முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மல்லிப்பட்டினத்தில் பொது அமைதியை ஏற்படுத்துவோம் --முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வேண்டுகோள் !!


தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் மிகுந்த கவலையளிப்பதோடு ,சமூக நல்லினத்திற்கும் மதஒற்றுமைக்கும் விடப்பட்ட சவாலாகவே பார்க்க முடிகிறது .கடந்த மாதம் மல்லிப்பட்டினத்தில் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் நான்கு பேரை பத்துக்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியது .இதனால் அப்பகுதி முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டது . தஞ்சை மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையினால் சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டனர் .


காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கையினால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் ,சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பது மட்டுமில்லாமல் காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் .


மல்லிப்பட்டினத்தில் மனிதநேயத்தையும் ,பொதுஅமைதியையும்,மதநல்லினக்கத்தையும் வளர்க்க வேண்டும் .மதநல்லிணக்கத்தை கொண்டு வரவேண்டும் என்றால் இரத்த தான முகாம்கள் ,இலவச மருத்துவ முகாம்கள் ,கல்வி உதவிகள் உள்ளிட்டவைகளை அந்த ஊரில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் குறிப்பாக நமது தொப்புள் கொடிஉறவுகளான இந்து சகோதரர்களுக்கு வழங்கிட  வேண்டும் .


மேலும் நட்புறவை வலுப்படுத்த மதநல்லிணக்க விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் .பல நூற்றாண்டுகளாக இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்கலாகவும் கடைபிடித்து வரும் வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க வேண்டும் .


அதே போல் காலம் காலமாக நடைமுறை வழக்கத்தில் உள்ளது போல்  இஸ்லாமிய பண்டிகை காலங்களின் போது வீட்டில் சமைக்கும் உணவு பண்ட வகைகளை இந்து  சகோதரர்கள் வீட்டிற்கு கொடுப்பதை அதிகரிக்க வேண்டும் .மேலும் வன்முறையில் ஈடுப்பட்ட ,ஈடுப்பட்டு கொண்டிருக்கும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது பெற்றோர்களிடம் நாம் காலம்  காலமாக கடைபிடித்து வரும் சகோதரத்துவத்தை விளக்கி கூற வேண்டும் .


இப்படி செய்வதினால் மதநல்லிணக்கம் ,மனிதநேயம் மற்றும் பொது அமைதி ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் வாழும் அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்ப்படும் 

.இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் ,மதநல்லிணக்கம் காப்போம் ...
மதநல்லிணக்கம் காக்க முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் என்றென்றும் துணை நிற்கும் .

அன்புடன்......
ஜே ;ஷேக்பரீத் 
ஆசிரியர் 
MA .JOURNALISM AND MASS COMMUNICATION  


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)