முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ரத யாத்திரையை நிறுத்துவிட்டு அத்வானி மன்னிப்புக்கோர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ


புதுடெல்லி,அக்டோபர் 16 : ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தும் அத்வானி யாத்திரையை நிறுத்திவிட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர தயாராக வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.வளர்ச்சியின் இரண்டாவது அப்போஸ்தலராக பா.ஜ.க உயர்த்திக் காட்டிய கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா கைதான சூழலில் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை எழுப்ப பா.ஜ.கவுக்கு உரிமையில்லை. எடியூரப்பாவை தவிர அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மேலும் 3 பேர் சிறையில் இருப்பது பா.ஜ.கவின் கொள்கை வறட்சியை வெளிச்சம்போட்டு காட்டுகிறது என இ.அபூபக்கர் கூறினார்.அன்னா ஹஸாரேவை முன்னிறுத்தி ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தேசிய அரசியலில் எழுச்சிப்பெற நடத்திய பா.ஜ.கவின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.சங்க்பரிவார் அமைப்புகள் பிரசாந்த் பூஷணின் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஹஸாரேவின் சாயம் மேலும் வெளுத்துள்ளது. இதர வழிகள் ஒன்றும் இல்லாததால் ஹஸாரே மெளன விரதத்தை கடைப்பிடிக்கிறார். அத்வானி ரதத்தை கர்நாடகாவுக்கு திருப்பி மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.’ இவ்வாறு அபூபக்கர் கூறினார்.

நமது நிருபர்

சித்திக் அஹ்மத் (லண்டன்)

ரதயாத்திரையை வெற்றிப்பெறச்செய்ய லஞ்சம்: பா.ஜ.க தலைவர் சஸ்பெண்ட்


புதுடெல்லி, அக்டோபர் 16 : ஒரு புறம் பா.ஜ.கவின் தென்னக ஹீரோ எடியூரப்பா ஊழல்புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் ஊழலுக்கு எதிராக எல்.கே.அத்வானி நடத்தும் காமெடி யாத்திரையை குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் அளித்தது தொடர்பாக பா.ஜ.க ஊடக பிரிவு தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஊடக பிரிவைச் சார்ந்த சியாம் குப்தாதான் லஞ்சம் அளித்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் லஞ்சம் கொடுத்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க எம்.பி கணேஷ்சிங், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நாகேந்திர சிங் ஆகியோர் மீது பா.ஜ.க நடவடிக்கை எடுக்கவில்லை.ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தும் ரதயாத்திரையை வெற்றிப் பெறச்செய்ய பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் வழங்கியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.கடந்த புதன்கிழமை பா.ஜ.க எம்.பி நாகேந்திரசிங் அழைத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் லஞ்ச பணம் விநியோகிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகை அறிக்கைகளுடன் அளித்த உறையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் வழங்கப்பட்டிருந்தன.

நமது நிருபர்

புர்கானுதீன் (கனடா)

முத்துபேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் SDPI கட்சியினர்!







முத்துப்பேட்டை, அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் வாக்கு சேகரித்தார் இதன் பின்பு பேசிய அவர், அரசியல் என்பது மிகப் பெரிய ஒரு அறியானத்திற்கு சொந்தமானது என்றும், நமது பகுதிகளில் இருக்கக் கூடிய மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கட்டும், காவல் துறை அதிகாரிகளாக இருக்கட்டும், வருவாய்துறை அதிகாரியாக இருக்கட்டும் இவை அனைத்தையும் ஆட்டிப்படைக்க கூடிய சக்தி அரசியலுக்கு உண்டு என்றும், நல்லவர்கள் ஒதுங்கிக் கொண்ட காரணத்தினால்தான் கெட்டவர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றும், நாம் இதை பார்த்து கொண்டு இருந்தோமையானால், இதற்கு ஒரு சிறிய உதாரணம் நம்மளுடைய பகுதிகளில் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கின்றது, மறு நாள் பார்த்தல் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது, எனவே இதை கேட்பதற்கு நாதி இல்லை என்று மக்கள் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இதை அரசியலில் மலிந்து கொண்டிருக்கின்ற சாக்கடைகளை துடைத்தெரிவதற்குத் தான் SDPI கட்சியானது அரசியலில் களம் இறங்கி உள்ளது. மேலும் ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவரவர் சதவீதத்திற்கு தகுந்தார் போல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி துவக்கப்பட்டதுதான் இந்த SDPI . மேலும் முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களின் சொத்து வரிகளை இந்த பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரிகளில் முறைகேடு, குடிநீர்களில் முறைகேடு, இன்னும் மக்களுக்கு சேவைபுரிவதில் முறைகேடு, கல்விக்குழு தலைவராக இருக்கக் கூடிய பேரூராட்சி தலைவர் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய பல நலத்திட்டங்களை செய்யவில்லை என்றும் பள்ளிகளில் படிக்ககூடிய மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் இல்லை என்றும், இதை எல்லாம் போக்குவதற்கு இறைவன் மீது ஆணையாக எந்த நிதியிலும் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டோம் என்று வாக்குறிதி கொடுக்கின்றேன் என்றும் அவர் தெருவித்தார்.சிலர் நீ எப்படி ஊழல் செய்யாமல் இருக்க போகிறாய் பாப்போம் என்று கேட்டார்கள், அதற்கு ஒரு உதாரணம் அன்ன துறை அவர்களும், கக்கன் அவர்களும், ஜீவா அவர்களும், காமராஜ் அவர்களும் ஊழால் செய்யாமல் இருந்து தனது பணியை திறன்படா செய்த வரலாறு உண்டு, இவர்களுக்கு முடியும் என்றால் நான் முஹம்மத் நபி வரலாறை படித்தவன், இந்த அபூபக்கர் சித்திகள் ஊழல் செய்யாமல் இருக்க முடியும், எனவே என்னை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மனித நேய மக்கள் கட்சியினர்!






