முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் :சென்னை மற்றும் மதுரை திணறியது !!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ .எஸ்.இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் முஹம்மது ரசின் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் , இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனீஃபா இந்திய கம்யயூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் அ.ச. உமர் பாருக் , அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ்.மணி,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்( NWF) மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மதுரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார்.

எஸ் .டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது,மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப்,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயீ,நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ரஜியா பேகம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கனி அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள்

1.தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது.மேலும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

2.தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

3.நடைபெற்ற அனைத்து குற்றங்களையும்,முஸ்லீம்கள் தாம் செய்திருப்பார்கள் என்ற தவறான கோணத்தில் விசாரிக்காமல்,நடுநிலையான,நேர்மையான மனநிலையோடு காவல்துறையும்,உளவுத்துறையும் விசாரணை நடத்த வேண்டும்.

4.கருப்புச்சட்டமான யு.ஏ .பி.ஏ சட்டத்தை (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்) தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

5.ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களுக்கு தடை விதிக்கும் போக்கு மாற வேண்டும்.

6.வட மாநிலங்களில் செயல்படுத்தி வந்த தீவிரவாத நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.சட்டத்திற்கு முரணாக செயல்படும் காவல்துறையினர் ,மற்றும் உளவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும்,காவல் புகார் ஆணையம் ஒன்றை உடனே அமைக்க வேண்டும்.என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.

ஆகிய தீர்மானங்களை முன்வைத்து சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் தொண்டர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

2 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration

3 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration
தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல் களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்!
Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration





 









செய்தி :ஜே .ஷேக் பரீத் 

முத்துப்பேட்டை தீ விபத்து -மனிதநேய பணியில் SDPI

முத்துப்பேட்டை நெயயக்காரத் தெருவில் 29.9.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 4.10.2013 அன்று ஜும்மாவில் SDPI கட்சி சார்பாக நிதி வசூல் செய்யப்பட்டு பாதிக்க  பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.





இதற்கு பொறுப்பு தாரியாக நியமிக்க பட்ட பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியாவின்  மாவட்ட தலைவர் A.அபு பக்கர் சித்திக் அவர்கள் வழங்கினார்கள்.அப்பொழுது ஆசாத் நகர் ஜமாதார்களும்,SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முஹமது மற்றும் முத்துப்பேட்டை நகர தலைவர் முஹமது மைதீன்,துணை தலைவர் நிசார் செயலாளர் ஷைக் மைதீன் மற்றும் கிளை பொறுப்பு தாரிகளும், SDPI கட்சியின் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

தகவல் :மைதீன் 

சிறுவனின் கண்ணை குருடாக்கிய சமூகவிரோதிகள்...





சென்னை, புதிய தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள ரிச் தெரு(ரேடியோ மார்க்கெட்)விற்கு பின்புறம் உள்ள ஜாமியா தஜ்வீதுல் குர்ஆன் என்ற பெயரில் மதரசா இயங்கி வருகிறது.அதில் வடநாட்டு சிறுவர்கள் மார்க்க கல்வி பயின்றுவருகின்றனர்.

இன்று(1.10.13)மாலை 4.30 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லியை தொடர்பு கொண்ட ரிச் தெருவில் உள்ள வியாபாரி அலி பிகாரை சேர்ந்த மார்க்க கல்வி பயிலும் ஒரு சிறுவனின் கண்ணை நேற்று(30.9.13)சமூக விரோதிகள் கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் குருடாக்கிவிட்டதாகவும்,குற்றவாளிகளை இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நிலைமையை அறிந்து கொள்வதற்காக மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லி தலைமையில் விரைந்தோம்.மதரசா நிர்வாகிகள் மற்றும் பாதிக்கபட்ட மாணவனின் தந்தை ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் நம்மை வருத்தமடைய செய்தது.நேற்று மாலை 4.00 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு சரியாக ஒரு நாள் ஆகியும் இதுவரை எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்பதுதான் அந்த வேதனையான விஷயம்.

தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மாணவனின் தந்தைக்கு தைரியம் கொடுத்து புகார் கொடுக்க சம்மதிக்க வைத்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தமுமுக நிர்வாகிகளுடன் மாணவனின் தந்தையை புகார் கொடுக்க அனுப்பிவிட்டு,மதரசா நிர்வாகிகளுடன் மருத்துவமனை சென்றோம்.

சிகிச்சை பெற்றுவரும் மாணவன் நம்மிடம் கூறியதாவது:"எனது பெயர் முஹம்மது சபீர்(வயது:15)நான் நேற்று வழக்கம் போல் மார்க்க கல்வி படித்து விட்டு மாலையில் மதரசாவிற்கு பின்புறம் உள்ள மே தின பூங்காவில் கிரிக்கெட் விளையாடினோம்.அப்போது பக்கத்து சேரியில் உள்ள சிலர் எங்கள் மீது கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் தாக்கினார்கள்.அதில் ஒருவன் என் கண்ணை குத்தி குருடாக்கிவிட்டான் அவனை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன்" என்றான்.

ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் புகார் அளிப்பது முதன்மையான கடமை என்று உணர்ந்து கொள்ளவேண்டும். காவல்துறை தரப்பில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

காவி கிரிமினல்களின் பின்னணியில் காக்கி கிரிமினல்கள்

அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப்படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச  நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர்  தாக்கல் செய்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். “”சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது”  என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
“”பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை” என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது  கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை.  இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.
“”சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் வாங்கிவிட்டதாக” அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.
சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட் சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக்பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும்  விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.
“”சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரைமறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்” என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக்கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர்.  பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இதுபற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.
பின்னர் 2005இல் சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “”இந்தப் போலி மோதல் கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.
பிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதாபாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு  மாற்றியிருக்கிறார் மோடி.  “”தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக”  கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான்.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !தற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ் பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.
2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார்.
மோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.
குஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான  குஜராத்  வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டு விட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின்அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க் சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் “இரகசிய அறிக்கை’யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின் அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மின் அஞ்சல்களின் பிரதிகளை ஆவணங்களாக முன்வைத்திருக்கிறார், சஞ்சீவ் பட். (இந்துஸ்தான் டைம்ஸ், 23.10.2011)
கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து கொண்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கு கிரிமினல் வேலை செய்திருக்கும் யோக்கிய சிகாமணியான துஷார் மேத்தா, தன்னுடைய மின் அஞ்சல்களைச் சட்டவிரோதமான முறையில் திருடிவிட்டதாக சஞ்சீவ் பட்டின் மீது அகமதாபாத் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் (தி இந்து, 24.10.2011). மின் அஞ்சல் குறித்து கேள்வி எழுப்பிய இந்துஸ்தான் டைம்ஸ் நிருபரிடம் “நினைவில்லை’ என்று பதிலளித்திருக்கிறார், என்.ராம். “”உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்திருக்கிறார், குருமூர்த்தி.
