முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மல்லிபட்டினத்திற்கு நேரில் சென்ற தடா ரஹீம் --ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதளுக்குல்லானவர்களிடம் நேரில் ஆறுதல் !!!


கடந்த   அன்று மல்லிப்பட்டினத்தில் உள்ள கடைவீதியோரம் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள்  நான்கு பேர் நின்றுகொண்டிருந்தனர் .அப்போது சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தேசவிரோத கும்பல் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்து அங்கு நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேரையும்  சராமரியாக அவர்கள் கைகளில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி விட்டு   கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் .




ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் தாக்கியதில் அர்ஷத் (26),நூருல் அமீன் (22), முஹமது மைதீன் (26),மற்றும்    அமீன் (20) ஆகியோர்  படுகாயமடைந்துள்ளனர் .இதில்  அமீன்  என்றநபர் கால் ஊனமுற்றவர் என்பதால் அங்கிருந்து ஓடமுடியாமல் பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் முழுமையாக  சிக்கி கொண்டுள்ளார் . 


இதனால் அதிராம்பட்டினம் ,முத்துப்பேட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பதற்றமானது . இதனை அறிந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் சகோதரர் .தடா .ஜே .அப்துல் ரஹீம் அவர்கள்  செனையிலிருந்து நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் ஷேக் பரீத் வீட்டிற்கு விரைவாக வந்து சேர்ந்தார் .


பின்னர் அங்கிருந்து தடா ரஹீம் மற்றும் அவர்களுடன் வந்திருந்த சகோதரர்களுடன் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் ஷேக் பரீத் , உள்ளிட்டோர் சரியாக 3:30 மணியளவில் மல்லிபட்டினம் சென்றடைந்தனர் .தடா ரஹீம் அவர்கள மல்லிப்பட்டினம் வருவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட அந்த ஊர் இளைஞர்கள் பெரும் திரளாக குழுமி இருந்தனர் .


நம்மை கண்ட அவர்கள் அனைவரும் நாங்கள் வந்த வாகனங்களை சுற்றிக்கொண்டு நம்மை அன்போடு வரவேற்று மல்லிப்பட்டினம் பள்ளிவாசலுக்குள் அழைத்து சென்றனர் . ஜமாஅத் நிர்வாகிகளை சந்திக்க முயற்சித்தோம் அனால் பலனில்லை பின்னர் அங்கே திரண்டிருந்த இளைஞர்கள் பட்டாளத்தின் மத்தியில் தடா ரஹீம் அவர்கள் கலந்துரையாடினார் .அப்போது இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றும் ,ஆனால் அநீதி நடப்பதை தட்டி கேட்க வலியுறுத்துவதாகவும் கூறினார்

 .ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும்  ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும் என்றும் ,ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் தாக்க வந்தால் அவர்களை திருப்பி அடிக்க  வேண்டும் என்றும் கூறினார் .அப்போதுதான் நாம் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட முடியும் என்றும் கூறினார் .அப்போது அங்கே குழுமி இருந்த இளைஞர்கள் அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டனர் ..இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பானது . 


 .இதனை மோப்பம் பிடித்த உளவுத்துறையினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பள்ளிவாசல் அருகில் வந்து நின்றனர் .அவர்களை கண்டு சற்றும் பொருட்படுத்தாத இளைஞர்கள் கூட்டம் ,கலவரத்தால் பெரிதும் பாதிப்பிற்குள்ளான பழமை வாய்ந்த தர்காவிற்கு நம்மை அழைத்து சென்றனர் .அங்கே ஆர் எஸ் எஸ் தேச விரோத ,பயங்கரவாத கும்பல் ,தர்காவின் சுற்றுச்சுவர் ,காத்தாடிகள் ,டியுபு லைட்டுகள் ,சுவிட்சு போடுகள்,உள்ளிட்டவைகளை அடித்து உடைத்துள்ளனர் .


பின்னர் அங்கிருந்து மல்லிபட்டினம் இளைஞர்கள் பட்டாளத்துடன் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி விரைந்தோம் .


சரியாக இரவு 8 மணிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி சென்றடைந்தோம் .பின்னர்  26 ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நூருல் அமீன் ,அர்ஷத் ,முஹம்மது மைதீன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம் .
அப்போது எங்களிடம் பேசிய அர்ஷத் ,நூருல் அமீன் ,மற்றும் முஹம்மது மைதீன் ஆகியோர் ,தாங்கள் மூவரையும் ஒரே படுக்கையில் படுக்க வைத்திருப்பதாகவும் ,தங்களுக்கு மிகவும் பொடுபோக்காக சிகிச்சையளித்து வருவதாகவும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர் .


உடனே மருத்துவமனையின் டீன் ஐ சகோ தடா ரஹீம்  மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் செய்திக்குளுவினர்   சந்திக்க முயற்சித்தோம் ஆனால் அவர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார் 




இதனைத் தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கால் ஊனமுற்றவரான அமீன் அவர்களை பார்வையிட தஞ்சைபுதிய பேரூந்து நிலையம் எதிரே உள்ள  மீனாட்சி மருத்துவமனைக்கு விரைந்தோம் .அங்கே அவசர சிகிச்சை பிரிவில் அமீன் சிகிச்சை பெற்று வருவதால் தடா ரஹீம் மட்டும் உள்ளே சென்று பார்வையிட அனுமதிக்கபட்டார் .பின்னர் அந்த மருத்துவமனையில் இருந்த அமீனின் உறவினரை தடா ரஹீம் சந்தித்து ஆறுதல் கூறினார் .

நேரடி களத்தொகுப்பு :ஜே :ஷேக்பரீத் 




































1 comments:

  1. Annan Thada Raheem avargalin sirappaana panikku vaalthukkal... Pala

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)