முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மயிலாடுதுறையில் திருமணத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் காரில் கடத்தல் -நகை மற்றும் பணம் பறிப்பு பதற்றம் !!!
நாகை மாவட்டம் சோழசக்கரநல்லூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூருக்கு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து கிளியனூர் கடைத்தெருவில் பேரூந்துக்காக காத்திருந்த போது அம்பாசிடரில் வந்த இருவர் நாங்கள் மயிலாடுதுறை செல்கிறோம் என்று சொனனதால் இருவரும் காரில் ஏறியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவதற்குள் நாங்கள் சிதம்பரம் செல்கிறோம் நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள் என்று கேட்க நாங்கள் சோழசக்கர நல்லுர் செல்கிறோம் என்று சொல்ல இவர்களை மிரட்டியவாறு கார் சிதம்பரம் சென்றது.

கார் மயிலாடுதுறையை தாண்டியபோது இன்னும் இரண்டுபேர் காரில் கத்தியுடன் ஏறி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களை சிதம்பரம் கடத்தி சென்று அவர்கள் இருவருடமிருந்த 35 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டு சிதம்பரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சோழசக்கர நல்லுர் வந்து பின்னர் மயிலாடுதுறையில் காவல்நிலையத்தில் புகார் செய்துயுள்னர்.
காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஆண் துணையின்றி பெண்கள் தனியாக செல்வதும், அறிமுகம் இல்லாத கார் மற்றும் வேன்களில் பிரயாணம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
இது ஓர் விழிப்புணர்வு பதிவு, அதிகப்படியாக Share செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்...

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)