முத்துப்பேட்டை,அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மாஷா மாலிக் என்கிற முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரித்து மாநில துணை பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் ஆசாத் நகரில் பிரச்சாரம் செய்தார் அதில் பேரூராட்சி குருத்து மக்கள் குறைகளை கூற தொலைபேசி மூலம் SMS வசதியை கொண்டு வரப்படும் என்றும், மேலும் பேரூராட்சியின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக, பேரூராட்சிக்கு என்று தனிதொரு இணையலதளம் உருவாக்கப் போவதாகவும் அவர் தெருவித்தார். முத்துப்பேட்டையின் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் என்ற 3 அம்ச திட்டத்தின் படி, முத்துப்பேட்டையை முழுமையாக முன்னேற முயற்ச்சிகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் தெருவித்தார்.ரத்த தானம் முகாம், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் சேவை, அவசரகால பாதுகாப்பு, இப்படிப்பட்ட சேவைகளை கடந்த ௧௬ ஆண்டுகளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செய்து வருகிறது. இவற்றை மக்கள் அன்கிகரிப்பால் மனித நேய மக்கள் கட்சி முத்துப்பேட்டை உள்பட பரவலாக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TMMK வின் மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன், TMMk நகர தலைவர் சம்சுதீன், மற்றும் கழக தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் முடிவுற்ற தேர்தல் பிரச்சாரம் ஒரு பார்வை!







முத்துப்பேட்டை, அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களுடைய வாக்குகளை மக்களிடம் கேட்கும் விதமாக வாகன ஏற்பாடு செய்தனர், அதில் நேற்று மலை முதல் தேர்தல் வாக்கு சேகரிப்பு 5 மணியளவில் முடிவு பெற்றது அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சில கட்சிகளின் போட்டோ உங்கள் பார்வைக்கு...

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNs .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் 10 லட்சம் மதிப்புள்ள வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்!





முத்துப்பேட்டை,அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாட பண்ணுவது போல் வந்த தகவலை அடுத்து, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்தரவின் படி முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கோபி. (DSP ) . அவர்களின் மேற்பார்வையில் எடையூர் இன்ஸ்பெக்டர் திரு. ஆறுமுகம் சிறப்பு SI திரு.ராஜேந்திரன், செல்வம், தெட்சனமூர்த்தி, சண்முகம் இவர்களின் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இடையூறு அருகே திடீர் சோதனையில் இடுபட்டனர். அப்போது மிக வேகமாக வந்த காரை மறைத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டிவந்த SP பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் வயது 35 , மற்றும் முஜூபூர் ரஹ்மான் வயது 35 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனைதத் தொடர்ந்து மேலும் ஒரு கரை போலிசார் சோதனை செய்ய அந்த காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார், இந்த காரிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. தப்பியோடிய டிரைவர் போலீசார் தேடிவருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனமான பைக்கையும் அப்போது சோதனை செய்ததில் ஒரு பைக்கில் சுமார் 50 குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது இதில் அந்த பைக்கை ஓட்டி வந்த தாமரைக்கோட்டையை சேர்த்த கிஸ்சர் வயது 40 என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி 16 வது வார்டுக்கு போட்டியிடுகிறார் மெட்ரோ மாலிக்!




முத்துபேட்டை,அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள பேரூராட்சி மன்ற தேர்தலில் 16 வது வார்டுக்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிடப் போவதாக மெட்ரோ மாலிக் அவர்கள் தெருவித்துளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணயதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் வெற்றி பெற்றால் பல்வேறு நன்மைகளை எனது வார்டு மக்களுக்கு செய்வேன் என்றும், அதற்கு உதாரம் சென்ற தேர்தலில் நான் சாதித்தது தங்களுக்கு தெரியும் என்றும், கூப்பிட்ட குரலுக்கு எப்படி எல்லாம் ஓடி வந்தேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் எல்லா விதமான மத்திய மாநில அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை வீடு தேடிவந்து தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றும் எனவே ௧௬ வார்டு மக்களாகிய நீங்கள் என்னை அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எட்ன்ரும் அவர் தெருவித்தார். மேலும் தனது வார்டுக்கு சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பும் செய்துள்ளார். இதில் காங்கிரசின் நகர தலைவர்.ராஜேந்திரன், சட்ட மன்ற இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர். முஹைதீன் பிச்சை, மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரசின் செயலாளர். கந்தவேல், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர். தாஜுதீன், இளைஞர் காங்கிரசை சேர்ந்த தமீம், தாமரைசெல்வன்,மூத்த காங்கிரஸ் உறுப்பினர்.மாரிமுத்து, சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?





முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : களத்தில் 13 பேர்...! கலக்கத்தில் கட்சிகள்...! குழப்பத்தில் மக்கள்...! திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலுக்கு போட்டியிட 22 பேர் மனு கொடுத்து இருந்தனர். பின்னர் 9 பேர் வாபஸ் வாங்கி கொண்டனர் போட்டியில் 13 பேர் உள்ளனர். இது முத்துப்பேட்டை பேரூராட்சியில் இது வரை இல்லாத வரலாறு என்று சொல்லப்படுகிறது. காரணம் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தவரும் நினைத்ததின் விளைவும் நமது சமுதாயத்தில் நான்தான் நியாயமானவன் என்று காட்டிக் கொண்டதின் விளைவும் தான் இந்த போட்டிக்கு காரணம்.அதன் வகையில் களத்தில் உள்ள 13 பேர் உறவினர்களும், நண்பர்களும் யாருக்கு வாக்கு சேகரிப்பதில் பெரும் சங்கடத்தில் பலரும் உள்ள நிலையில், பேரூராட்சியில் உள்ள 18 வார்டுக்கும் கவுன்சிலர் பதவிக்கு சுமார் 80 பேர் போட்டி போடுவதால்முத்துப்பேட்டை நகரத்தில் தேர்தல் வேலை மிக சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு வேட்பாளருக்கு பின்னால் சென்று வாக்கு கேட்கும் தனது நண்பர்கள், மறுநாள் வேறு வேட்பாளருக்கு முன்னாடி சென்று வாக்கு கேட்பதால் வேட்பாளர்களுக்கு மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு வேட்பாளரிடமும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள் பின் வருமாறு. source from www.muthupettaiexpress.blogspot.com

1 ). அபூபக்கர் சித்திக்: நான் பேரூராட்சி நிதியிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

2 ). அப்துல் சலீம்: என்னை தலித் மக்கள் தேர்வு செய்து நிற்க வைத்துள்ளனர் என்றும், எனது பணி மக்கள் பாராட்டும் வகையில் அமையும் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

3 ) கோ.அருணாச்சலம்: நான் நீண்ட காலமாக நகர செயலாளராக இருக்கிறேன், அதற்கு காரணம் எனதின் திறமையான செயல்பாடு. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது முத்துப்பேட்டை மக்களுக்கு போராட்ட குரல் கொடுத்துரிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

4 ) முகைதீன் அடுமை: நான் இப்பகுதி மக்களுக்கு தேவை படுகிற பல விசயங்களையும், பல நல்ல காரியங்களையும், இஸ்லாமிய மக்கள் மக்கா செல்ல பல்வேறு சேவைகளையும் செய்துள்ளேன் என்றும், நமது பேரூராட்சியை நல்ல நிர்வாகமாக மாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

5 ). முஹம்மத் மாலிக்: மக்களின் முக்கிய பிரச்சனையான, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு இதனை முன்னிருமை படுத்தி கவனம் செலுத்துவதோடு மக்களின் தேவையை நன்கு அறிந்து திறமையாக செயல்பட பாடு படுவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

6 ). பத்மநாபன்: என்னை முத்துப்பேட்டை மக்கள் தேர்வு செய்தால் மக்களுக்கு சேவை செய்வதே எனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

7 ). சிவக்குமார் பேட்டை: என்னை தேர்வு செய்தால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமையும் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

8 ). எஸ்.தமீம்: நான் தி.மு.க.வின் உண்மையான விசுவாசி, நான் கவுன்சிலராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறேன்,என்னை தேர்வு செய்தல் சரித்திரத்தில் சாதனை படிப்பேன் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

அதே போல சுயேச்சை வேட்பாளரான:

9). சஹாப்தீன்: மொத்தம் உள்ள 18 வார்டுகளையும் என் நேரடி கண்காணிப்பில் இணைத்து அந்த அந்த வார்டு உருபினர்கலையும், முக்கிய பிரமுகர்களையும் கலந்து ஆலோசித்து, தேவைகளை அறிந்து உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

10 ). ஹாரூன்: முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர் எல்லோருக்கும் அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு தகுதியானவர் நான்தான் என்றும் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

11 ). லெப்பைத் தம்பி: மக்கள் பணியில் முறையான சேவை செய்யாமல் மக்களை அலைகழிக்கும் நேர்மையற்ற அதிகாரிகளை அகற்றி, நேர்மையான அதிகாரிகளை அமைத்து மக்கள் பணி தாமதமின்றி நடந்திட ஏற்பாடு சென்வேன் என்று கூறினார்.

