முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி --மல்லிப்பட்டினம் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இளைஞர்களுக்கு தனி தனி படுக்கை வசதிகள் !!!


கடந்த 28 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல்களால் நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டனர் .

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக கும்பல்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அர்ஷத் ,முஹமது மைதீன் ,அமீன் ,மற்றும் நூருல் அமீன் ஆகியோர் ரத்த காயங்களுடன் உயிர் தப்பினர் .இதில் அமீன் என்ற இளைஞர் ஊனமுற்றவர் என்பதால் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிகொண்டார் .

இதனால் கவலைக்கிடமான  அமீன் தஞ்சையில்  உள்ள மீனாட்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .அர்ஷத்,முஹம்மது மைதீன் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் 

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தனர் .அப்போது தங்கள் மூன்று பேரையும்ஒரே படுக்கையில் (BED ) தங்க வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர் .இதனையடுத்து நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர்  தமிழக சுகாதாரத்துறை ,தஞ்சை மாவட்ட முதன்மை மருத்துவர் ,தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ,ஆகியோருக்கு தகவல் அனுப்பினர்  .

இந்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும்  இன்று தனித்தனியே படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது  .(அல்லாஹு அக்பர் )
0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)