சஞ்சீவ் பட்டைத் தொடர்ந்து மோடி அரசால் பழிவாங்கப்பட்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா. 2002 இனப்படுகொலைக்குப் பின்னர் அகமதாபாத் நகரின் கட்டுப்பாட்டு அறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் ராகுல் சர்மா. தனக்கு ஒதுக்கப்பட்ட புலனாய்வுப் பணியின் அங்கமாகப் படுகொலை உச்சத்தில் இருந்த பிப்ரவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான நாட்களில் அகமதாபாத் நகரின் கைபேசி உரையாடல் விவரங்கள் அனைத்தையும் தனியார் செல்பேசி நிறுவனங்களிடமிருந்து திரட்டி, கமிசனர் பி.சி.பாண்டேயிடம் அந்தக் குறுந்தகடை அவர் ஒப்படைத்திருந்தார். அந்தக் குறுந்தகட்டின் நகல்களை நானாவதி கமிசன், பானர்ஜி கமிசன், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய அனைவருக்கும் ராகுல் சர்மா கொடுத்து விட்டார். இதன் விளைவாக, அமைச்சர் மாயா கோத்னானி, விசுவ இந்து பரிசத் செயலர் ஜெய்தீப் படேல் ஆகியோர் கொலை வழக்கில் சிக்க நேர்ந்தது.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !இனப்படுகொலை நடந்த பிப். 28ஆம் தேதியன்று மோடி, ஜெய்தீப் படேலுடன் 5 முறையும், போலீசு கமிசனர் பாண்டேயுடன் 15 முறையும் பேசியிருக்கிறார். காலை 11 மணி முதல் நகரம் எரியத் தொடங்கிவிட்ட போதிலும், கமிசனர் மாலை 7 மணி வரை அலுவலகத்தை விட்டு வெளியே இறங்கவில்லை” என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் கொலை செய்யப்பட்ட அமைச்சர் பாண்டியா. இந்தத் தொலைபேசி விவரங்களை விசாரணைக் கமிசன்களுக்குக் கொடுத்த ராகுல் சர்மாவின் மீது “அரசாங்க இரகசியத்தை’ அம்பலமாக்கியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது , மோடி அரசு.
இனப்படுகொலையின் மையமாக இருந்த அகமதாபாத் நகரின் அன்றைய கமிசனர் பி.சி.பாண்டே, பின்னர் குஜராத்தின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். மோடியின் கையாளான பாண்டே, சோரபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் விசாரணையில் தலையிட்டது மட்டுமின்றி, துளசிராம் பிரஜாபதியைக் கொல்வதற்கும் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்று எழுத்துபூர்வமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார் டி.ஐ.ஜி. ரஜனீஷ் ராய். சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து, வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளையே கொலை வழக்கில் கைது செய்தவரான ரஜனீஷ் ராயை, பதவி இறக்கம் செய்ய முனைந்திருக்கிறது, மோடி அரசு.
சட்டப்படியும் மனச்சான்றின்படியும் நடக்க முயன்ற எந்தவொரு அதிகாரியையும் மோடி விட்டுவைக்கவில்லை. 2002 இனப்படுகொலையின் போது இந்து மதவெறிக் காலிகளைக் கைது செய்து இனப்படுகொலை நடக்காமல் தடுத்த விவேக் ஸ்ரீவத்ஸவா, ஹிமான்ஷு பட், எம்.டி. ஆன்டனி, பி.சி.தாகூர், குல்தீர் சர்மா போன்ற பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். மோடியையும் தொகாடியாவையும் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தி போலீசால் கொல்லப்பட்ட  இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணின் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் சந்திர வர்மா,  “”கொலை செய்யப்பட்ட அந்த அப்பாவிப் பெண்ணைப் பயங்கரவாதி என்று சித்தரித்து வழக்கை மூடுவதற்குத் தனது உயரதிகாரிகள்  முயற்சிப்பதாக” குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமே தாக்கல் செய்திருக்கிறார்.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !
மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. இதில் பட்டியலிடப்படாத இன்னும் பல அதிகாரிகள் மோடி அரசால் வேட்டையாடப் பட்டிருக்கின்றனர். மோடி ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன விவரங்கள் நமக்குத் தேவையில்லை.  அந்தக் குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க முயலும் நேர்மையான அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு இந்த விவரங்கள் தேவை.
ஜெயலலிதாவிடம் எம்.எல்.ஏ. நாற்காலிகளை இரந்து பெற்று, வெட்கமே இல்லாமல் மோடியின் பக்கத்து நாற்காலியில் இளித்துக் கொண்டு அமரும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் போன்ற பதர்களுக்கு மத்தியில், தனது உயிரையும் பணயம் வைத்து நீதிக்காகப் போராடும் சில போலீசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள இவ்விவரங்கள் நமக்குத் தேவை.
சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நடுநிலை என்று ஊர்நாயம் பேசும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள், எல்லா விதமான கிரிமினல் வேலைகளிலும் ஈடுபடத் தயங்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவ்விவரங்கள் தேவை. அரசு அதிகாரத்தை பார்ப்பன பாசிஸ்டுகள் கைப்பற்றினால், மேலிருந்து கீழ் வரை அதனை எப்படி கிரிமினல் மயமாக்குவார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இவ்விவரங்கள் நமக்குத் தேவை.
இவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும்  எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே!

