சென்னை, டிசம்பர் 14: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு
சத்தியம் டிவி : இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!!
சையது இக்பால் அவர்கள் : நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ ?பார்த்தது இல்லை .மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை .அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார்.
அவரால் இல்லை நர பலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாதுஅப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான் உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 % இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன அதனால் . நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம் . முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம் அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல் ,இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம்
முத்துப்பேட்டை தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மகனும்,
நிஜாமுதீன்,அமீர்கான் ஆகியோர்களின் தகப்பனாரும், M.K.S.நாகூர் பிச்சை சகோதரர்களின் மச்சானும், மர்ஹும் முஹைதீன் காதர் சேக்காதி, மர்ஹும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய (குட்டியார் பள்ளி அருகில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்த) "முஹம்மது தாஹா" அவர்கள் நேற்றிரவு ( 13/12/13 வெள்ளிக் கிழமை) இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், அரபு சாஹிபு பள்ளி மைய வாடியில் இன்று மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலும் தொடர்புக்கு:
M.K.S.நாகூர் பிச்சை
9976 28 42 16.
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)
முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெறும் பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க போகவில்லை. இந்த நிலையில் நேற்ற முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன மரங்களும் சாய்ந்தன. இதனால் முத்துப்பேட்டை நகரம் மற்றும் சுற்றுப்புர சிராமங்கள் இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது.
தகவல் அறிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிமாறன், கோட்டாச்சியர் சுப்பு, வட்டாச்சியர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிங்காரவேலு, கிருஷ்ணகுமார், ராஜாராஜசோழன் மற்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சீரமைப்பு பணிகளை உத்தரவிட்டார்கள். பின்னர் பேட்டை கிராமத்தில் விடிய விடிய அதிகாரிகள் நின்று நேற்று அதிகாலை வரை நின்று பணிகளை மேற்கொண்டனர்.
முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் பேட்டை சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியும் ஆகிவிட்டது. இதை சரி செய்யாத பேருராட்சியை சரிசெய்ய வலியுறுத்தியும், தெருக்களில் தினம் குப்பைகள் அகற்றுவது கிடையாது. இதனால் சுகாதார கேடாகி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. இதனால் டெங்கு, மலேரியா, போன்ற வைரஸ் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தினம் சுத்தம் செய்து குப்பைகளை அப்புறப்படுத்தாத பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்தும், மின்சார வாரியம் ஆசாத் நகர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் தொடும் தூரத்தில் உள்ளதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டையில் இருக்கும் டாக்டர்கள் இரவு நேரங்களில் அவசரத்திற்கு மருத்துவம் பார்ப்பது கிடையாது.
நோயாளிகள் அபாய கட்டத்திற்கு போகும் நிலை ஏற்படுகிறது அதனால் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தியும் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை பேருராட்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் A. அபுபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் பலரும் பேசினார்கள். நகர துணைத் தலைவர் அசரப் அலி, துணைச் செயலாளர் ஜெகபர் அலி, நிர்வாகிகள் எர்சாத், மண்சூர்அலி, சதாம், மைதீன் உட்பட சுமார் 200ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நகர செயலாளர் தீன் முகம்மது நன்றி கூறினார்.
கூத்தாநல்லூர், டிசம்பர் 13: தனக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர். நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர் ஒருவித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால் ‘குட்டி வளைகுடா’ என்றுஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா நாடுகளில்இருக்கிறார்கள்.
தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு விஷயத்திலும்ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று அனுபவங்கள் முக்கியமானவை.
நீண்ட வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும்வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும்நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் – தம்ரூட்.
கூத்தாநல்லூரில் அந்தக் காலத்திருந்தே வீட்டுப் பணியாரம் மிகவும்பிரசித்திபெற்ற ஒரு பலகாரம். பெயரில் என்னவோ பணியாரம் என்றிருந்தாலும் நாம்வழக்கமாகக் குறிப்பிடும் பணியார வகையைச் சேர்ந்தது அல்ல இது; விசேஷமானது.பண்டிகை நாட்கள், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், திருமணம், மணமக்கள் அழைப்பு,வெளிநாட்டுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி… இப்படி விசேஷமான தருணங்களில் மட்டுமேவீட்டுப் பணியாரம் செய்வார்கள். கூத்தாநல்லூர்க்காரர்கள் யாரேனும் திருமணஅழைப்பின்போது அழைப்பிதழுடன் வீட்டுப் பணியாரமும் வைத்து உங்களைஅழைத்தால் அவர் உங்களை மிக முக்கியமானவராகக் கருதுகிறார் என்று பொருள்.அதாவது வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதுபோல் இது ஒருவகை கௌரவம்!
