முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குவைத்தில் உள்ள பிரபல நிருவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை..


குவைத்,ஏப்ரல் 06 : குவைத்தில் உள்ள "ELECTRO MECHANICAL MAINTENANCE CONTRACT IN KOC HOSPITAL " என்ற பிரபல நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வரும் 15 .04 .2012 அன்று நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது எனவே அவற்றில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 72005 00225 .

1 ) Mechanical Engineer , 4 பேர் தேவை, சம்பளம் KD 250 +50 +25 படிப்பு: Degree in Mechanical அனுபவம்: 5 வருடம்.

2 ) Electrical Engineer , 5 பேர் தேவை, சம்பளம் KD : 250 +50 +25 , படிப்பு: Degree in Electrical அனுபவம்: 5 வருடம்.

3 ) A /C Technician , 8 பேர் தேவை, சம்பளம் KD : 220 , படிப்பு: Diploma 3 Years அனுபவம்: 10 வருடம்.

4) Helper, 15 பேர் தேவை, சம்பளம் KD : 70 , படிப்பு: ITI 2 Years அனுபவம்: 3 வருடம்.

5)Auto Electrician, 10 பேர் தேவை, சம்பளம் KD : 120 , படிப்பு: Diploma/ITI, அனுபவம்: 10 வருடம்.

6) Driver(Kuwait Licence),15 பேர் தேவை, சம்பளம் KD : 90 ,அனுபவம்:Valid Licence.

7) Safety Officer,10 பேர் தேவை, சம்பளம் KD :250 ,படிப்பு: Diploma 3 Years,அனுபவம்:7 years.

8) Electrician, 25 பேர் தேவை, சம்பளம் KD :120 ,படிப்பு: Diploma 3 Years,அனுபவம்:7 years.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

சென்னை யாசர்

இந்தியாவில் புரட்சிக்கு ராணுவம் முயற்சி: நாடு அதிர்ந்தது!


டெல்லி, ஏப்ரல் 5 : மத்திய அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தெரியாமல் தரைப்படையின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தேசிய அரசியலை மிகவும் உலுக்கியுள்ளது பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகியோர் செய்தி ஆதாரமற்றது, பொய்யானது என விளக்கமளித்தாலும் மர்மம் இதுவரை விலகவில்லை.
பாதுகாப்பு செயலாளரையும், ராணுவ துணைத் தலைவரையும் பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்தது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.
பிறந்த நாள் தேதி குறித்த சர்ச்சையில் தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியதற்கு அடுத்த நாள் ஜனவரி மாதம் 16-ஆம் தேதிக்கும், 17-ஆம் தேதிக்கும் இடையில் ராணுவத்தின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த mechanised infantry படையும், ஆக்ராவிலிருந்து Para Brigade படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லிக்கு வந்திறங்கியது. அந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக ராணுவ பிரிவுகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ராணுவப் புரட்சி குறித்த செய்தியை பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரிடம் ராணுவத்தின் புரட்சிக்கான முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த செய்தி பீதியைக் கிளப்புவதற்கென்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை அப்படியே உண்மையென்று கருதத் தேவையில்லை. தளபதி பதவி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.” என்றார்.

ராணுவப் புரட்சி நடத்த முயற்சி என்ற செய்தி ஆதாரமற்றது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் கூறியது:

இந்த வித அணிவகுப்பு வாடிக்கையானதுதான். அன்று அசாதாரணமாக எதுவுமே நடக்கவில்லை. நமது ராணுவத்தின் தேசப்பற்று குறித்து எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்மையான தேசப் பற்று உள்ளவர்கள். எல்லைப் பகுதியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். நமது ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்களுடைய நாட்டுப்பற்று குறித்து எந்த சந்தேகமோ கேள்வியோ யாருக்கும் எழத் தேவையில்லை. ராணுவப் புரட்சிக்கு முயற்சி நடந்தது என்பது போன்ற செய்தி தவறானது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்புப் படைகளின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகைகள் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், இது போன்ற செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்றும் தேச நலனுக்கு விரோதமானது என்றும் கூறினார்.