மண்ணடியில் இஸ்லாமியர் மீது மதவெறி கும்பல் தாக்குதல் -"சமூக பதட்டத்தை தணித்த ஐஎன்டிஜே - தமுமுக"

சென்னை மண்ணடி பகுதியில் உள்ள த.மு.மு.க அலுவலகம் அருகில் ஒரு இஸ்லாமிய இளைஞரை மதவாதிகள் தாக்கினார்கள். இந்த செய்தி வெளியான உடன் முஸ்லிம்கள் குவியத் தொடங்கினர்கள். செய்தி அறிந்த காவல்துறை சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

   இந்நிலை பிரச்சனையை கேள்விபட்ட INTJ மாநிலத் தலைவர் S.M.பாக்கர் தலைமையில் பொதுச் செயலாளர் சையது இக்பால், மாநிலச் செயலாளர் பிர்தவ்ஸ், மாவட்ட, கிளை நிர்வாகிகளும், த.மு.மு.க மாநில தலைவர் J.S. ரிபாயி தலைமையில் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

   காவல்துறை அதிகாரிகளிடம் சம்மந்தபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முறையிட்டனர். காவல்துறை மாவட்ட கண்கானிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக ஒப்புதல் அளித்தார். பிறகு உணர்ச்சி மிகுந்த சமூகச் சொந்தங்கள் இரு இயக்கத்தின் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று கலைந்து சென்று கண்ணியம் காத்தனர்.



    பின்னர் த.மு.மு.க அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளை அழைத்து சமூகத் தலைவர்கள் கோவை, ராமநாதபுரத்தில் இந்துத்துவாவினர் ஏற்படுத்திய பதட்டத்தை சென்னையில் உருவாக்க இது போன்ற செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை செய்தனர் தமிழகம் முழுவதும் இது போன்ற பதட்டத்தை மதவெறிய பாஸிச சக்திகள் அரங்கேற்ற காத்து இருக்கிறார்கள். 

   காத்திருக்கும் நிலையில் சமயோசிதமாக இரு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்து பதட்டத்தை தணிக்க, கோபத்துடன் இருந்த முஸ்லிம்களை அமைதி காத்து கலைந்து செல்ல வைத்தனர். 

தகவல் -ஜே ஷேக் பரீத் 

அதிரையில் பயங்கர தீ விபத்து -தாமதமாக வந்த தீயணைப்பு துறையினருக்கு மண்டை உடைப்பு !

அதிரை தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்மார்கெட்டில்நேற்று இரவு 10:30 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 6க்கும் மேற்பட்ட கடைகள் முற்றலும் சேதம் அடைந்தது.மேலும் இதனை  தொகுதி MLA திரு. ரெங்கராஜன் அவர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார். 

இதன் காரணமாக ஊர் முழுதும் மின்தடை ஏற்பட்டுள்ளது .
தாமதமாக வந்த தீயணைப்பு வீரருக்கு மண்டை உடைப்பு .மார்கெட்டில் உள்ள காவன்னா கடையின் அடுமனை முற்றிலும் எரிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது

மேலும் INTJ நகரத்தலைவர் கமால்-ன் உணவகம் எரிந்துள்ளது அருகில் உள்ள தொப்பி கடை மற்றும் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை எரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது அதிரையில் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொண்டுள்ளனர்.

தற்பொழுது மின்வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது .காயமடைந்த தீயணைப்பு அதிகாரி அதிரை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சரியாக 11: 35 (எல்லாம் அணைந்த பின் )மணிக்கு பேராவூரணியிலிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் தற்பொழுது வந்துள்ளது.













