முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லிம்​ லீக் பெயரைக் களங்கப்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை: எச்சரிக்கை!

சென்னை, டிசம்பர் 15: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை-சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. இந்த தகவல் அவரை பா.ஜ.க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சதாம் என்.கே.எம்.சதக் கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா.ஜ.க.,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.
மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கி ணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில் ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 - ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும்.
இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்."
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.​

1 comments:

  1. முஸ்லிம்கள் துணை இல்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது என்ற உண்மை சம்பவம் இப்பதான் அந்த RSS, BJP தீவிரவாதிகளுக்கு தெரிய வந்துள்ளது அதனால்தான் பெயரே இல்லதா ஒரு இயக்கத்தை உண்டு பண்ணி நாடகம் ஆடிவருகின்றனர். கொய்யால தமிழகத்தில் டெபாசிட்டை இழந்தது போல் இந்தியா முழுவதும் டெபாசிட்டை இழக்க வைப்போம் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து....இதற்காக உயிர் தியாகமும் செய்வோம் டா... நாரே தக்பீர்.........அல்லாஹ் அக்பர்..........

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)