இச்செய்தி குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:

அடிப்படையற்ற தகவல். ராணுவப் படையினரின் வழக்கமான இடப்பெயர்வு நடவடிக்கை தான் அன்றும் நடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தி திரித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் என்பது பெருமைக்கும், கண்ணியத்துக்கும் உரியது. அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்களில் எக்காலத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ ராணுவத்துக்கு துளி கூட விருப்பம் இருந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இச்செய்தி குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திட வேண்டும். ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க காரணமே அந்தோணி தான். அவர் பதவி விலக வேண்டும். அதை அவர் செய்யாவிட்டால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சிக்கலில் மாட்டவைத்துள்ள 3-வது சம்பவம் இதுவாகும். முன்னர் பிறந்த தேதி சர்ச்சையில் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தரைப்படை தலைமை தளபதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். தாத்ரா ட்ரக்குகள் வாங்க 14 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றது குறித்து வி.கே.சிங் செய்தி வெளியிட்டது 2-வது சம்பவமாகும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EKA .முனவ்வர் கான்

சிறுநீரகக்கல்லுக்கு உடனடி தீர்வு..!!!


உலகம்,ஏப்ரல் 02 :நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.
அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம். எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

தமிசுதீன் நாகைப்பட்டினம் (துபாய்)

INTJ தலைமை அலுவலகத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஜெர்மன் பெண்..!!


சென்னை, மார்ச் 31 : இஸ்லாமிய அழைப்பு பணியினை முதன்மை விசயமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நேற்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிருஸ்தவ பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜனாப். சையது இக்பால் ஆங்கில மொழிபெயர்ப்பு குர் ஆன் ஒன்றை வழங்கினார்.
source from : www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் அபு பைசல்

முத்துப்பேட்டை கூட்டுறவு அங்காடியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்...



முத்துப்பேட்டை,மார்ச் 30 ௦: முத்துப்பேட்டை அடுத்து பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அங்காடியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அந்தந்த மாதத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் இன்று பேட்டை சிவன் கோயில் அருகே நடைபெற்றது. அதில் மண்ணெண்ணை மாதத்திற்கு இரண்டு தடவை முன்னறிவிப்பு இல்லாமல் மண்ணெண்ணை வழங்குகிறார்கள். இதனால் கூட்டம் அதிகமாகி தள்ளு முள்ளு ஏற்படுகிறது. டோக்கன் கொடுத்து வரிசையை வரிசையை முறைப்படுத்துவதில்லை, மண்ணெண்ணை அந்ததந்த மாதத்திற்கு எல்லோருக்கும் கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் வேலையை போட்டு விட்டு வரிசையில் நின்றும் மண்ணெண்ணை கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவற்றை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எ. காளிமுத்து தலைமை யில் நடைபெற்றது த.மு.எ.க.சங்க செயலாளர் சி.செல்லத்துரை வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு பி.என்.தங்கராசு, ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன், த.வி.ச.மாவட்ட துணைசெயலாளர் என்.ஜி.முருகையன், த.மு.எ.க.பொருளாளர் பி.ஆறுமுகம், ம.தி.ப.சங்க மாவட்ட செயலாளர் கே.பாலசுப்ரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!


பெங்களூர்,மார்ச் 30 ௦:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழையும் பொழுது உடலில் தீப்பற்றியது. கேரளாவைச் சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றியதாக உறவினர்கள் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு மேலாக அஜ்மலை கேரளாவைச் சார்ந்த மாணவர்களின் தலைமையில் அஜ்மலை ராகிங் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழைந்த பொழுது தீப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க முயன்ற அஜ்மலின் உடலில் பெரும்பகுதி தீயால் காயமடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிட்சைக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அஜ்மலிடம் பணம் கேட்டு மிரட்டியதால் மூன்று மாதம் முன்பு அஜ்மலின் தாயார் தனது தங்கச் செயினை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து செயினை விற்று கிடைத்த தொகையில் 20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை அடுத்த ஆண்டு தரலாம் என்று உறுதி அளித்தனர். ஆனால், பின்னர் அஜ்மலை கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வாடகை அறையில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். அஜ்மலுக்கு மார்ச் 22-ஆம் தேதி உடலில் தீக்காயம் ஏற்பட்ட பிறகும் கல்லூரி நிர்வாகிகள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஹாஸ்டலில் உள்ள மாணவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள்தாம் பெற்றோருக்கு இவ்விபரம் தெரியவந்துள்ளது.
2011 செப்டம்பர் மாதம் அஜ்மல் பெங்களூருக்கு எஞ்சீனியரிங் பயில சென்றுள்ளார். ஏரோநாடிகல் எஞ்சீனியரிங் படிக்க விரும்பிய அஜ்மலுக்கு கல்விக் கடனை வாங்கி படிக்க அனுப்பியுள்ளனர். அவரது தந்தை அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.

