முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முஸ்லிம்கள் தேசிய அரசியலை முன்னெடுக்கவேண்டும்!” – துபையில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி விழாவில் வேண்டுகோள்!துபாய், டிசம்பர் 28: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) துபையில் நேற்று (26.12.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாகவே உள்ளது. ஹிந்துத்துவாவின் கட்டாய வெறுப்பு மற்றும் திணிப்பு அரசியலை உணர்ந்து உறுதியுடனும், விவேகத்துடனும் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் கூறினார்.

முன்னதாக துபை மண்டல பொது செயளாலர் பத்ர் ஜமான் வரவேற்புரை நிகழ்த்தினார். அமீரக தமிழ் பிரிவு தலைவர் நிழாம் தலைமையுரை ஆற்றினார். துபை மண்டல தலைவர் சுஹைல் யூசுஃப் முன்னிலை வகித்தார்.

அடுத்து, சிறப்புரையாற்றிய ICS-யின்அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் அவர்கள் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது:
இந்தியாவை ஒருமைப்படுத்தியது முஸ்லிம்கள். இந்தியாவுக்கு முஸ்லிம்கள் செய்த சேவையைச் சொல்வதென்றால் இது ஒன்று போதும். இந்தியா என்னும் நாட்டை உருவாக்கவும், இந்திய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆதிக்க சக்திகளுக்கெதிராக விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் முஸ்லிம்கள். அப்படி தியாகம் செய்துள்ள முஸ்லிம்களின் நிலை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மிகுந்த பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த உரிமைகள் கூட இன்று இல்லை. இந்நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் அரசியல் தளத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று நாம் போராடுகிறோம், கவலைப்படுகிறோம்.

ஆனால் இந்நிலைக்கு முக்கிய காரணம் அரசியல் தளத்தில் நாம் வலுவாக கால் பதிக்காததே. அரசியலில் வலுவாக காலூன்றிய சமூகங்கள் எல்லா துறைகளிலும் முன்னேறியுள்ளன. அது இல்லாத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ளனர்.

இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகள் என்பது தமிழக அளவிலுள்ள பிரச்னைகள் மட்டும் அல்ல. நாம் அந்தக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். வடநாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ளது. அவர்கள் சேரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதில் அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). துவங்கிய குறைந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக SDPI வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக எஸ்.டி.பி.ஐ திகழ்கின்றது.

பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலை சமூகம் உணர்ந்து வீரியத்துடன் நமது உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொடர்ந்து ஆக்கபூர்வமான, தன்னலமற்ற அரசியல் பணிக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி தனது முழு பங்களிப்பையும் கொடுக்கும்.

இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ICS-ன் உறுப்பினர் சேர்க்கை படிவம் வெளியிடப்பட்டது. அதில் அமீரக தலைவர்கள் முன்னிலையில் திரளாக மக்கள் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியில் இணைந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ICS-ன் கர்நாடக மாநில பொது செயலாளர் ஸஹீருல் ஹக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, அமீரக செயலாளர் அபுல் ஹஸன் அவர்கள் நன்றியுரையை நவின்றார். கலந்துகொண்டவர்கள் ICS-ன் நிர்வாகிகளிடம் கைலாகு கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ்... 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)