முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


பட்டுக்கோட்டையை ஸ்தம்பிக்க வைப்போம் -முத்துப்பேட்டையில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு !!!கடந்த 10-08-2014 அன்று பட்டுக்கோட்டையில் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளையின் முன்னாள் செயளாலர் சகோதரர் சாதிக் மற்றும் அவர்சகோதரர் யூசுப் இருவரும் குடும்பத்தோடு காரில் வந்துகொண்டு இருக்கும்போது அவரையும் அவர்குடும்பத்தாரையும் தேவையில்லாமல் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தீட்டியுள்ளார் போக்குவரத்து காவலர்

ஏன் தேவையில்லாமல் திட்டுகிற்ரிர்கள் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்க போகிறேன் என் சொல்லிவிட்டு பொலிஸ் ஸ்டேசன் வந்தனர்

இவர்களை பிந்தொடர்ந்து வந்த அந்த காவலர் ஒரு குடிகாரன் போல லத்தியை எடுத்து போலீஸ் ஸ்டேசன் உள்ளேயே வைத்து உயிர் போகும் அளவுக்கு தாக்கியுள்ளார் இதில் அடிதாங்காமல் யூசுப் அவர்கள் மயக்கமடைந்தார்.

தனது சகோதரன் தாக்கப்படுவதை பார்த்து பொருக்காமல் நியாயம் கேட்ட சகோதரியையும் கேவலமாக திட்டியுள்ளார் அந்த வெறியர்

இப்படி ஆசைதீர அநியாயம் செய்தபின்பு வெளியே அனுபியுள்ளார்கள்

லோக்கல் பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில் அந்த போக்குவரத்து காவலர் பலத்டவை இதே போல நடந்து தலைமை அதிகாரி வார்னிங் பன்னியுள்ளதாகவும் கூறினார்.


இந்நிலையில்
  முத்துப்பேட்டை கிளைகளின் சார்பில் மஸ்ஜிதுன் நூரில் ஆலோசனை கூட்டம் புரைதா மண்டல தலைவர் செய்யது இபுறாகிம் தலைமையில் நடைபெற்றது. இதில் 19.8.2014 அன்று நடைபெறும் பட்டுக்கோட்டை காவல்நிலையம் முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்துச்செல்ல ஆலோசனை செய்யப்பட்டது. இரண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அதிக அளவில் சென்று பிரச்சார பணி செய்வது என் முடிவு செய்யப்பட்டது.

தொகுப்பு ஜே :ஷேக் பரீத் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)