பழனி பாபாவை பற்றிய ஓர் ஆவணப்படம் விரைவில், ஆளூர் ஷாநவாஸ் பேட்டி!




சென்னை,மார்ச் 24 : இறந்து போன பழனி பாபா அவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஜனாப். அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:
காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்பட உருவாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு பழனி பாபா அவர்களைப்பற்றிய அவானப்பட உருவாக்கத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அவர் தெரிவித்தார். ஏனென்றால் பழனி பாபா நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தவர் என்றும், அவரது பேச்சுகள் அனைத்தும் காட்சி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பழனி பாபாவோடு பழகியவர்களும், அரசியல் நடத்தியவர்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே அவரைப்பற்றிய ஆவணப்படம் என்பது மிக எளிதாகவும், விரைவாகவும் செய்து விடக்கூடிய ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அதற்க்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். விரைவில் அந்த தலைவரின் வரலாறும் ஆவணப்படமாய் உங்கள் கைகளில் தவழும் இன்ஷா அல்லாஹ்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை.

முத்துப்பேட்டை SDPI -யின் கோரிக்கையை ஏற்று உறுதியளித்த வட்ட வழங்கல் அலுவலர்!



முத்துப்பேட்டை, மார்ச் 21 : திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக முறையற்ற முறையில் சமையல் எரிவாயு கேஸ் வினியோகம் செய்யும் மரியா (HP) மற்றும் - இன்டேன் கேஸ் நிறுவனத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி 22 .03 .2012 அன்று அறிவித்தது தொடர்பாக திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜாராம். அவர்கள் முன்பாக சமாதான கூட்டம் நேற்று
20 ௦.03 .2012 மாலை நடைபெற்றது. கூட்டத்தில் SDPI கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர் டோர் டெலிவரி கட்டாயமாக செயல்பட வேண்டும். சிலிண்டர் வரும்போது வாடிக்கையாளர்களுக்கு தெரிவதற்கு முன்பாக புரோக்கர்களுக்கு முன் தெரிந்து அவர்களே பெற்றுச் சென்று விடுகின்றனர் என்று புகார் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் கிடைக்கப் பெறுவதில்லை. முன் பதிவு முறையில் கேஸ் பதிவு செய்தவர்களுக்கு எடுத்து வருவதை இடையில் பதிவு செய்தவர்களுக்கு வழங்குவதால் தான் பதிவு செய்த நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் முறையை கைவிட வேண்டும். ஏற்றத்தாழ்வு பாராமல் பதிவு முப்பது அடிப்படையிலே நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும், என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மரியா கேஸ் நிறுவனத்தின் சார்பில் மேலாளர் திரு. ராஜாராமன் என்பவர் போராட்டக் குழுவினர் கூறியவாறு பதிவு மூப்பின் அடிப்படையில் டோர் டெலிவரி மூலம் வரிசையாக வழங்குவதாகவும், இனிவரும் காலங்களில் வாடிக்கையாளர் வீடுகளுக்கு முறையாக சமையில் எரிவாயு உருளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். பின்னர் 22 .03 .2012 யில் நடக்க விருந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கைவிடப்பட்டது. மேலும் போராட்டக்குழுவினர் தரப்பில் சூழ்நிலை சமரச நிலைக்கு வந்ததாக உறுதியளித்தனர்.



இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் அவர்கள், நாங்கள் கொடுத்துள்ள மனுவிற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் எங்களை அழைத்து பேசினார்கள், மேலும் அவர்கள் எழுத்து பூர்வமாகவும் எழுதியும் கொடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மிகப்பெரிய அளவில் இவற்றை நாங்கள் நடத்த தயாராக உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் ஜனாப்.பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் ஜனாப்.நெய்னா முஹம்மது, நகர செயற்குழு உறுப்பினர் ஜனாப். நிசார் அஹமது, மற்றும் SDPI யின் துபாய் பிரதிநிதி ஜனாப். M .காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

O .M .சுபைத் கான், ANA .நவாப்

முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தானில் இளம் பெண் கடத்தல்! பொது மக்கள் சாலைமறியல்!



முத்துப்பேட்டை, மார்ச் 19 : முத்துப்பேட்டை அடுத்து பெருகவாழ்ந்தான் காவல் சரகம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை அவர்களது மகள் மீனா (வயது 17) தனது உறவினருடன் தென்பரை கிராமத்துக்கு பஸ்ஸில் சென்றார். பின்னர் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்ற போது தல மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் தமிழ் நேசன் மற்றும் சிலர் காரில் மீனாவின் துணைக்கு வந்த பெண்ணை தாக்கிவிட்டு மீனாவை கடத்தி சென்று உள்ளனர். தகவல் அறிந்ததும் மீனாவின் தாய் செல்வி அண்ணாத்துரை பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் சென்ற மாதம் 19 ம் தேதி புகார் கொடுத்துள்ளார். முறையாக தகவல் இருக்கும் இடம் ஆகியவற்றை மீனாவின் உறவினர்கள் கூறியும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த புத்தகரம் கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக அறிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதமும் எழுதி அனுப்பி உள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை, அதன் அடிப்படையில் திட்டமிட்டப்படி இன்று காலை காவல் நிலையம் முன்பு உண்ணா விரதம் இருப்பதற்காக புத்தகரம் கிராம மக்கள் சுமார் 300 பேர் ஊர்வலமாக நடந்து வந்தனர். அப்போது கடைதெருவிலிருந்து காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் குணா சேகரன் தலைமையில் போலீசார் போராட்டகாரவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டன. இதனால் பதட்டம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுபடுத்த முடியவில்லை. பின்னர் பொது மக்கள் காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதத்தை துவங்கினர். இதில் இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பால சுப்பிரமணியன், தி.மு.க. நிர்வாகிகள், கோவிந்தராஜ்,ராமசாமி, ராமநாதன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஐயம் பெருமாள், பலரும் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கோபி தலைமை போலீசார், போராட்ட குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த பெண்ணை இன்னும் மூன்று நாளைக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் போராட்ட குழுவினரும் கிராம மக்களும் உண்ணா விரதத்தை விளக்கி கொண்டனர் இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,

முத்துப்பேட்டையில் போலி சிலிண்டர் விநியோகம்,வட்ட வழங்கல் அலுவலர் திடீர் சோதனை..




முத்துப்பேட்டை, மார்ச் 18 : முத்துப்பேட்டையில் கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விநியோகம் மிக தட்டுபாடாகவே இருந்து வந்தது. இது குறித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் சம்மந்தப்பட்ட துறைக்கு பல முறை புகார் தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத HP சிலிண்டர் நிர்வாகம் சுதந்திரமாக உலா வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களும் மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்களும் போராடினார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதி உள்ளனர். இதனை அறிந்த தஞ்சாவூர் ஆயில் துணை மேலாளர் திரு.ராஜேஷ் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் (TSO ) ஆகியோர் கொண்ட குழு அமைத்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஹோட்டல் மற்றும் சிறிய கடைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. சோதனையிட்ட எல்லா கடைகளிலும் அனுமதி இல்லாத காலி சிலிண்டர்கள் சுமார் 179 மற்றும் 5 முழு சிலிண்டரையும் கைப்பற்றினர். இதனை அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொது மக்கள் மற்றும் SDPI மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் பொருளாளர் நெய்னா முஹம்மது ஆகியோர் ஒன்று சேர்ந்து ஊரில் நடக்கும் அவலங்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அனைவரிடமும் உள்ள குறைகளை பெற்று இதற்க்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எழுத்து மூலமாக எழுதியும் கொடுத்துள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அதிகாரிகள், இன்று நடைபெற்ற சோதனை யில் மொத்தம் 184 போலி சிலிண்டர்கள் இடைத்தரகர் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இனிமேல் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நமதூர் கொய்யா மஹால் எதிரே உள்ள மரியா சிலிண்டர் நிறுவனம் அனுமதி இல்லாமல் நடத்தியது சோதனையின் போது தெரியவந்தது. அவற்றை உடனே அகற்ற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, OM . சுபைத் கான்.

காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை விரைவில்! அமைச்சர் பழனிமாணிக்கம் பேட்டி


தஞ்சாவூர், மார்ச் 17 : காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையை மாற்றும் பணிகள் இந்த மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றப்பட உள்ளது. இதன் நீளம் 149 .42 கீ.மீ, ஆகும். இதே போல் திருவாரூர் அகஸ்தியப்பள்ளி இடையே உள்ள 36 .80 கீ.மீ தொலைவு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டம் உள்ளது. இதன் மொத்த மதிப்பீடு 506 .76 கோடி. இந்த இருவழித் தடங்களில் 30 பெரிய பாலங்களும், 542 சிறு பாலங்களும் உள்ளன. இப்பணிகள் தொடங்க 12 தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகள் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் முதல் கட்ட மாக 73 கீ.மீ. தொலைவுள்ள காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதைப்பணியை 2014 செப்டம்பர் மாதத்திற்குள்ளும், அடுத்த கட்டமாக 49 கீ.மீ. தொலைவுள்ள பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அகல அகல ரயில் பாதைப்பணியை 2016 மார்ச் மாதத்துக்குள்ளும், 26 கீ.மீ. தொலைவுள்ள திருத்துறைப்பூண்டி - திருவாரூர் அகல ரயில் பாதைப்பணியை 2015 செப்டம்பர் மாதத்திற்க்குளும், ஆகிய அனைத்து பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com
நன்றி

தினமணி நாளிதழ்

அகல ரயில் பாதை அமைக்க MMJ முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அலோசனை கூட்டம்.


முத்துப்பேட்டை, மார்ச் 17 : திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் அகல ரயில் பாதை அமைக்கக் கோரி பல முறை அரசுக்கு எடுத்துரைத்தும் செவி சாய்க்காததால் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் MMJ . இவற்றை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த MMJ வின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள், முத்துப்பேட்டை முதல் காரைக்குடி வரை உள்ள அகல ரயில் பாதை வழியை கண்டு கொள்ளாத அரசை கண்டித்தும், போராட்டத்தை தீவிர படுத்தும் பொருட்டு வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை 18.03.2012 மாலை 4 மணியளவில் நமதூர் கொய்யா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

OM . சுபைத் கான்

துபாயில் உள்ள பிரபல "FIRST TECHNOLOGY " நிருவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை.


துபாய்,மார்ச் 17 : FIRST TECHNOLOGY என்ற பிரபல நிறுவனத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைபடுகிறது.
1 ) CIVIL ENGINEER (BE SIVIL) சம்பளம் திரகம் 3000 .
2 ) CIVIL FOREMEN DIP (CIVIL) சம்பளம் திரகம் 3000 .
3 ) TELECOM ENGINEER (BE , ECE ). சம்பளம் திரகம் 3000 .
4 ) TELECOME TECHNICIAN சம்பளம் திரகம் 3000. இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 18 .03 .2012 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. எனவே இந்த பணிகளில் சேர விற்பம் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு சென்னை யாசர்: 72005 00225 .

நமது நிருபர்

சென்னை யாசர்

மவுத்து அறிவிப்பு: "M .அன்வருதீன்"


முத்துப்பேட்டை, மார்ச் 16 : கல்கேனித் தெரு மர்ஹும் SM. இபுராஹீம் அவர்களின் மகனும், பாலாவை MM .காதர் முஹைதீன் அவர்களின் மருமகனும், M .அன்சாரி, M .அப்துல் ரசாக் ஆகியோரின் சகோதரரும், பாலாவ KM .சேக் முஹம்மது அவர்களின் சம்மந்தியும், செல்லாப்ப என்கிற S .காதர் முஹைதீன் அவர்களின் மாமனாரும், MTKM . ஹமீது சுல்தான் KM .முஹம்மது இபுராஹீம், PKM . அப்துல் ரஹ்மான், RA . மீரா உசேன் ஆகியோரின் சகலையும், MMK .சேக் முஹைதீன், MMK . கமால் முஹைதீன் ஆகியோரின் மச்சானும், A . முஹம்மது தாகிர் அவர்களின் தகப்பனாருமாகிய M . அன்வருதீன் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 .30 மணியளவில் முஹைதீன் பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.mttexpress.com
அறிவிப்பவர்