முத்துபேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக தற்காலம் பொறுப்பு ஏற்ற முஹம்மது இப்ராஹிம்




திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை பேரூரா
ட்சி செயல் அலுவலராக தற்காலம் பொறுப்பு ஏற்று உள்ள திரு முஹம்மது இப்ராஹிம் முத்துபேட்டை பேரூராச்சியில் நடந்தேறிய ஊழல்களை ஒவௌன்ற்றாக வெளி கொண்டு வருகிறார் 

முதல் கட்டமாக ட்ராக்டர் ஓட்டுனர் பனி நியமனம் அரசு விதிகளுக்கு உட்பட்டு பனி நியமனம் செய்ய படவில்லை ஓட்டுனர் பனி நியமனத்திற்கு 4 வருட முன் அனுபவமும் வேலை வாய்ப்பு அலுவலக த்தின் மூலம் பதிவு பெற்ற சான்றிதழும் தேவை ஆனால் தற்போது பணியில் இருக்கும் ஓட்டுனர் 4 மாதத்திற்கு முன்தான் ஓட்டுனர் உரிமம் பெற்று உள்ளார் மாவட்ட ஆச்சியர் அவரிடம் இருந்து பெற பட்டதாக சொல்ல படும் ஆணை செல்லாது என்று தடா லடியாக 
அறிவித்து விட்டார் இதனால் பேரூராச்சி பரபரப்பாக காணபடுகிறது இவரை மாவட்ட ஆசியர் கோரடாசேரி பேரூராச்சிக்கும் இவரே செயல் அலுவலராக செயல் பட அனுமதி அளித்து உள்ளார் 

Thanks : பஷீர்

திருவாரூர் மாவட்ட SP: நேரில் சந்தித்த தமுமுக வினர்..



  • முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! !
    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் கடந்த 17 ம் தேதி நடைபெற்றது .இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமகாவும் கோஷங்கள் எழுப்பபட்டன. அதோடு காவல்துறை விதித்த நேரமும், நீதிமன்ற ஆணையையும் அவமதித்தும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதாமகவே ஊர்வலம் வரபட்டது. அதோடு இத்ரீஸ் என்பவர் வீட்டின் மீதும் கலவர நோக்கில் கற்களை எறிந்து சென்றுள்ளனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமுமுக சார்பில் 25-09-2013 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.
    இந்சந்திப்பில் நூர்தீன் மாவட்ட தலைவர் தமுமுக , முகம்மது மாலிக் மாவட்ட செயலாளர் மமக , நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக, வக்கீல் தீன் முகம்மது நகர செயலாளர் மமக, முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக, முகம்மது தாவுது முன்னால் நகர தலைவர் தமுமுக மற்றும் சமூக ஆர்வலர் சேட்டு நஜீம், பாட்ஷா உடன் இருந்தார்கள்...

    Thanks For

    Muhaitheen

கண்மணிகளே இந்த நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்....!!


இந்த புகைப்படத்தில் காணப்படும் சுஷ்மிதா என்ற பெண் தன்னுடைய முகநூலில் தம்முடைய போட்டோவை பதிவேற்றம் செய்திருந்தார்.
காமத்தின் சகதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கயவர்கள் சுஷ்மிதாவின் போட்டோவை வைத்து பல்வேறு போலி முகநூல் கணக்கு திறந்து...
இவர் விலை மாது என்று விளம்பரம் செய்து சமுதாயத்தில் இழிவை ஏற்படுத்தியிருந்தார்கள்.
தான் இழிவுப்படுத்தப்பட்டதை அறிந்த பெண்ணும், இந்த பெண்ணின் குடும்பத்தினரும் தற்கொலையை தேர்வு செய்து...
இந்த மாபாதக முடிவுக்கு வந்து விட்டார்கள்.
கண்ணியமாக வாழ்ந்து வரும் சமுதாய கண்மணிகளே... எத்தனையோ முறை சொல்லிவிட்டோம் உங்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்று...
வாழும் உலகில் இந்த பெண்ணை போன்று நீங்களும் உங்களது வாழ்வை தொலைக்க வேண்டுமா ? என்பதை நீங்களே சிந்தனை செய்து 
கொள்ளுங்கள்.

