் சன் குழும முக்கிய நிர்வாகிகளுள் ஒருவருமான தயாநிதிமாறன் ,பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, புதிய தமிழகம் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி ஆகியோருடன் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின்  முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான ஜே. ஷேக் பரீத் சந்தித்து பேசினார் .










தயாநிதிமாறனிடம் பேசும்போது "மீடியாக்கள்  முஸ்லிம்களை  திட்டமிட்டே
தீவிரவாதிகளாக சித்தரிப்பதாகவும் ,இது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் ,இதுபோன்ற நிகழ்வுகள் சன் தொலைக்காட்சியிலும் தொடர்வதாகவும் எடுத்து கூறினார் .




பாமக தலைவர் ஜீகே மணியுடன் பேசும் போது "காதல் நாடகத்தை கண்டிக்கும் உங்கள் கட்சி தலைமை " ஆர் எஸ் எஸ் ,பாஜக ,இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் பொதுக்கூட்டங்களில் "இஸ்லாமிய பெண்ணை காதலிக்க வேண்டும் என கட்டளையிடுகிறார்கள் .ராமகோபாலன் போன்றோர் "இஸ்லாமிய பெண்ணை எவர் காதலித்து திருமணம் செய்கிறாரோ அவருக்கு "ஒரு லட்சம் "ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறுவதை உங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டிக்க தயங்குவதேன் என்று கேள்வி எழுப்பினார் .






புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் "உங்களுக்குள்ளேயே பள்ளர் என்றும் பறையர் என்றும் இரு பிரிவுகளை வைத்துகொண்டு சாதி மறுப்பை பற்றி பேசுகிறீர்கள் .நீங்கள் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுடன் இணைந்து பணியாற்றினால் இன்னும் சாதிக்கலாம் என்று கூறினார் .

தகவல்: கீழக்கரை, சமீர்
புதுக்கல்லூரி மாணவர்... 

பாஜக வினர்தான் என்னை வெட்டினார்கள்; வெற்றி பரபரப்பு பேட்டி:


முத்துப்பேட்டை, ஜூலை 30: விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  திருவாரூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் வெற்றி. இவருக்கு  இஸ்லாமிய இளைஞர்களின்  பழக்க வழக்கம் அதிகம் .இவர் மர இழைக்கும் ஆசாரி தொழில் செய்து வருகிறார். கடந்த  5 ஆம் தேதி 4 பேர் கொண்ட மதவெறி கும்பல் வெற்றியை அரிவாளால் மிக கொடூரமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.

இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்த வெற்றியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாதாகவும், ஆனால் காவல்துறை, தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்,முதலில்முதல் கட்ட போராட்டமாக  சாலை மறியல் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை காவல் துறை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக  தெரிகிறது.

கொலைவெறி கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள், தனது இரண்டாம் கட்ட போராட்டத்தை கையிலெடுத்து  "மயான கொட்டகையில்" சாகும் வரை உண்ணாவிரத  போராட்டத்தை மேற்கொண்டனர் . உண்ணாவிரத போராட்டம் இருந்தவர்களை வழுக் கட்டாயமாக காவல்துறை வெளியேற்றியது.

இரண்டுகட்ட போராட்டங்களிலும் நீதி கிடைக்காத காரணத்தினால் மனவுளைச் சலடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் இரண்டு பேர்  செல் போன் கோபுரத்தின்  உச்சிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர்.

நடைபெற்ற அத்தனை சம்பவங்களின் உண்மையும், பின்னணியையும் பற்றி   நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் விளக்கியுள்ளார் வெற்றி.

வெற்றியின் பரபரப்பு பேட்டி விரைவில் வீடியோ வடிவில் காணத் தவறாதீர்கள்.

சந்திப்பு: ஜே: ஷேக்பரீத்

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "கொய்யா" முஜாஹிதீன் அழைப்பு...



முத்துப்பேட்டை,ஜூலை 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

M. முஹம்மது முஜாஹிதீன் (ஆலிம்) ஸலாஹி..
Managing Director of Nana Motors 

முத்துப்பேட்டையில் இந்துக்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி- ஆத்மநாதன், வீரசேகரன் ஆகியோரின் மனிதநேயம்!!!


















முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் கட்சியை சார்தவர்கள் தற்பொழுது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஒரு வணிக நிகழ்ச்சியாகவும், முஸ்லிம்களை ஏமாற்றும் நிகழ்ச்சியாகவும் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில்,  இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் சேர்ந்து இஸ்லாமியர்களுக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தியிருப்பது மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில்இருந்தது .

முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்தவர் நடுப்பண்ணை என்கிற ஆத்மநான். அதே போல் உப்பூரை சேர்ந்தவர் வீரசேகரன் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக தமிழக மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் G. பஷீர் அஹமது அவர்கள் "இஸ்லாமும் மனித நேயமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், இளைஞர்களும், பெரியோர்களும் பாகுபாடின்றி திறந்த மனதுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். சரியாக 6:40 மணியளவில் கொய்யா மகாலில் உள்ள முதல் தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் நோன்பு திறப்பதற்காக கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.

 கீழ்தளத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக பேரிதம்பழம் , நோன்பு கஞ்சி, கடல் பாசி, கேசரி, சமூசா, போன்ற உணவுப்பொருட்கள் வரிசையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நோன்பு திறந்தவுடன் இங்கு மக்ரிப் தொழுகையும் நடைபெற்றது. அதன் பின்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களான ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன்  ஆகியோரை அனைவரும்  மனமார வாழ்த்தி ஆர தழுவி இருவரையும் இறைவனிடத்தில் பிரார்த்தனை  செய்ததாகவும் கூறினார்கள். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகிய இருவரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு கூட்டாக அளித்த பேட்டி பின்வருமாறு: 

எங்களுக்கு இந்து நண்பர்களைவிட இஸ்லாமிய நண்பர்கள் தான் அதிகம் என்றும், நான் வசித்து வரும் ஜாம்புவோனோடை பகுதியில் ஒரு சிலர் மத துவேசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என்றும், நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அவர்களுக்கு பாலூட்டி வளத்தவர் ஓர் இஸ்லாமிய தாய் ஆய்ஷா பேகம் என்பதை நாங்கள் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். என் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாமியர்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.மாற்று மத சகோதர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 500 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


நேரடி களத்தொகுப்பு :ஜே:ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)