முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி -மகிழ்ச்சியளிக்கவில்லை என காதர் மொஹைதீன் பேட்டி!!

சென்னை, மார்ச். 4–
தி.மு.க. நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. 40 தொகுதிகளுக்கு நடந்த நேர்காணலுக்கு 300 பெண்கள் உள்பட 1,500 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 887 பேர் நேரில் பங்கேற்றனர்.
நேற்று வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடந்தது. இது வரை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடத்திய நேர்காணலுக்கு வந்தவர்களின் தகுதி அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியல் தயார் ஆகி வருகிறது.
Prof. Kader Mohideen, president of the Indian Union Muslim League, confirmed that his party had received an invitation for talks. File Photo

நேர்காணலையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரை சாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவாலயத்திற்கு தனித்தனியாக வந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாநில தலைவர் காதர் மொய்தீன், பொது செயலாளர் அபுபக்கர், பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலேசனைக்குப்பின் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவாவது:–

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறது. இந்த முறை சிறுபான்மையினருக்கு 4 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் ஒரு தொகுதி ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். இதில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொண்டோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, நெல்லை, திருச்சி ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறோம்.
இதில் எந்த தொகுதி என்பதை இன்று இரவு 7 மணிக்கு தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை எங்கள் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த சின்னத்தில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

11.30 மணிக்கு விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கட்சித்தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 12.30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மாலையில் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நாளை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கூடி தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி; எந்த கட்சிக்கு என்ன தொகுதி என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)