முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பட்டறை குளம் தூர்வாரும் பணியில் ஊழல்: திட்டத்தை கைவிட MMK, SDPI, VC ஆகிய கட்சிகள் கோரிக்கை.


முத்துப்பேட்டை, ஜூலை 14: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சி பராமரிப்பில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் நீர் ஆதாரமாக இருக்க கூடிய இந்த குளங்களில் வரும் வருமானம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள் கழிவு நீர் சூழ்ந்து குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனை ஆகிய அனைத்து கழிவுகளும் குளங்களில் கொட்டுவதால் அசுத்தமாக காட்சியளிக்கிறது. பல குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் குட்டைகளாக மாறி வருகிறது. 

பல குளங்கள் காணாமலும் போய் உள்ளது. இந்த நிலையில் நகரில் முக்கிய வீதியில் இருக்கும் பட்டறை குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் குளம் ஆறு போல் சாக்கடை தொட்டிபோல் மாறி காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமலேயே போனது. சென்ற ஆண்டு இந்த குளத்தை தூர்வார 15 இலட்சம் செலவிடப்பட்டது. அதுவும் பொது மக்களுக்கு திருப்தியளிக்க வில்லை. பிறகு 5 இலட்ச ரூபாயில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அதுவும் பாலாகி அந்தரத்தில் தொங்குகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் குளத்தை முழுவதும் தூர்வாறி பயன்பாட்டிற்கு கொண்டு வர ரூபாய் 27 இலட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் மக்களுக்கு பயனில்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் பணி தொடராமலே கிடப்பில் கிடந்தது. இந்த நிலையில் அந்த நிதியைக்கொண்டு குளத்தை தூர்வாராமல் குளத்தின் கரை ஓரம் துப்புறவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டி மக்கள் வாக்கிங் செல்ல நடைபாதை டயல்ஸ் ஒட்டப்பட்டு நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து நேற்று பணியை துவக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் தடுத்தி நிறுத்தினர். 


இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் அவர்கள் கூறுகையில், ஏற்கனவே தூர்வாருகிறோம் என்ற பெயரில் மணலை எடுத்து விற்று கொள்ளை லாபம் அடைந்துவிட்டார்கள். மீண்டும் கொல்லையா? வேண்டவே வேண்டாம் என்றும், இந்த நிதி தற்பொழுது உள்ள குளத்தின் நிலைமையை முறையாக பராமரித்தாலே குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்றார். 


இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள், 27 இலட்ச ரூபாயை சொன்ன வேலைக்கு பயன்படுத்தாமல் பன்றிகள் நிறைந்து மலம் கழிக்கும் கருவைக் காட்டிற்க்குள் பொதுமக்கள் வாக்கிங் செல்ல நடைபாதை அமைக்க பயன்படுத்துவது பெரும் காமடியாக உள்ளது என்றும், காசு பார்க்கவே இந்த பணியை தொடர நினைப்பது கண்டிப்பிற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் குளத்தை முறையாக தூர்வாரி சுத்தம் செய்யாவிட்டால் எங்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார். 



இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் மகாலிங்கம் கூறுகையில், நகருக்கு நீர் ஆதாரம் விளங்கக் கூடிய இந்த குளத்தை இலாபகரமாக பார்க்காமல் மக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்ற குளத்தை அளவை வைத்து முறையான பணியை மேற் கொள்ளாவிட்டால் குளத்தின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். 



தற்பொழுது குளத்தின் அளவு தனியார் ஆக்கிரமிப்பால் சுருங்கி இருந்தாலும் குளம் இயற்க்கை தோற்றத்திலிருந்து மாறவில்லை என்பது உண்மை. இந்த 27 இலட்ச ரூபாய் நிதியைக் கொண்டு குளத்தின் தூரை வாரி அந்த மணலை சுற்றுப்புறம் முழுவதும் அனைத்து கருங்கல் பிளேட் கொண்டு பரப்பி தளம் அமைத்து தடுப்புச்சுவர் கட்டப்பட்டால் கழிவு நீர் வடிவதை முழுவதும் தவர்க்கப்படலாம். அதன் மூலம் குளம் முழுவதும் சுத்தமாகி விடும். அதன் மூலம் குளம் மக்களுக்கு முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதன்மூலம் நகரில் வாழும் மக்களுக்கு நிலத்தடி நீர் சீராக கிடைக்கும் என்றார்கள் சமூக ஆர்வலர்கள். எனவே 27 இலட்சம் நிதியை கொண்டு குளத்தின் பராமரிப்புக்கு மட்டுமே செலவிடப்படுமா? முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம். 
source from: www.muthupettaiexpress.com

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)