முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


"இந்து'' ஆசிரியர் குழுவின் பார்வைக்கு...


இந்தியா, பிப்ரவரி 04/2016: எந்த மண்ணில் இஸ்லாம் தோன்றி வளர்ந்ததோ அந்த மண்ணில், நேர்வழி சென்ற கலீஃபாக்களின் காலம் முடிந்த பிறகு, சில அநாச்சாரங்களும் மூட நம்பிக்கைகளும் தோன்றின. இவற்றைக் கண்டித்து, மீண்டும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துரைக்கக் களம் கண்டவர்தான் இமாம் முஹம்மது அவர்கள்.

இவருடைய தந்தையின் பெயர்தான் அப்துல் வஹ்ஹாப். சீர்திருத்தம் செய்ய களம் கண்டவரோ மகன்; வசை வாங்கிக் கட்டிக்கொள்பவரோ தந்தை.  

இதைக்கூட தெரிந்துகொள்ளாமல்  வஹ்ஹாபியிசம் என்று சமஸ் பிதற்றியுள்ளார். அது மட்டுமல்ல, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பின் போது தங்கள் இன்னுயிர்களையும்  பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை ஆற்றியவர்கள் யார் தெரியுமா? வஹ்ஹாபிகள் என்று யாரை சமஸ் இன்று முத்திரை குத்துகிறாரோ அந்தத் தோழர்கள்தாம். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சமஸின் கண்களுக்கு  மனிதநேயச் செல்வர்களாய்த் தெரிந்தவர்கள் இன்று தீவிரவாதிகளாய்த் தெரிகிறார்கள். 

அது எப்படி? இடையில் என்ன மாயம் நிகழ்ந்தது? பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தலைவரை இந்திய முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று  தயங்காமல் அறிவுரை கூறுகிறார். “நீங்கள் பின்பற்றும் ஏக இறைவன் கொள்கை  எதை மிச்சம் வைக்கும்?” என்று  வெறுப்பு அரசியலை விதைக்கிறார். சமஸ் அவர்களும் இந்து நாளிதழும் முஸ்லிம் விரோதப்  போக்கைக் கட்டமைக்கத்  தீர்மானித்துவிட்டதாகவே தெரிகிறது.
இந்து ஆசிரியர்குழு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின்  வெறுப்புக்கும் "இந்து" நாளிதழ் ஆளாக நேரிடும்.

நன்றி:

சிராஜுல்ஹஸன்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)