MM . காதர் முஹைதீன்

நமது நிருபர்

KM.காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் நடைபெற்ற ம.ம.க வின் மாபெரும் ஆர்பாட்டம்!!!





முத்துப்பேட்டை,மார்ச் 15 : முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் தமிழக அரசு அரிவித்த 4 மணி நேரத்திற்கு மேல் எந்த அறிவிப்பும் இல்லாமல் மின் தடை, HP, கேஸ் நிறுவனத்தின் முறையற்ற பராமரிப்பை கண்டித்தும், முத்துப்பேட்டை நகரங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க பேரூராட்சி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பன மூன்று கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் MMK கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். நாச்சிக்குளம் M . தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர் . இதில் மாவட்ட தலைவர் ஜனாப். K . நூர்தின், மாவட்ட செயலாளர் ஜனாப். S . முஹம்மது மாலிக், துணைத்தலைவர் ஜனாப். M . சம்சுதீன், நகர செயலாளர் வழக்கறிஞர் L . தீன் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

யூசுப் அலி (ஆலிம்)

மவுத்து அறிவிப்பு: " அப்துல் சலாம்"


முத்துப்பேட்டை, மார்ச் 12 : குத்பா பள்ளி தெரு மர்ஹும் SM . சேக்கா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹும் டீக்கடை அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், NS . சகாப்தீன் NS . ஷேக் அப்துல் காதர், NS . ஹாஜா, மர்ஹும் NS . நாகூர் பிச்சை, NS .சுல்தான் ஆகியோரின் தம்பியும் மாகிய அப்துல் சலாம் அவர்கள் இன்று மதியம் 1 .45 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 .மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்

SM . நெய்னா முஹம்மது, NS . சகாப்தீன் பிரதர்ஸ்

நமது நிருபர்

KM . காதர் கனி (பாடகர்)

த.மு.மு.க. தலைவர் KS.ரிபாயி அவர்களை சிறையில் சந்தித்த INTJ நிர்வாகிகள்


சென்னை, மார்ச் 11 : த.மு.மு.க வின் தலைவர் ஜனாப் கே.எஸ். ரிபாயி அவர்கள் புழல் சிறையில் இருக்கும் இவரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜனாப். S.M . பாக்கர், துணைத்தலைவர் M .I .முஹம்மது முனீர், திருவள்ளூர் மாவட்டம் தலைவர் வேலூர் இப்ராஹீம், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த INTJ தலைவர் ஜனாப். S .M . பாக்கர் அவர்கள் சகோதரர் ரிபாயி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும், மேலும் அவர் சிறையிலிருந்து விரைவில் வெளிவரவும் இறைவனிடம் துவா செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முத்துப்பேட்டை முஹைதீன்

முத்துப்பேட்டை கவுன்சிலர் சாக்கடை கலந்த குடிநீருடன் வந்ததால் பரபரப்பு!!!