12 ). ஜெயச்சந்திரன்: எல்லா மக்களுக்கும் பயன் பெரும் விதமாக பல்வேறு நல திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு கொண்டு வருவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

13 ). ஹாஜ மைதீன்: மிக முக்கியமாக குடிநீர் வசதி, தங்கு தடையின்றி முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

இந்த நிலையில் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதற்கு மாறாக ஒரு சமுதாயத்தில் பலரும் போட்டியிடுவதாலும், ஆளு ஆளுக்கு வித்தியாசமான வாக்குறுதி வழங்குவதாலும் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.யார் ஓட்டை யார் பிரிப்பார்? ஒவ்வொரு வேட்பாளர்களும் தனக்கு கிடைக்கும் வாக்குகளை கூறும் போது 13 வேட்பாளர்களுக்கு 48 ஆயீரம் ஓட்டுகள் கணக்கு வருது ஆனால் பேரூராட்சியில் 13 ஆயிரம் வாக்குதானே இருகின்றது. அதில் எத்தனை பதிவாகுமோ.. இதன் கணிப்பு யாருக்கு சாதகமோ என்ற குழப்பத்தில் கட்சியினர் உள்ளனர். இதே நிலைமைதான் 18 வார்டு கவுன்சிலர்கள், வேட்பாளர்களுக்கும் ஆனால் முத்துப்பேட்டை மக்கள் வேட்பாளர்களில் தனது சொந்த நடைமுறையில் யாரை பிடிக்கிறதோ அவர்களை தேர்வு செய்ய தயாராகி விட்டார்கள். முத்துப்பேட்டையில் யாரை நிலைமையை தற்போது கணித்து பார்க்கும் போது இரு சமுதாயத்தின் வாக்குகளையும் யார் அதிக அளவில் வாக்கு வாங்குவார்களோ அவர் தான் முத்துப்பேட்டையின் பேரூராட்சியின் தலைவர் ஆவார். பொறுத்திருந்து பாப்போம்!!! ஒற்றுமையின் குரல் ஓங்க.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.ASNS .அப்துல் பாரி.AKL .அப்துல் ரஹ்மான்.அபு மர்வா, முஹைதீன்.

முத்துப்பேட்டை பேரூராட்சி: வாக்கு சேகரிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!




முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கி.முஹைதீன் அடுமை அவர்களை, ஆதரித்து நேற்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில கொள்கை பரப்புச்செயலாளர், அல்ஹாஜ். G .M . ஹாஷிம் அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை முழுதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் தனது வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார். இதன் பின்பு பேசிய அவர்,தலைவர் கருணாநிதி உடன் இருந்து பல்வேறு உதவிகளை நமது சமுதாயாத்தவருக்கு பெற்றுத்தந்தது இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்றும், இந்த கட்சி பல ஆண்டுகளாக இருந்து வருவது தாங்கள் யாவரும் அறிந்ததுதான் என்றும், அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி செய்து கொடுப்பார் என்றும், இந்த கட்சி முஸ்லிம்கள் மீது அக்கறை காட்டக் கூடிய கட்சியாக இன்றுவரை இருந்து வருகிறது என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தலைவர் M .M . ஜலாலுதீன், திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி.M .முஹம்மத் அலி, திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் H .M .ஹபீபுல்லாஹ் மற்றும் கட்சி உறுபினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.AKL .அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டை பேரூராட்சி: MMK விற்கு வாக்கு சேகரிக்க MLA பங்கேற்பு!!






முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாஷா மாலிக் என்கிற முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர், அஸ்லம் பாஷா அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று தனது வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார், இதன் பின்பு பேசிய அவர், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமானது கடந்த ஆண்டுகளில் சமுதாய சேவைகளில் களப்பணியாற்றி வருவதாகவும், அதில் மக்களுக்கு முக்கியமாக ஆம்புலன்ஸ் சேவையை அதிகப்படுத்தி வந்துள்ளது என்றும், அவர் தெருவித்தார். எனவே கடந்த 16 ஆண்டுகள் சமுதாய சேவையில் களப்பணி ஆற்றிவந்த நமது வேட்பாளரான முஹம்மத் மாலிக் அவர்களுக்கு தாங்கள் வாக்களிக்குமாறும், இவர் பல்வேறு சமுதாய மக்களுக்கு ரெத்ததான முகாம், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ முகாம், ஆகிய சேவைகளை செய்துள்ளார் என்றும், எனவே இவரை வெற்றிபெற நீகள்தான் முன் வரவேண்டும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் நாங்கள் கொடுத்த தேர்தல் அறிக்கை அது ஒரு வாக்குறிதி என்றும் எங்களால் என்ன செய்யமுடியுமோ அவற்றை நாங்கள் தங்களுக்கு கொடுத்துள்ளோம் என்றும், அவர் தெருவித்தார். அனால் வேறு கட்சிகாரர்கள் தங்களுடைய வாக்குறிதிகலை அதிகமாக குறிப்பிட்டு அவற்றை செய்ய மாட்டார்கள் என்றும் அவர் தெருவித்தார். இந்த மனித நேய மக்கள் கட்சி சிறப்பான அரும்பணிகளை ஆற்றிவருகிறது என்றும் அதில் தனது வேட்பாளர் மிக எளிமையானவர் என்றும், தூய்மையானவர் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TMMK வின் மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன், TMMk நகர தலைவர் சம்சுதீன், மற்றும் கழக தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் வாக்கு சேகரிக்க களப்பணியில் SDPI !!!