திருவாரூர் மாவட்ட SP காளிராஜ் மகேஷ்குமாரை நேரில் சந்தித்த TNTJ


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை சார்பாக  ஊர்வலத்தில் வரம்பு மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்னும் சில கோரிக்கைகளை முன்னிருத்தியும் 28.09.2013 அன்று  திருவாரூர் மாவட்டகாவல்துறை   கன்கானிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை நேரில் சந்தித்து வலியுருத்தப்பட்டது

இது சம்மந்தமாக எஸ்பியை சந்திக்க போன குழுவிற்க்கு தலைமை தாங்கி போன கிளை உதவி தலைவர் கட்டி நாநா அவர்கள் நம்மிடம் எஸ்பியை சந்தித்த போது நடந்தது என்ன என்பதை விளக்கினார்

நாம் போய் எஸ்பியை சந்திந்ததுமே அவர் நம்மிடம் அந்த வரம்பு மீறிய ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டதாக கூறினார்

மேலும் அவர் கூறுகையில் இரவு நேரத்தில் இருட்டில் பிரச்சனை செய்யலாம் என்று திட்டம் போட்டுதான் நேரம் கடந்து வந்திருப்பார்கள் என்பதை ஒத்து கொண்டார்

இந்த நிலை வரும் வருடங்களில் நீடிக்காமல் இருக்க தவ்ஹித்ஜமாத் வலியுறுத்தும் இரண்டு ஆலோசனைகளான 1. மன்னார்குடி ரோடு வழியாக இசிஆர் ரோட்டில் போகவேண்டும் 2. காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள் ஊர்வலத்தை முடித்துவிட வேண்டும்  என்பதை கூறினோம்

மிகவும் சரியான ஆலோசனை இதை அமல்படுத்தினாலே பெறிய அளவிலான  டென்சன் குரைந்துவிடும் இதை நடை முறை படுத்த முயற்ச்சிப்பதாக வாக்குறுதியளித்தார்

இதுவல்லாமல் இன்னும் சில வேலைகளையும் தவ்ஹித்ஜமாத் சட்டபூர்வமாக செய்துவருகிறது அதன் முழு விபரம் இப்போது கூற இயலாது இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நீங்களும் துவா செய்யுங்கள் என்று நமது இனையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் தீ விபத்து.






முத்துப்பேட்டை, செப்டம்பர் 30: முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் தீ விபத்து. மலர் என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி 2 வீடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது. தீ ஏற்பட்டவுடன் தீயனைப்பு வாகனங்கள் வரமுடியாத அளவிற்க்கு குருகிய சந்துகளாக உள்ளதால் மிகவும் சிக்கலாகிவிட்டது. மாடியில் உள்ள கொட்டகை 2 ம் சேதமாகி உள்ளது.
இருந்தாலும் நம் இளைஞர்கள் துருதிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நம் இளைஞர்கள் கலத்தில் இரங்கி வேலை செய்யாவிட்டால் தீயினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அதிகமாகி இருக்கும்.
படத்தில் உள்ள வீடு மர்ஹூம் .நூர்முஹமது அவர்கள் வீடு. மலர் வீடும், பாடகர் தம்பி வீடும் முற்றிலும் சேதம். இவர்கள் குடி இருந்தது வாடகை வீடாகும். மலரும், பாடகர் தம்பியும் நெருப்பு எரியும் போது ஊரில் இல்லை
Thanks to Jahabar Sathik.

முத்துப்பேட்டை அருகே திருமண ஆசைக்காட்டி பிளஸ்–2 மாணவி கற்பழிப்பு: வாலிபர் மீது போலீசில் புகார்

முத்துப்பேட்டை, செப். 28–
முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை அங்காளம்மள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் ரம்யா (வயது 19). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் சுகுமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சுகுமார் ரம்யாவை திருமணம் செய்வதாக ஆசை காட்டி அவரை கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சுகுமார் ரம்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இனியும் தாமதித்தால் அவமானப்பட நேரிடும் என்பதை அறிந்த ரம்யா தன்னை சுகுமார் ஏமாற்றி கற்பழித்து விட்டது பற்றி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுகுமாரை தேடிவருகின்றனர்.

