முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாத 3 பிள்ளையார் சிலையை போலீசார் கைப்பற்றினர்.







முத்துப்பேட்டை, செப்டம்பர் 26 : முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் என்றாலே தமிழகம் முழுவதும் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஊர்வலத்தில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் பலவிதமான பல அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வாகனகளுடன் 16 விநாயகர் சிலை மற்றும் நூற்றுக் கணக்கான கிராமத்தினருடன் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை வடகாடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை நகர் வழியாக பாமணி ஆற்றில் கரைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டில் 20 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நூற்றுக் கணக்கான போலீசார் ரகசிய போலீசார் என முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முத்துப்பேட்டை நகர் எந்த நேரமும் பொலிசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்துக்கான பேட்டை சிவன் கோவில் ஆஸ்பத்திரி தெரு துரெளபதி அம்மன் கோவில், மங்களூர் மாரியம்மன் கோவில் என மூன்று இடங்களில் புதிதாக விநாயகர் சிலை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மூன்று இடங்களுக்கு முறையான அனுமதி பெற வில்லை என்றும், வழக்கம்போல் உள்ள 16 சிலைக்குமே முறையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கர் ஆகியோர் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் படி முத்துப்பேட்டை இன்ஸ் பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் மேற்படி முற்று சிலைகளையும் (கைது) அதிரடியாக பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல கமிட்டினரும், அந்த பகுதி மக்களும் பெரும் அதிர்ப்த்தி அடைந்து உள்ளனர். மேலும் இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பும் பதட்டமும் அப்பகுதியில் நிலவி உள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் விநாயகர் ஊர்வலம் நடக்குமா? அல்லது தள்ளி போகுமா? என்ற கேள்விக்குறியில் முத்துப்பேட்டை உள்ளது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)