ரவை, முட்டை, பால்திரட்டு, ஜீனி, நெய், முந்திரி சேர்த்துச் செய்யப்படும்இந்த வீட்டுப் பணியாரம் எல்லோருக்கும் கைகூடாது. அதனாலேயே, அந்தக் காலத்தில்வீட்டுப் பணியார ஆத்தாக்கள் நிறைய பேர் இப்பகுதியில் இருந்தார்கள்.
யாருக்குத்தேவையோ அவர்களுடைய வீட்டுக்கே வந்து இவர்கள் வீட்டுப் பணியாரம் செய்து தருவார்கள். விசேஷ நாட்களில் இவர்களுக்கு ஏகக் கிராக்கியாக இருக்கும்.
ஆனால்,கூத்தாநல்லூரிலேயே இப்போது வீட்டுப் பணியாரம் என்ற பெயரையும் அதன்கதையையும் அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போகும்படி செய்துவிட்டார்ஒருவர். அவர்… எம்.ஐ. முஹம்மது தமீம்!
அவர் தொடங்கிய ‘மௌலானா பேக்கரி’யில் வீட்டுப் பணியாரம் தம்ரூட்டாகப்புதிய அவதாரமெடுத்த இந்த 19 ஆண்டுகளில் வீட்டுப் பணியார ஆத்தாக்கள் காணாமலேபோய்விட்டார்கள். மேலே சாக்லேட் நிறத்திலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் கேக்போல இருக்கும் தம்ரூட் திகட்டாத ஒரு பலகாரம்.
நினைத்து நினைத்துச் சாப்பிட அழைக்கும் தம்ரூட்டின் கவர்ச்சிக்குக் காரணம் அதன் சுவை மட்டுமல்ல; அதில் எப்போதும் உறை கொண்டிருக்கும் உருகும் நெய்யின் மணமும்கூட. இந்த மணம்கூத்தாநல்லூர்க்காரர்களை மட்டும் கட்டிப்போடவில்லை. கூத்தாநல்லூர் செல்லும்எவரையும் கட்டிப்போட்டுவிடுகிறது.
‘மௌலானா பேக்கரி’ உரிமையாளர் தமீம் சொன்னார்: “மொஹல் உணவுவகையைச் சேர்ந்த வீட்டுப் பணியாரம், இந்த மக்களின் கொண்டாட்டங்களிலிருந்துபிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. நாங்கள் இந்தக் கடையைத் தொடங்கியதும்வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியபோது வீட்டுப் பணியாரமேமுதலில் ஞாபகத்துக்கு வந்தது. அதுவரை வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டுவந்தவீட்டுப் பணியாரத்தைக் கடையில் செய்து விற்கத் தொடங்கினோம். அதன் ருசியைக்கூட்டியதுடன் சீக்கிரம் கெட்டுப்போகாதவாறும் தயாரித்தோம். இப்போது வளைகுடாநாடுகள் வரை எங்கள் கடை தம்ரூட் பிரபலம்” என்றார் தமீம்.
இவர்கள் கடையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு ஐட்டம் பால் மணம் மாறாதஅமுல் ரஸ்க். தமிழக பேக்கரிகளில் இவர்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை இந்தரஸ்க் பெற்றுத் தந்திருக்கிறது. “இந்த இடத்தைவிடவும் தம்ரூட் பெற்றுத்தரும் இடம்இன்னும் பெரிதாக இருக்கும்” என்று சிரிக்கிறார் தமீம்.
கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம். ஊர் திரும்பியதும் நம் பையைத் திறந்து பார்த்தோம். நெய் வாசம் மட்டும்இருந்தது!