முத்துப்பேட்டை, மார்ச் 11 : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் புரங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுபாடு பெரும் அளவில் உள்ளது. சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டால் வர்த்தகம், தொழில், அரசு அலுவலக பணிகள் பெரிதளவு பாதிப்புகள் ஏற்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, அதன் வகையில் முத்துப்பேட்டை நகருக்கு வரும் கொள்ளிடம் குடிநீரை சேமித்து வைக்க மின் மோட்டார் பயன்படுத்தி வருகிறார்கள். இது மின்வெட்டால் தடைபட்டது மட்டும் அல்லாமல் சுற்றுபுற நகரங்களிலிருந்து வரும் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அந்த பணி தற்போது முடிந்து முத்துப்பேட்டை நகருக்கு சில திங்கங்கலாக முறையான குடிநீர் வழங்கக்கப்பட்டு வந்த நிலையில் அப்போது திடீர் என்று பொது மக்களுக்கு ஊர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது என்ன வென்று பார்க்கும் போது குடிநீரில் சாக்கடை கலந்து வருவதுதான். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பேட்டை கவுன்சிலர் ஜனாப். ஜபருல்லாஹ் சாக்கடை கலந்து குடிநீரை ஒரு பாட்டிலில் அடைத்து பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் அங்கிருந்தே தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அப்போது இதற்க்கு உடனே நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால் அமைதியாக சென்றார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கவுன்சிலர் .ஜபருல்லாஹ் எங்க பகுத்திக்கு வரும் குடிநீர் மட்டும் அல்ல எல்லா பகுதிகளுக்கும் வரும் குடிநீர் இதே அவலத்துடன் தான் வருகிறது என்றும், இவற்றை உடனே சரி செய்யாவிட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்றும் அவர் தரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, EKA . முனவ்வர் கான்

மதுவை ஒலிக்க முஸ்லிம் பெண்கள் எடுத்த அவதாராம், மிரண்டு போன தமிழகம்..!!


சென்னை,மார்ச் 08 : நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மது மற்றும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி சென்னை இராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. இதில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவி ஆர். ஜீனத் ஆலிமா தலைமை தாங்கி நடத்தித்தந்தார்.தமிழகத்தில் தற்போதையை கணக்கெடுப்பின் படி 6696 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது எனவும் 4350 பார்கள் இயங்கி வருகிறது எனவும் கூறப்படுகிறது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று ஒவ்வொரு மதுக்கடைகளிலும் எழுதி வைத்துவிட்டு அதை அரசாங்கமே நடத்தும் அவல நிலை நமது இந்தியாவில் மட்டுமே காண இயலும். சமூகத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மதுவிற்கு அங்கீகாரம் அழித்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மதுவை அருந்திவிட்டு தன்னிலை உணராமல் சாலை ஓரங்களில் விழுந்துகிடக்கும் அவலங்களை நம்மால் காண முடிகிறது. அச்சாலை வழியாக செல்லும் பெண்களுக்கும், பள்ளிக்குழந்தைகளுக்கும் பெரும் இடையூறாக அமைந்துவிடுகிறது என்பதற்கான மாற்று கருத்து யாருக்கும் இருக்கவியலாது.அதே போன்று இந்தியாவில் பெண்களுக்கென்று தனி கவுரவமும், மரியாதையும் எப்போதுமே இருக்கும். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்று போற்றி புகழ்ந்து கொண்டிருந்த நமது தேசத்தில் ஆபாசம் என்ற ஒழுக்கக்கேடு புகுந்து சமூகத்தை சீரழித்து வருகிறது. பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை அதிவேகமாக பரவி வருகிறது. எனவே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மது மற்றும் ஆபாசத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக உலக மகளிர் தினமான மார்ச்-8ஐ முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் ஹெச். ஆயிஷா ஹமீது அவர்கள் "மது மற்றும் ஆபாசம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட N.W.F-ன் மாநில துணைத்தலைவி எம். நபிஸாபானு "இன்றைய பெண்களின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதியாக சென்னை மாவட்ட செயலாளர் எஸ். அஹமது மல்லிகா நன்றியுரை நிகழ்த்தினார். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

சவுதி அரேபியாவில் உள்ள AL-RASHED FOODS நிறுவனத்திருக்கு ஆட்கள் தேவை..


சவுதி அரேபியா, மார்ச் 06 : சவுதி அராபியாவில் உள்ள பிரபல AL - RASHED FOODS .CO என்ற நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது:
1) DATA BASE ADMINISTRATION - சம்பளம் ரியால், 4,000.
2) Accountant - சம்பளம் ரியால்,2000.
3) Store Keeper - சம்பளம் ரியால்,1800.
4) Electrical Supervicer - சம்பளம் ரியால்,2500
இதில் சேர குறைந்தது 2 வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இந்த பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் வருகிற மார்ச் 12 , 13 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு: சென்னை யாசர் : 72005 00225.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

சென்னை யாசர்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)