முத்துப்பேட்டை, அக்டபேர் 15 : இன்று காலை 10 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் எதிர்புறத்திலிருந்து பெரிய கடைதெரு பழைய பேருந்து நிலையம் வழியாக ஆசாத் நகர் வரை மிகப் பெரிய ச்ட்பி செயல் வீரர்களும் ஆதரவாளர்களும் கொண்ட மாபெரும் ஊட்டு சேகரிப்பு நடைபெற இருக்கின்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாவட்ட செயலாளர் தப்ரே ஆழம் பாதுஷா அவர்கள், தற்போது இந்துக்கள் மத்தியிலும், முஸ்லிம்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும், தலித்தவர் மத்தியிலும் ச்ட்பி இந் பனி மிகப் பெரிய எதிர்பார்ப்பையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்றும், நாங்கள் மக்களிடம் நடந்து கொண்ட ஆகு முறை நடக்கக் கூடிய பிராச்சாரம், மேலும் எங்களுடைய வாக்குறுதி ஏற்படுத்தி உள்ள தாக்கத்திற்கு ஊக்கம் ஏற்படுத்தும் முகமாக இந்த ஒட்டு சேகரிப்பு பணி நடைபெற இருக்கின்றது என்றும், அவர் தெருவித்தார். இதில் மாணவர்கள் மற்றும் ஊர் பொது மாக்கலான அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். இதில் துபாய் மண்டல பொறுப்பாளர், யூசுப் சுகைல், நகர பொறுப்பாளர், நிசார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டையில் நச்சுக் கருத்தை விதைக்கும் நக்கீரன்!!!


முத்துப்பேட்டை,அக்டோபர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட கருத்து முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்துவா? முஸ்லிமா? என்ற கேள்வியை எழுப்பி நச்சு கருத்தை வெளியிட்ட நக்கீரன், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலா அல்லது, இரு மதங்களுக்குமிடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலா அவர்கள் வெளியிட்டார்கள் என்பது மக்களுக்கு புரியவில்லை. எனினும் முத்துப்பேட்டையை பொறுத்த வரையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து சமுதாய மக்களும் சகோதர் வாஞ்சையுடன் தான் வாழ்த்து வருகின்றனர் என்பது அந்த நாக்கீரனுக்கு தெரியவில்லையே என்பது முத்துப்பேட்டை மக்களின் கேள்வியாக இருக்கிறது. பல்வேறு ஆண்டுகளாக முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒரு முறை முஸ்லிம்கள் மறுமுறை இந்துக்கள் என்று மாறி மாறி பதவியில் அமருகின்றனர். அவ்வாறு தனது பதவியை விட்டுக்குக் கொடுக்கும் மனப்பான்மையில் தான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் எங்களிடம் ஏன் இந்த அவல போக்கு நக்கிரானுக்கு?
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் திருவாரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.கோபி. (DSP ) அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட அந்த தகவலுக்கு இதுவரை யாரும் எழுத்து பூர்வமாக புகார்கள் தெருவிக்க வில்லை என்றும், அவ்வாறு யாரேனும் புகார் தெருவித்தால் சம்மந்தப் பட்டவர்கள் மீது விசாரணை நடத்துவோம் என்றும் அவர் தெருவித்தார்.
நக்கீரன் (இவர்களின்) முகத்திரையை கிழிக்கும் விதமாக முத்துப்பேட்டை நலம் விரும்பும் சகோதரர்கள் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சுவரொட்டி வெளியிட்டனர் அது பின் வருமாறு.


தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக லெப்பை தம்பி போட்டி:


முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு கணிப்பொறி என்ற சின்னத்தில் போட்டி இடுவதாக சுயேச்சை வேட்பாளர் லப்பை தம்பி தெருவித்தார், இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளின் மையப் பகுதி யில் நியாய விலை அங்காடிகளை திறக்க செய்து மக்கள் அலைகளிப்பில்லாமல் ரேசன் பொருட்கள் பெற ஆவணம் செய்யப்படும் என்றும், மிக முக்கியமான குடிநீர் வசதி தங்கு தடையின்றி முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், மின்விசிறி மின் கம்பங்கள் அமைத்து மிவசதி தங்கு தடையின்றி கிடைத்திட ஏற்பாடு செய்யப்படும் என்று, தார் சாலை, சிமென்ட் சாலை இல்லாத வார்டுகளில் இவைகளை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெருவித்தார். பள்ளிக் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வியில் திறமை பெறவும், அறிவாளியாகவும் வளர்ந்திட கல்வி நிறுவனங்களில் உரிய மக்கள் பிரதிநிதிகளை நியமித்து கண்காணிக்கப்படும் என்றும், கியாஸ் சிலிண்டர் வீட்டில் இருந்தபடியே பெற்றிட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குதியோர் அதர வற்றோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்று திறநாளிகளுக்கு அரசால் வழங்கப் படும் மாதாந்திர உதவித்தொகையினை பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் விவசாய தொழிலாளர்கள், தென்னை உரிமையாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தென்னைத் தொழிலாளர்கள், தென்னை உரிமையாளர்கள் ஆகியோர் பாதிக்கப் படும் காலங்களில் மத்திய மாநில அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று தரப்படும் என்றும், மீனவ பேரு மக்களின் துயர் துடைக்க பேட்டை, ஆசாத் நகர் கொரையாற்று ஆறு முகத்துவாரங்களில் (ஐஸ் பிளான்ட்) கட்டிடம் பேரூராட்சி மூலம் அமைத்து தரப்படும் என்று அப்போது அவர் தெருவித்தார். அன்பிற்கினிய வாக்காளர்களே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களுடைய வாக்குகளை தவறாமல் எனக்கு அளித்து பெருவாரியான முறையில் வெற்றிபெற செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டுக்கு SDPI சார்பாக போட்டியிடும் பாவ பகுருதீன்!



முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் மட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் SDPI சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் 9 வது வார்டில் போட்டியிடப் போவதாக பாவா பகுருதீன் தெருவித்துள்ளர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நமது வார்டில் உள்ள அடிப்படை வசதிகளை சரி செய்து தருவேன் என்றும், தெரு விளக்கு இல்லாத இதுவரையும் செய்யபடாத சந்துகளுக்கு தெரு விளக்கு அமைத்து தர முயற்சி செய்வேன், செக்கடி குளம் அருகில் கட்டப்பட்ட பெண்கள் கழிவறையை செயல்பட விடாமல் தடுத்து அயோக்கியர்களின் முகத்திரையை கிழித்தெறியும் விதத்தில் மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வந்தே தீருவேன் என்றும்,பக்கீர் வாடி (மஜீதியா) தெருவிற்கு டெண்டர் விடப்பட்டு வேலை செய்யாமல் தாமதபடுத்தி வரும் சிமென்ட் சாலை 8 லட்சம் வடிகால் வசதி 1 .50 லட்சம் ஆகா மொத்தம் 9 .50 லட்சத்திற்கான வேலையை துரிதமாக, உடனடியாக நடைபெற ஆவணம் செய்வேன் என்றும் அவர் தெருவித்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட MMK கட்சி வெளியீடு:




முத்துப்பேட்டை, அக்டோபர் 11 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிக்கையை மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் வேட்பாலருமாகிய s .முஹம்மது மாலிக் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் மாவட்ட தலைவர் ஜனாப்.ஹுமாயின் கபீர் அவர்களிடம் கொடுத்து தேர்தல் அறிக்கையை இன்று உற்சாகத்துடன் வெளயிட்டார். இது பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், மக்களின் குறைகளை முழுமையாக கேட்டு அப்பிரச்சனைகளை முழுமையாக ஆராய்ந்த பின்பு தான் இவற்றை அறிக்கையாக வெளியிடப்பட்டது என்றும், தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறிதிகளை முழுமையாக நிறைவேற்றப் படும் என்றும் அவர் தெருவித்தார். இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர். வக்கீல் தீன் முஹம்மது, த.மு.மு.க. வின் தகரத் தலைவர். எம். சம்சுதீன், நகர துணைத் தலைவர். முஹம்மது யூசுப், த.மு.மு.க வின் நகர துணைச் செயலாளர், எஸ்.தாவூத், த.மு.மு.க. வின் நகர பொருளாளர் ஜெகபர் சாதிக், த.மு.மு.க வின் நகர ஒன்றிய செயலாளர் எம்.நெய்னா முஹம்மது, மனித நேய மக்கள் கட்சியன் நகர செயலாளர். கே.முஹம்மது யாசின், லக்கி சித்திக், மற்றும் கழக தொண்டர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Source From www.muthupettaiexpress.com
தேர்தல் அறிக்கைகள்:

1 ) தினமும் காலை, மாலை சுத்திகரிக்கப் பட்ட குர்டிநீர் வழங்கப்படும். குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளே செய்யப்படும்.
2 ) கொசு தொல்லை முற்றிலுமாக ஒழிக்கப்படும். கொசுவினால் ஏற்படும் நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப் படும்.
3 ) சுகாதார மேம்பாட்டிருக்கு நிரந்தர பயனளிக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
4 ) தெருவிளக்கு இல்லாத பகுதிகளுக்கு உடனதியாக தெருவிலக்கு அமைக்க ஏற்பாடு செய்வேன்.
5 ) சொத்து வரிவித்திப்பில் உள்ள குறைபாடுகள் நீக்கப் பட்டு 20 % வரி குறைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன்.
6 ) பழுதடைந்த சாலைகள் உடனடியாக மேம்படுத்தப்படும்.
7 ) முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குளங்களும் தூய்மை படுத்தப் பட்டு சுகாதார குலங்களாக மற்றப்படும.
8 ) பேரூராட்சி அலுவலக பனிகள் விரைந்து நடக்க, முழுமையாக கணினிமயமாக நடவடிக்கை மேற்கொள்வேன்.
9 ) ஆரம்ப சுகதர நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற முயற்ச்சி எடுப்பேன்.
10 ) நவீன் வசதியுடன் கூடிய மீன்புடித்துரைமுகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
11 ) முத்துப்பேட்டை யில் மீன்வளத்துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
12 ) மாத கோவில் தெரு (புதுக்குடி இருப்பு ) பகுதியில் நவீன கழிப்பறை வசதி செய்து தரப்படும்.
13 ) முத்துப்பேட்டையில் அரசு தொழிற்பயிற்சி அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
14 ) இரையில்வே நிலையம் அருகில் நவீன கழிப்பறை அமைத்து தருவேன்.
15 ) முத்துப்பேட்டை மையப் பகுதியில் இலைங்கருக்காக விளையாட்டு மைதானம் அமைத்து தருவேன்.
16 ) பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை நவீன படுத்தி தருவேன்.
17 ) துப்புரவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்து தருவேன்.
18 ) பிறப்பு, இறப்பு சான்றிதல் 24 மணிநேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
19 ) நகரின் மையப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு நவீன பூங்கா அமைத்து தருவேன்.
20 ) மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த் தடுப்புக்கு விரைந்து செயல்படுவேன்.