முத்துப்பேட்டை டிச.13
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை இலேசான காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்த பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மேகமூட்டம் சாதாரணமாக காணப்பட்டதால் முத்துப்பேட்டை தெற்குத்தெரு கோரையாற்று கரையிலிருந்து படகு மூலம் மீன் பிடிக்க அதே பகுதியைச் சேர்ந்த கமால் முகைதீன், பரிதுஉஸ்மான், அப்துல் சலாம், தாவூது இப்ராஹிம், தாவூது, தருஸ் மரைக்காயர், ராஜ்முகம்மது ஆகிய 7 மீனவர்கள் தனிப் படகு மூலம் கடலுக்கு நேற்றுக் காலை 8-மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சுமார் மதியம் 12 மணியளவில் கடலுக்கு அருகில் கழிமுனை லகூன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராஜ்முகம்மது(57) அப்பொழுது வீசிய காற்று மற்றும் குளிர் காரணமாக நடுக்கம் ஏற்பட்டு படகில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் ராஜ்முகம்மது உடலை கூடச்சென்ற 6 மீனவர்களும் முத்துப்பேட்டை தெற்கத்தெரு கோரையாற்று கரைக்கு படகு மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். பலியான ராஜமுகம்மதுக்கு மனைவி மற்றும் நிஷா தமீம் அன்சாரி ஆகிய குழந்தைகள் உள்ளன.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலிசார் மற்றும் கடலோர காவல்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர் சங்க தலைவர் முகம்மது இஸ்மாயில் கூறுகையில் காற்று மழையின் காரணமாக மீன் பிடிக்க யாரும் செல்லவில்லை. இந்த நிலையில் இன்று காலை(நேற்று) இவர்கள் 7 பேரும் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது மீனவர் ராஜ்முகம்மது பலியானானர். மிகவும் ஏழை மீனவ குடும்பத்தைச் சேர்ந்த அவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.


முத்துப்பேட்டை, டிசம்பர் 11: முத்துப்பேட்டையில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் காய்கறிக்கடை வைத்திருப்பவர் பாலசுப்ரமணியன். இவரது கடையில் ஏராளமான காய்கறிகள் உள்ளன. இதில் நேற்று விற்பனைக்காக வந்த கத்தரிக்காய்களில் ஒன்று கேள்விக்குறி தோற்றத்தில் காணப்பட்டன. இதனை மக்கள் பார்வைக்காக பாலசுப்ரமணியன் வைத்துள்ளார். இதனை பலரும் வேடிக்கையுடன் பார்த்துச் செல்கிறார்கள்.
முத்துப்பேட்டை, டிசம்பர் 10: இன்ஷா அல்லாஹ் வருகிற டிசம்பர் மாதம் 22.12.2013 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திருச்சி, காஜாமலை நூர் மஹாலில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து மறுநாள் 23.12.2013 மதியம் 1.00 மணியளவில் முத்துப்பேட்டை, ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மதரஸாவில் வலிமா விருந்து நடைபெறயிருப்பதால் எனது உற்றார், உறவினர்கள் மற்றும் அனைத்து நண்பர்களும் தவறாது கலந்து கொண்டு எங்களின் ஈருலக வாழ்கைக்கு துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்..
بارك الله لكم وبارك عليكم وجمع بينكما في خير
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
என்றும் அன்புடன்..
- K.A.N.ஹாஜா கமால் MBA
( கருப்பட்டி ஹாஜா )
நமது நிருபர்:
AKL அப்துல் ரஹ்மான்...
உலகம்,டிசம்பர் 10: பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது.
பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.
ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?
ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.
அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.




மதுக்கூர், டிசம்பர் 10: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) சார்பாக தொடர்ந்து 18 ஆண்டுகாலமாக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 தேதி அன்று பல்வேறு போராட்டக்களங்களை அமைத்து ஜனநாயக வழியில் போராடி வருகின்றது.இந்த வருடம் மாநிலத்தின் பெரு நகரங்கள் சுமார் 50 இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக மாநில தலைமை அறிவித்து இருந்தது.அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) சார்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள மதுக்கூர் நகர தமுமுக சார்பாக 5 வேன்களில் தஞ்சாவூர் நோக்கி சென்றனார்.(இதில் ஒரு வேனில் பெண்கள்).தமுமுகவின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டு இருந்தது.
