முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் -நூறு இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றுவேன் !பாஜக எம்பி யின் தேச விரோத பேச்சு !!!

டெல்லி: இந்து பெண் ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டால் அதற்கு பதிலடியாக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. 
ஒரு இந்துபெண்ணுக்காக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றுக: பாஜக எம்.பி. பேச்சு!!
பாஜகவின் சர்ச்சை முகங்களில் ஒருவர்தான் யோகி ஆதித்யாநாத், நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றின் மீது பேசி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார். 

கடந்த 2007ம் ஆண்டில், கோரக்பூரில் இன வன்முறையை தூண்டி விட்டதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறார், இந்த நிலையில் யோகி ஆதித்யாநாத் பேசிய வீடியோ பேச்சுதான் புது சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. 

அதாவது தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்றில் தனது ஆதரவாளர்கள் முன்பாக பேசுகையில், ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் பதிலுக்கு 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 வீடியோவில் பதிவான இந்த காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் இன்று கேட்டதற்கு யோகி ஆதித்யாநாத் பதிலளிக்க மறுத்து விட்டார். அத்துடன், வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு முன்பாக அது குறித்து தீர ஆய்வு செய்ய வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)