திருச்சியில் பாஜக வினரே பேனரை கிழிக்கின்றனர் -மகஇக சந்தேகம்

நேற்று மாலை நரேந்திர மோடியின் வரவைக் கண்டித்து எமது அமைப்புகளின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், குறிப்பாக முசுலீம்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இக்கூட்டத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். மோடி வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற சூழலில் மோடிக்கு எதிராக பல்லாயிரம் பேர் திரண்ட இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று பொதுக்கூட்டம் நடக்கும் போதே ஆத்திரமூட்டி மோதலைத் தூண்டும் வகையில் வேனில் குறுக்கும் நெடுக்குமாக கோஷமிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று மோதலை உருவாக்க முயன்றனர். இவற்றை எல்லாம் முறியடித்து அமைதியான முறையில் நேற்றைய கூட்டத்தை நடத்தி முடித்தோம்.

இதனை சகிக்க முடியாமல், தமது வளமையான பொய்ப் பிரச்சாரத்தையும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியையும், இன்று காலை பாஜகவினர் தொடங்கி விட்டனர். இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான

தாக்குதலை நடத்துவதன் மூலம், அமைதியான சூழல் நிலவும் திருச்சியில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முயற்சிக்கின்றனர்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மிகவும் சாதாரணமான ஒரு ஜனநாயக உரிமை. ஆனால், தங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது எமது அமைப்புத் தோழர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதல் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. அமைதியான தமிழகத்தை குஜராத்தைப் போன்ற ஒரு கலவர பூமியாக மாற்றும் முயற்சி இது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

மதக்கலவரத்தை தூண்டும் குற்றத்துக்காக பாஜக தலைமையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.

மருதையன்,
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

ஆர்எஸ் எஸ் -பாஜக வை வீழ்த்த இனி கடுமையாக உழைப்பேன் -மனுஷ்யபுத்திரன் ஆவேசம்

சங் பரிவாரின் கடை நிலை ஊழியர்கள் நேற்று புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியிலும் என்மீதான தனிப்பட்ட வன்முறை தாக்குதலை தொடர்ந்தார்கள். விவாதம் சமூக வலை தளங்கள் வகுப்பு வாத சக்திகளால் பயன்படுத்தப்படுவது பற்றி. நவீன டிஜிட்டல் யுகத்தில் எவ்வாறு கருத்து சுதந்திரத்திற்கான இந்த ஊடகம் பெருமளவுக்கு அதிகார வர்க்கத்தாலும் சமூக விரோத இயக்கங்களாலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தேன். வகுபுக் கலவர்ங்கள் வெறுமனே சமூக வலைத்தளங்களால் தூண்டப்படுவது அல்ல என்பதையும் முன் வைத்தேன். 

ஆனால் நம்பி நாராயணன் என்ற நபர் ஆரம்பித்தைலிருந்தே இதை பா.ஜ.க சம்பந்தமான விவாதமாக மாற்ற முயறசித்தார். இது வழக்கமான ஒரு தந்திரம். எதைப் பற்றி பேசினாலும் மோடியைப் பற்றிய பேச்சாக அதை மாற்ற வேண்டும் என திட்டமிட்டு செய்யப்படும் தந்திரம். இந்த பிரச்சார உத்திக்கு ஊடககங்கள் தெரிந்தோ தெரியாமலோ பலியாகிவருகின்றன. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நானும் ஏ.எஸ்.பன்னீர் செல்வமும் ஜோதிமணியும் இந்தப் பிரச்சினையின் சிக்கல்களை பொதுத் தளத்தில் பேச மிகவும் முயற்சித்தோம். தங்களது வழக்கான பாச்சா பலிக்காததால் நம்பி நாரயணன் என்னை சம்பந்தமில்லாமல் தாக்க ஆரம்பித்தார். 

ராமரையும் ராவணணையும் சீதையும் பற்றி நான் கற்பனைகூட செய்யாத ஒரு விஷயத்தை நான் எழுதியதாக அருவருப்பான முறையில் ஒரு பொய்யை சொன்னார். நிரூபிக்கும்படி சவால் வைத்தேன். நிரூப்பிப்பதல்ல அவர் நோக்கம். நான் இந்து மத எதிர்ப்பாளன் என்று ஒரு பிம்பத்தை உருவக்குவதுதான் அவரது நோக்கம். அதற்காக எந்த அளவுக்கும் இறங்க அவர்கள் தயாராகி விட்டார்கள் என்பது தெரிந்தது.