மதுக்கூரிலிருந்து 3 கீ.மி தொலைவில் உள்ள புலவஞ்சி என்ற கிராமத்தில் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ் என்பவன் எனது அடியாட்களுடன் சாலையின் நடுவே தனது வாகனத்தை குறுக்குநெடுக்காக நிறுத்திக்கொண்டு இந்த வழியாக டிசம்பர் 6 போராட்டத்துக்கு வாகனங்கள் செல்லக்கூடாது என கெக்கரித்து உள்ளான்.வாகன டிரைவர் சகோதரர் ரியாஸ் அகமது மட்டும் இறக்கி சென்று ஏன் ? ரோட்டை மறிக்கின்றீர்கள் நாங்கள் போராட்டத்து செல்லவேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு போஸ் இது என் ஊர்.எனது ரோடு யாரும் இந்த வழியாக செல்லக்கூடாது என மீண்டும் கூறியுள்ளான்.மதுக்கூர் காவல் நிலையத்துக்கு நிர்வாகிகள் தகவல் கொடுக்க எப்போதும் போல் தாமதமாக வந்த மதுக்கூர் காவல் துறை வழக்கம்போல் முஸ்லிம்களை நீங்கள் கலைந்து செல்லுங்கள் நாங்கள் பார்த்து கொள்கின்றோம் என கூற போராட்டத்திற்கு சென்ற முஸ்லிம்கள் எங்களை சம்மந்தமில்லாமல் வழிமறித்த போஸ் மற்றும் அவனது அடியாட்களை கைது செய்யவேண்டும் என கூற போஸை நோக்கி சென்ற மதுக்கூர் காவல்நிலைய ஆய்வாளர் அவர்களை பார்த்து போஸின்தம்பி வக்கீல் ராஜபிரபு என்பவன் நீ போயா என்னயா பண்ணுவே கேஸ்தானே போடுவே போட்டுக்கோ என கூறிக்கொண்டே அருகில் வீடு கட்டுவதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து முஸ்லிம்கள் மீது வீசினார்கள்.இதில் முஸ்லிம்களின் வாகன வரிசையில் முதலில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தது.அதுவரை பொறுமையின் புகழிடமாக இருந்த முஸ்லிம்கள் அவனே கைது செய்யவேண்டும் என கூறி புலவஞ்சி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.புலவஞ்சி கிராமத்திலிருந்து சாலை மறியலை கலைத்துவிட்டுவிட்டு மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் நான்கு சாலைகளில் முஸ்லிம்கள் அமர்ந்து போஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்களுடன் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.
மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதிராம்பட்டிணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி டிசம்பர் 6 போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு இந்த சம்பவங்கள் எடுத்துக்கூறப்பட்டது.உடனடியாக களத்தில் இறக்கிய அதிராம்பட்டிண தமுமுகவினர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் புலவஞ்சியில் முஸ்லிம்களின் வாகனம் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.இதனால் பட்டுக்கோட்டை நகரில் சுமார் 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் மதுக்கூரில் தொடர்ந்து ஒரு மணிநேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் போரில் பெரமையா கோவிலிருந்து கலைந்து சென்று காவல்நிலையத்தில் திரண்டனர்.முஸ்லிம்கள் காவல்நிலையத்தில் திரண்ட சில நிமிடங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் அவர்கள் மதுக்கூர் காவல்நிலையம் வந்தடைந்தார்.நடந்த விபரங்களை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்து காவல்நிலையத்தின் முன்பு திரண்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துங்கள் என முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக எஸ்பியிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடன் கூறினார்.அதன்படிஒரு சிலரை தவீர்த்து அனைவரும் கலைந்து சென்றனர்.முறைப்படி தமுமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.தமுமுக வாகனங்களை தாக்கியவர்களில் 4 நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்கள்.முக்கிய குற்றவாளிகள் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ்,அவனது தம்பி வக்கீல் ராஜபிரபு ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.
சங்பரிவார்களின் இந்த செயலை கண்டித்து தமுமுக மட்டுமில்லாது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தை தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று நடத்திய கோவை சுல்தான் மற்றும் மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார்,மாவட்ட செயலாளர் அகமது ஹாஜா,மாவட்ட மமக செயலாளர்அகமது கபீர், மாவட்ட பொருளாளர் சேக் அலாவுதீன்,பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஹாஜி சேக்.மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் உட்பட பலரும் மதுக்கூரில் முகாமிட்டு இருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து குற்றாவளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரினார்கள்
நன்றி:மதுக்கூர் தமுமுக
கட்டிமேடு, டிசம்பர் 10: அதிரை கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான், இர்ஷாத். இருவரும் நேற்று இரு சக்கர வாகனத்தில் கட்டிமேட்டிலிருந்து ஊர் திரும்பும் வழியில் கட்டிமேடு பாலத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளானர்கள்.
இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் மேற் சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலத்த காயமடைந்த முஜிபூர் ரஹ்மான் சுய நினைவு திரும்பாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த இடையூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் பரிபூரண நலம் பெற துவா செய்வோம்.