மீதமுள்ள தேர்தல் அறிக்கை பின் வருமாறு...


தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி.EK .முனவ்வர் கான். அபு மர்வா

முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியை முற்றுகையிட்ட TNTJ வினர்!







முத்துப்பேட்டை, அக்டோபர் 10 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் வெளியிட்ட ஆண்டு மலரில் முஸ்லிங்களின் உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி சித்திரம் வரைந்து வெளியிட்டதை கண்டித்து, மேலும் பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்யக் கோரியும் மேலும் வெளியிட்ட புத்தகத்தை திரும்ப பெற கோரியும் இன்று காலை 10 மணியளவில் மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இதற்கு தொடர்புடைய வர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன. பின்பு இதனைத் தொடர்ந்து கண்டன உரை நிகழ்த்திய TNTJ வின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஜனாப். பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள், இறைவனுக்கு இணையாக தாயை ஒப்பிடுவது போல் தனது ஆண்டு மலரில் ஒரு வாசகம் வெளி இட்டது ஏன் என்றும், தங்களின் பள்ளி கூடம் ஓர் இஸ்லாமிய கலாச்சாரமாக திகல்வதனால்தான் தங்களின் குழந்தைகளை அங்கு அனுப்பி கல்வி கற்கவைத்துள்ளோம் என்றும், ஆனால் சிறு வயதிலே அவர்களுக்கு நச்சுக் கருத்தை ஏன் திணிக்கிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கில் நடைபெற்ற இதே தவறுக்கு தாங்களும் அதை எதிர்த்தீர்கள் ஆனால் நீங்களும் ஏன் இந்த தவறை செய்தீர்கள் என்றும், உங்களுக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா என்றும் இந்த தவறை யாரு செய்தாலும் கடுமையாக தண்டிக்க படவேண்டியது தான் என்றும் அவர் தெருவித்தார். இவ்வுலகிற்கு சிலை வணக்கத்தை ஒழிக்க வந்த முஹம்மது நபி ஸல் அவர்களுக்கே நீங்கள் கருப்பனையான உருவத்தை கொடுத்தல் உலகில் உள்ள எந்த முஸ்லிமும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெருவித்தார்.ஆனால் இந்த புத்தகத்தை திரும்ப பெற வில்லை என்றால் தமிழ் நாடு முழுவதும் TNTJ தனது ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TNTJ வின் திருவாரூர் மாவட்ட தலைவர். ஜனாப் அப்துல் ரஹ்மான், TNTJ வின் திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் ஜனாப்.முஹம்மது அன்சாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நாகைப் பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.

source from www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான். AKL . அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பட்டியல்!!


முத்துப்பேட்டை,அக்டோபர் 09 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியின் வார்டு எண்: 01 முதல் 18 வரைக்கான உறுபினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கீழ் வருமாறு. now 1 to 10 only...

போட்டியிடும் வேட்பாளரின் பட்டியல்:

முதலாவது வார்டு:

1 ) சாந்தி, மருதங்கவளி தோப்பு, முத்துப்பேட்டை. இவருக்கு (சுத்தியும், அறிவாலும், நட்சத்திரமும்) என்ற சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.
2 ) செல்வம், 235 /25 , மருதங்கவளி தோப்பு, முத்துப்பேட்டை. இவருக்கு (உதயசூரியன்) என்ற சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.
3 ) சேகர், கால்நடை மருத்துவமனை தெரு, மருதங்கவளி, முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு) என்ற சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.
4 ) மாறி முத்து, 176 /எ, மருதன்காவெளி முத்துப்பேட்டை. இவருக்கு (தாமரை) என்ற சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.
5) முத்துராமலிங்கம், மருதங்கவெளி தோப்பு, முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

இரண்டாவது வார்டு:

1) கோமதி, கருமாரி யம்மன் கோவில் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (உதயசூரியன்) என்ற சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.
2) தீபா, மருதங்கவெளி தோப்பு, முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.
3 ) பார்வதி, மருதங்காவளி தோப்பு, முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 ) பாத்திமா பீவி, கால்நடை மருத்துவமனைத் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (வைரம்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ) முஹம்மத் மரியம், 49 , மருதங்காவளி தோப்பு, முத்துப்பேட்டை.இவருக்கு (கை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
6 ) ரைஹானா பேகம், 8 , ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (தண்ணீர் குலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வார்டு:

1 ) அப்துல் வஹாப், புது குடியிருப்பு முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) தீன் முஹம்மத், 177 /2 , மருதங்காவளி தோப்பு, முத்துப்பேட்டை. இவருக்கு (குலையுடன் கூடிய தென்னை மரம்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 ) நாகூர் பிச்சை, 13 , புது குடியிருப்பு முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு)
4 ) நிஜாம். SDPI , 8 , ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (தண்ணீர் குழாய்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ) மீரா முஹைதீன், 92 எ, புது குடியிருப்பு முத்துப்பேட்டை. இவருக்கு (கை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நான்காவது வார்டு:

1 ) ஐயப்பன் PWT , பங்களா ரோடு, முத்துப்பேட்டை. இவருக்கு (உதய சூரியன்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) சுசிலா, புது காளியம்மன் கோவில் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (தாமரை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 ) சேட்டு, 97 ,புது காளியம்மன் கோவில் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (தீப்பெட்டி) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 ) ஞானசேகரன்,125 , புது காளியம்மன் கோவில் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ) மாணிக்கம், 5 /13 , பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (மேற்சட்டை கொட்டு) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐதாவது வார்டு:

1 ) அமுத, ௩௨, ஆஸ்பத்திரி தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (உதயசூரியன்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) கல்பானா ஸ்ட்ரீ, மருதங்காவளி தோப்பு, முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 ) சந்திரா, தெற்கு காடு ரயில்வே ரோடு சந்து, முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள வார்டுக்கு உள்ள வேட்பாளரின் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

6 வது வார்டு:

1 ) ரோக்கியா அம்மாள், புத்துத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) ஜெய்புனிச, தால்கள்ளி சந்து முத்துப்பேட்டை. இவருக்கு (உதய சூரியன்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

7 வது வார்டு:

1 ) அஜ்மல் கஹன், புத்துத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (கை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) சுல்தான், மறைகையர் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 ) முஹம்மது யூசுப், பக்கிரிவாடி தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (உதய சூரியன்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 ) முஹம்மது சித்திக், பக்கிரிவாடி தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (வைரம்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ) ஜபருல்லாஹ், பிச்சை குட்டி ராவ்தர் சந்து, முத்துப்பேட்டை. இவருக்கு (தண்ணீர் குழாய்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
6 ) ஜெஹபர் சாதிக், புத்துத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (குலையுடன் கூடிய தென்னை மரம்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
7 ) ஹபீப் கான், பட்டுக்கோட்டை ரோடு, முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

8 வது வார்டு:

1 ) பஜாரிய அம்மாள், குண்டாங்குலத் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (தண்ணீர் குழாய்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) சஜஹான் பீவி, தென்னைமரைக்கவாடி சந்து, முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

9 வது வார்டு:

1 ) அஹமது இபுராஹிம், பேட்டை ரோடு, முத்துப்பேட்டை. இவருக்கு (உதய சூரியன்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) பாவ பகுருதீன், கும்மிவாடி சந்து, முத்துப்பேட்டை. இவருக்கு (தண்ணீர் குழாய்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 ) முஹம்மது கனி, நடுத்தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 ) முஹம்மது சரிப், பக்கிரி வாடி சந்து, முத்துப்பேட்டை. இவருக்கு (அசைந்தாடும் நாற்காலி) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

10 வது வார்டு:

1 ) கிருஷ்ணன், ஆதி திராவிடர் தெரு, முத்துப்பேட்டை, இவருக்கு (கரண்டி) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 ) பாண்டியன் சி, ஆதி திராவிடர் தெரு, முத்துப்பேட்டை, இவருக்கு (சுத்தியும், அறிவாலும், நட்சத்திரமும்) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 ) மாரியப்பன். ச, ஆதி திராவிடர் தெரு, முத்துப்பேட்டை, இவருக்கு (இரட்டை இலை) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 ) ராஜேந்திரன், காளியம்மன் கோவில் தெரு, முத்துப்பேட்டை. இவருக்கு (மேசை விளக்கு) என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான் , அபு மர்வா

மீதம் நாளை வெளியிடப் படும்

முத்துப்பேட்டை உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பில் களம் இறங்கிய MMK வினர்!






முத்துப்பேட்டை,அக்டோபர் 09 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் MMk வின் வேட்பாளாரான எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாசா மாலிக் என்ற முஹம்மத் மாலிக் அவர்கள் பேருந்து சின்னத்தில் போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில் முத்துப்பேட்டையில் உள்ள 18 வார்டு மக்களிடமும் கடந்த 5 நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித், மேலும் வர்த்தக நண்பர்கள், விவசாய்கள் ஆகிய அனைத்து மக்களிடமும் சென்று தனக்கு வாக்கு சேகரித்தார்.
Source from muthupettai express
நமது நிருபர்

முத்துப்பேட்டை முஹைதீன், லக்கி சித்திக், K . முஹம்மது யாசின்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)