வானதி ஸ்ரீனிவாசன், நம்பி நாராயணன் என்று வரிசையாக என்மீது வரிசையாக இந்த தனிபர் தாக்குதலில் இறங்குவதன் நோக்கம் வெளிப்படையானது. பா.ஜ.கவின் அரசியலை ஊடகங்களில் விடாப்பிடியாக கடுமையாக அம்பலப்படுத்துகிறேன் என்பதுதான். ஒரு காங்கிரஸ்காரர் அல்லது கம்யூஸ்னிடுகள் பா.ஜ.கவை எதிர்த்தால் பதிலுக்கு இரண்டு குற்றச் சாட்டுகளை கூறி சமாளித்துவிடலாம். 


ஆனால் பொது சமூகத்தின் பிரதிநிதியாக வந்து நிற்பவனை என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே என் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தி தப்பிவிடலாம் என்று படாத பாடுபடுகிறார்கள். இவனை அழைக்காதீர்கள் என்று தொலைக் காட்சிகளை மிரட்டுகிறார்கள். நான் யார் என்பதற்கும் எனது அரசியல் சமூக நம்பிக்கைகள் என்ன என்பதற்கும் எனது முப்பதாண்டு எழுத்துக்களில் ஆயிரக் கணக்கான பக்கங்களில் பதிவுகள் இருக்கின்றன. எதையுமே படித்தறியாத மூடர்களின் அவதூறுப் பிரச்சாரங்களால் அவளவு சுலபமாக அழிக்க முடியாத ஆவணங்கள் அவை.

ஒரு ஊடகத்தில் நெஞ்சறிய பொய் சொல்லும் நம்பி நாராயணன் போன்ற கிரினினல்களோடு ஒரு எழுத்தாளன் வாதிட வேண்டும் என்பது ஒரு சாபக்கேடு. கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும்படி சொன்ன எனது டாக்டரின் அறிவுரையை கேட்கமுடியாததற்கு வருந்துகிறேன். இந்த கிரினினல்களுக்கு எதிராக முன்னைவிட கடுமையாக தொடர்ந்து போராட எனது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தப் போகிறேன். இவ்வளவு ஆபாசமான ஒரு சூழலில் போராடும் ஒருவன் எப்படி உணர்ச்சிவசப்படாமல் இருப்பது? சொல்லுங்கள் நண்பர்களே...

மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காவல்துறை PFI கண்டனம்..


திருச்சி, செப்டம்பர்24: மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காவல்துறை – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த கூட்டத்திற்கு தலைமையேற்று ஆட்சி நடத்தி, வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் விவசாய நிலங்களையெல்லாம் கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

தற்போது பா ஜ க வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக வருகின்ற செப்டம்பர் 26 அன்று தமிழகத்தின் திருச்சி மாநகருக்கு வருகை தர இருகின்றார்.


மோடியின் வருகைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக காவல் துறையின் நடவடிக்கைகள் திருச்சி மக்களுக்கு பீதியை கிளப்புவதாக அமைந்துள்ளது. 
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை அதற்கு மாற்றமாக பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் சோதனை நடத்துவதும், மாநாடு நடக்கக்கூடிய தினத்தில் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று மிரட்டுவதும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க சொல்வதும் சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

மேலும் குஜராத்தில் முஸ்லிம்களின் மீது பொய் வழக்குகளை போடுவது, அப்பாவி மக்களை போலி மோதல்களில் சுட்டுகொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவரும் குஜராத் காவல்துறை மோடியின் பாதுகாப்பிற்காக திருச்சியில் முகாமிட்டிருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் மேல் மக்களுக்கு சந்தேகங்களை எழுப்புகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.


இப்படிக்கு
ஜெ. முகம்மது ரசின்
மாநில செயலாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)