முத்துப்பேட்டை, டிசம்பர் 08: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொது செயலாளரும் ,தமிழக முன்னாள் வக்பு வாரிய தலைவருமான சகோ S .ஹைதர் அலி அவர்கள் நேற்று முத்துபேட்டைக்கு வருகை தந்தார் .
அவருக்கு தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர் .டிசம்பர் 6 அன்று மதுக்கூரில் ஒரு சில தேச விரோத ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல்கள் தமுமுக வின் வாகனத்தின் மீது சராமரியாக கல்வீசி தாக்கியது .
இதனை அறிந்த ஹைதர் அலி சாஹிப் அவர்கள் நாகையில் டிசம்பர் 6 கண்டன உரையாற்றிவிட்டு நேரடியாக மதுக்கூர் செல்ல திட்டமிட்டார் .இதனால் போகும் வழியில் திடீரென முத்துப்பேட்டைக்கு விஜயம் செய்தார் .
ஆசாத் நகர் புதிய பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு தமுமுக நகர அலுவலகத்திற்கு வருகை தந்தார் .
பின்னர் அனைத்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஹைதர் அலி சாஹிப் அவர்கள், நாம் பிரதி பலனை எதிர் பாராமல் சமுதாய பணியாற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையோடு செயலாற்ற வேண்டும் என்றும், கூறினார் .
அப்போது மமக முன்னாள் மாவட்ட செயலாளர் மாலிக் ,நகர மமக செயலாளர் தீன் முஹம்மது ,ஒன்றிய செயலாளர் நைனா முஹம்மது ,தமுமுக துணை தலைவர் முஹம்மது யாசீன் ,தமுமுக பொருளாளர் ஜெஹபர் சாதிக் ,பாக்கர் அலி ,மற்றும் நகர மாணவரணி தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
செய்தி :வழக்கறிஞர் S .தீன் முஹம்மது
நகர செயலாளர்
மனித நேய மக்கள் கட்சி
முத்துபேட்டை நகரம் .
டிசம்பர் 6 வருகிறது! 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்தக் கோரச் சம்பவங்கள் நினைவுகளை கண்ணீரோடு மீட்டுகின்றன.

நான் 1992ல் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அயோத்தி விவகாரம் பரபரப்பான நிகழ்வாக இருந்தது.
பாபரி மஸ்ஜிதை உடைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு சமுதாய மக்களிடம் இருந்தது.
டிசம்பர் 6 நெருங்க நெருங்க மதக்கலவர அபாயங்கள் அனைவரையும் அச்சமூட்டிக் கொண்டிருந்தது.
செய்தித் தாள்களும், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனும், வானொலியும்தான் அப்போது தகவல் தொடர்பு சாதனங்கள்.அனைவரின் கவனமும் வானொலி செய்திகளை கவனித்தபடியே இருந்தன எனலாம்.
அன்று 1992 டிசம்பர் 6! ஞாயிற்றுக்கிழமை. எனது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கிறேன். இந்திப்படம் ஒன்று காலையில் ஓடிக்கொண்டிருந்தது.தொலைகட்சியில் அப்போது நகரும் எழுத்துக்கள் (Flashnews) வழியாக அவசர செய்திகளைத் தெரிவிக்கும் வசதிகள் எல்லாம் இல்லை.
நான் எங்கள் ஊரில் (தோப்புத்துறை) உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு லுஹர் தொழுக சென்றேன். அப்போது தப்லீக் ஜமாஅத்தினர் அங்கே தொழுகைக்குப் பிறகு ‘பயான்’ செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த பரபரப்பும் இல்லை.
மதியத்திற்குப் பிறகு வானொலி செய்தியைக் கேட்டேன்.அப்போது “தாவாவுக்கு உட்பட்ட இடத்தில் இருந்த மசூதிக்கு சிறிய அளவில் கரசேவகர்கள் சேதத்தை ஏற்படுத்தினார்கள்” என்ற அளவில் மட்டுமே செய்தி ஒலிபரப்பப்பட்டது.
எனக்குப் பொறி தட்டியது.ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டது என்பதையும், அதை அரசு ஊடகங்கள் மறைக்கின்றன என்பதையும் புரிந்துகொண்டேன்.
உடனே இரவு 7.15 மணிக்கு என்னிடமிருந்த கையடக்க வானொலி மூலம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து ஒளிபரப்பாகும் ‘வெரிடாஸ்’ தமிழ் செய்தியைக் கேட்டேன். அங்குதான் ரபிபெர்னாட், ஜெகத்கஸ்பர் போன்றோர் முன்பு பணியாற்றினர்.
