முக்கியச் செய்தி
INTJ தஞ்சையில் நடத்த இருக்கும் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டம், நாள்:ஆகஸ்ட் 22, இடம்:ஜமாலியா தெரு ராஜகிரி, நேரம்:மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது./// தமுமுக குவைத் மண்டலம் நடத்தும் மாபெரும் இரத்ததான முகம்.நாள்: 28-08-2015, கிழமை: வெள்ளி, நேரம்: மதியம் 1 மணி முதல், இடம்: ஜபரியா இரத்த வங்கி, ஜபரியா-குவைத்: தொடர்புக்கு: 66353641, 51000956, 55353761, 66265063.///

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


நான் இஸ்லாத்திற்கு மாறியாதற்கு காரணமே திருக்குர்ஆன் தான் -யுவன்ஷங்கர் ராஜா பளீர் பேட்டி!!

முஸ்லிமாக மாறுவதை கேட்டு இளையராஜா அதிர்ச்சியானார்– யுவன் ஷங்கர் ராஜா
இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் படித்தேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. புனித குரானை படித்த பிறகு நிறைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எனக்கு விடை கிடைத்தது.
என் தந்தை இளையராஜாவிடம் முஸ்லிம் மதத்துக்கு மாறப்போகும் முடிவு பற்றி சொன்னேன். இதை கேட்டதும் ஆரம்பத்தில் அவர் அதிர்ச்சியானார். அதன் பிறகு என்னை அவர் புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்.
முஸ்லிமாக மாறியதால் எனக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.
முஸ்லிம் பெண்னை மணப்பதற்காக நான் முஸ்லிமாக மாறியதாக சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)