முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


சென்னை புத்தக கண்காட்சியில் மதவாதத்தை வென்றெடுத்து மனிதநேயம் காத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவா பணிகள். ஓர் பார்வை...

 நக்கீரன் (பத்திரிக்கையின்) ஆசிரியர் கோபால் அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் S.M. பாக்கர் அவர்கள் திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 போக்குவரத்து காவல்துரை அதிகாரிகளுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 நடிகர் ஜகன் அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.
 உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் அவர்கள்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.


 உயர் நீதி மன்றத்தின் காவல்துறை மேல் அதிகாரி எம்.கீதா அவர்களுக்கு திருமரை குர்ஆனை வழங்கிய போது எடுத்த புகைப்படம்.

சென்னை, பிப்ரவரி 04/2016: கடந்த 13.01.2016 முதல் 26.01.2016 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் தமிழ் திருநாள் பொங்கல் புத்தக கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அரங்கிலும் பல்வேறு விதமான பதிப்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் பதிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தக கண்காட்சியில் (சாஜிதா புக் செண்டர் அரங்கம் எண் 68 ல்) முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு புனிதமான மார்க்கம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்கும் பொருட்டு நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கி முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு சுமார் 2500 க்கும் மேற்பட்ட திருமரை குர்ஆனை வழங்கி உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், திரைப்பட நடிகர்கள், பத்திரிகை நண்பர்கள், தொழிலதிபர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த புனிதமான குர்ஆனை வழங்கியிருக்கிறது. மேலும் இந்த நிகழ்வின் போது மாற்று மத சகோதரர்கள் சுமார் 3 பேர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டனர். மேலும் 500 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக விரைவில் ஏற்க்க இருப்பதாக தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு:

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட நிகழ்ச்சியின் போது முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்கள் திருமரை குர்ஆனை  பெற்றவுடன் கூறிய சில வேதனையான விஷயம்:

எனக்கும் முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் இதுநாள் வரைக்கும் எனக்கு இஸ்லாத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் சொன்னது கிடையாது, மேலும் நாங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் குர்ஆனை படிக்க கேட்போம் அதற்க்கு அவர்கள் தரமாட்டார்கள். அவற்றை நீங்கள் படிக்க கூடாது என்றும் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் அந்த குர்ஆனை பெற்ற சகோதர சகோதரிகள் சொன்ன போது எங்களுக்கு வேதனையாக இருந்தது. எனவே (இந்த குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் நல்லுபதேசமே அன்றி வேறில்லை) எனவே இந்த இறைவசனத்திற்கொப்ப இனியாவது நமது புனிதமான இஸ்லாத்தை நம்மளுடைய நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிரவும் இல்லை எனில் நீங்களும் குற்றவாளிகளாக நாளை மறுமையில் அல்லாஹ் வின் முன்பு நிற்க நேரிடும்.

தொகுப்பு:

அ.முஹம்மது இலியாஸ்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)