அதில் பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட செய்தியைக் கூறினார்கள் நாங்கள் பதட்டம்அடைந்தோம். அடுத்து இரவு 9.15க்கு லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பி.பி.சி. தமிழ் செய்தியிலும் அதை உறுதிப்படுத்தினார்கள்.
எனக்கு கண்கள் கலங்கியது.ஏதாவது ஒருவகையில் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமே என மனம் துடித்தது. உடனடியாக நண்பர்கள் சிலரை வரவழைத்து எங்கள் ஊர் பஜார் பகுதியில் (ஆறுமுகச்சந்தி) கூடுகிறோம்.
அப்போது பாபாவின் தலைமையில் ஜிஹாத் கமிட்டி எழுச்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம்.நாங்கள் கூடுகிறோம் என தெரிந்ததும் சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்திறங்கி, அனைவரையும் கலைந்துபோக அறிவுறுத்தினர்.
நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டுமே எனக் கருதி, அருகில் உள்ள படேசாஹிப் தர்ஹாவுக்கு போனோம். அங்கு ஜமாஅத்தினர் ‘கேட்டை’ பூட்டி, பிரச்சனைகளை செய்யாதீர்கள் என அறிவுறுத்தி அனுப்பினர். அவ்வளவு பயம்!
எங்கும் பதட்டம் பரவியதால், அடுத்த நாள் கூடி ஆலோசிப்போம் என முடிவு செய்தோம். எல்லோரும் போன பிறகும், நாங்கள் 10, 15 பேர் வீட்டிற்குச் செல்லவில்லை. அப்போதெல்லாம் இரவு 10 மணி என்பதெல்லாம் ஊரடங்கும் நேரம்!
நாங்கள் கிணற்றடி அருகே உள்ள மரக்கடையில் இருக்கும் பெரும் பெரும் உருட்டுக் கட்டைகளை நகர்த்தி சாலைகளில் தடுப்பை ஏற்படுத்திவிட்டு கலைந்தோம்.
அடுத்த நாள், பேருந்து ஒன்றை உடைக்க வேண்டும் என கோபமான முடிவு எடுக்கப்பட்டது.இதற்கு ஆலோசனைப் பெறுவதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்த மாவன்னா மாரிமுத்து கவுண்டரைச் சென்று சந்தித்தோம்.
மழை தூறிக் கொண்டிருந்த பகல் பொழுதில், அவரது குரவப்புலம் வீட்டில் சந்தித்து பேசினோம்.பழனிபாபா அவர் வீட்டில் தங்கியிருக்கிறார். பாபாவின் மீது அவருக்குப் பிரியம் அதிகம்.
சரி, செய்யுங்கள். நானும் பாமகவினரை துணைக்கு அனுப்புகிறேன். ஆனால், வழக்குகளை எல்லாம் சந்திக்க வேண்டிவரும் என்று சொல்லி அனுப்பினார்! ஒருகட்டத்தில் பேருந்தை கொளுத்துவது என்றும் முடிவானது.
அதற்குள் நாடெங்கிலும் கலவரச் செய்திகளும், முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெறுவதையும் அறிந்து, கலங்கினோம்.ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற இயக்கங்கள் தடை செய்யப்படுவதாகவும், அதற்கு சமன் செய்யும் வகையில் ஜமாஅத்தே இஸ்லாமியும், கேரளாவில் மதானியின் தலைமையில் செயல்பட்ட ஐ.எஸ்.எஸ்.சும் தடை என மத்திய அரசு அறிவித்தது.
பத்திரிக்கைகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் கறுப்பு எழுத்துக்களில் செய்தியை வெளியிட்டன. தலைவர்கள் எல்லாம் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தார்கள்.
பதட்டத்தைத் தணிக்கும் வகையில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயல்பட்டது. வானொலியில் கமல்ஹாசன் பேசினார். “நான் இந்து என்பதற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” என பேசினார்.
எங்களுக்கு மனம் ஆறவில்லை. அப்போது முஸ்லிம் லீக், ஜிஹாத் கமிட்டி ஆகிய இரண்டும் தான் பெரிய அமைப்புகள். ஆனால், தெளிவான வழிகாட்டல்கள் இல்லாததால் மக்களின் எதிர்ப்பை முறைப்படுத்த இயலவில்லை.
பேருந்தை உடைப்பது ஒன்றுதான் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான வழி என அனைவரின் மனமும் சொல்லியது. அன்று இரவு 12 மணி வரை ‘வாட்டர் டேங்க்’ பகுதியில் இருளில் 30க்கும் மேற்பட்டோர், இரவுப் பேருந்துகளை எதிர்பார்த்து பதுங்கியிருந்தோம்.ஆனால், பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது எங்களுக்கு தெரியாமலேயே போனது.
என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் நாகூரும், முத்துப்பேட்டையும் தான் பெரிய மஹல்லாக்கள்.கட்டிமேடு, துளசியாபட்டினம், திருப்பூண்டி, நாச்சிக்குளம் போன்றவை சிறிய மஹல்லாக்கள்.
முத்துப்பேட்டையில் ஷேக்காதி என்பவர் தலைமையில் ஜிஹாத் கமிட்டி வலுவாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களிடம் ஆலோசனைக் கேட்க முத்துப்பேட்டைக்கு விரைந்தேன். அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
பிறகு நாச்சிக்குளத்திற்குச் சென்று அங்குள்ள நண்பர்களுடன் ஆலோசனை நடந்தது. அங்கும் பேருந்தை உடைக்க வேண்டும் என்ற மனநிலைதான் எதிரொலித்தது!அங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து ஒருமாதம் பதற்றம் நீடித்தது.துக்ளக், ஜுனியர் விகடன், ஜுனியர் போஸ்ட், நக்கீரன், தராசு, இந்தியா டுடே போன்ற வார இதழ்கள் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.
நமக்கொரு வழிகாட்டல் இல்லையே... களத்தில் போராட இயக்கங்கள் இல்லையே... என கவலைகள் எழுந்தன. உருப்படியாகப் போராடவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் வழியில்லையே என்ற விரக்தியும் மேலோங்கியது.
இன்று அதை நினைத்துப் பார்ப்பதற்குக் காரணம், இன்று இந்தியாவுக்கே முன்மாதிரி இயக்கமாக செயல்படும் தமுமுக அன்று இருந்திருந்தால், வன்முறை இல்லாமல் எதிர்ப்புகள் ஜனநாயக வழியில் எப்படியெல்லாம் வழிகாட்டப்பட்டிருக்கும் என்பதற்காகத்தான்!இன்று பாபரி மஸ்ஜித் இருந்த உ.பி.யில் டிசம்பர் 6ல் போராட்டங்கள் இல்லை!
ஆம், ஜனநாயக இயக்கங்கள் வலுப்பெற்றால் தான் அரசியல் - சமூகப் பிரச்சனைகளுக்கு மக்களைத் திரட்டி தீர்வுகாண முடியும்! தமுமுக போன்ற இயக்கங்கள் இல்லாததால், முஸ்லிம்கள் 20-25 சதவீதத்திற்கு மேல் வாழும் உ.பி., பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களின் வாழ்வியலும், உரிமைப் போராட்டங்களும் வீழ்ச்சியடைந்து கிடப்பதை அறியும் போது மனம் உடைந்து போகிறது!
(நினைவுகள் சுழலும்...)
(காத்திருங்கள்... விரைவில் 1996 முதல் 1998 வரை நடைபெற்ற தடையை மீறிய டிசம்பர் 6 போர்க்கள அனுபவங்கள் பகிரப்படும்)
முத்துப்பேட்டை, டிசம்பர் 07: (இன்ஷா அல்லாஹ்) அல்லாஹ் பொருந்தி கொள்வானாக ஆமீன்). முத்துப்பேட்டையில் உள்ள பங்களாவாசல் அருகில் ஆண்களுக்கான குர் ஆன் மனனம் செய்யும் (ஹிஃப்ழு மதரஸா) "அல் மதரஸத்துல் இலாஹியா" என்ற பெயரில் கடந்த 3மாதமாக நடைபெற்று வருகிறது. முத்துப்பேட்டையில் ஆண்களுக்கான குர்ஆன் மனனம் செய்யும் (ஹிஃப்ழு மதரஸா) இதுவே முதல் முறையாக துவங்கப் பட்டுள்ளது. இந்த மதரஸாவானது தாங்கள் கொடுக்கக்கூடிய சந்தா, மற்றும் ஹதியா மூலம் தான் மாணவர்கள் படிப்பிற்கும் உணவு, உடை, மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக இங்கு வழங்கப்படுகிறது.
இதில் சிறந்த ஆலிம்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் கர்பித்துக் கொடுக்கப்படுகிறது. இந்த பாடதிட்டம் 3 வருட காலங்களைக் கொண்டது. மேலும் இந்த மதரஸா பொதுமக்கள், ஜமாத்தார்கள் என அனைவரின் ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மதரசாவில் சேர்த்து இம்மையிலும், மறுமையிலும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த மதரஸாவின் நிலைபாடுகள் குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் கேட்டகேள்விக்கு பதிலளித்த மதரஸாவின் நிர்வாக தலைவர்,ஃபிரோஸ்கான், முஸ்லிம் மாணவர்கள் குர்ஆனை முழுவதும் மனனம் செய்து அவர்களின் வாழ்வில் வெற்றி பெறவும், அவற்றை நடைமுறையில் செயல்படுத்தவும் தான் இந்த மதரஸா துவங்கப்பட்டது என்றும், இந்த மதரஸாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய மாணவர்களும் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் அவர் தெரிவித்தார். எனவே நமதூரை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் அனைவரும் மாத சாந்த, ஆண்டு சந்தா வாகவோ, மற்றும் ஹதியாக்கலாகவோ இந்த மதரஸாவிற்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் தொடர்புக்கு:
அல் மதரஸத்துல் இலாஹியா
33/17D, புது தெரு, பங்களா வாசல் அருகில்
முத்துப்பேட்டை - 614 704, திருத்துறைப்பூண்டி தாலுக்கா
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: அலுவலகம்: +91 4369 - 348 057.
Email: ilaahiyampt@gmail.com.
நமது நிருபர்:
R.அப்துல் ரஹ்மான்
ஆந்திரா, டிசம்பர் 04: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி மு க தலைவர் கலைஞர் அவர்களையும் சந்திப்பதற்காக சென்னை வந்தார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சகோதரர் இல்லத்தில் தங்கி இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் சகோ ஜே .ஷேக்பரீத் நேரில் சந்தித்தார் .
பல்வேறு பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுமார் 5 நிமிடங்கள் வரை பொறுமையாக நமது ஆசிரியரிடம் ஜெகன் மோகன் பேசினார். அப்போது பேசிய நமது ஆசிரியர், ஒரிங்கினைந்த ஆந்திராவை கட்டிக்காக்க நினைக்கும் நீங்கள் மதவாத சக்திகளான பாஜக வுடன் கைகோர்க்க கூடாது என்றும், தெலுங்கானா விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கூறினார்.
உங்களை நரேந்திர மோடி சந்தித்ததாக அறிந்தோம் என்றும் மோடி நாட்டின் பயங்கரவாத முகம் என்றும் கூறினார். சிரித்துக்கொண்டே உங்கள் பெயர் என்ன என்று கேட்ட ஜெகன் ஷேக் என்று பதில் கூறியவுடன், தோளில் தட்டிகொடுத்த படி உங்கள் எண்ணம் நிறைவேறும் என்று கூறினார் .
செய்தி :கீழக்கரை :ஹசன்
புதுக்கல்லூரி மாணவர்
உலகம், டிசம்பர் 04: இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது.
ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவு ம் உள்ளது.
பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.
இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற் கான 5 காரணங்களைக் கூறுகிறார்கள் அது என்னவென்று பார்ப்போமா..!
1) இந்த Whatsapp மற்றும் Wechat-ஐ பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் உண்மையான நண்பர்கள் அதில் இருப்பார்கள்.
பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது ஆனால் Whatsapp மற்றும் Wechatல் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது.குருப் என்கிற அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி நமக்கு நெருக்கமான நண்பர்களை சேர்த்து எப்பொழுது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம்.
2) பொய்யான நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கிறது Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இதில் பொய்யான நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபைலில் இருப்பாதால் இது பாதுகாப்பானதாக உள்ளது.
3) Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிக விரைவாக செயல்படுகின்றன. பேஸ்புக்கில் செய்தியை அனுப்பிய பிறகு அது நண்பர்களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது.ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாகசெய்திகள் பரிமாறிக்கொள்ளப் படுகிறது.
4) Whatsapp மற்றும் Wechat பயன்பாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.பேஸ்புக்கில் நமது விஷயங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நமது தகவல்களை தெரிந்து கொள்வார்கள் . Whatsapp மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும் நமது தகவல்களை திருட முடியாது.
5)பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.Whatsapp மற்றும் Wechatல் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் அனைத்து செய்திகளும் தனிப்பட்ட செய்திகளாக நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட முடியாது.