முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


நோன்பிருந்து இப்தார் விருந்து கொடுத்த திருமாவளவன் :வேற்றுமுகம் காட்டும் அரசியல் வாதிகளுள் மாற்றுமுகம் !!!

இஸ்லாமியர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி வந்து போராட்ட  களத்தில் சிங்கமாய் கர்ஜிப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் .அவர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் அளவில்லா அன்பும் ,ஈடு இணையற்ற  கருணையும் கொண்டவர் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று .

இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை சகோதரர் தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக அதிகாலையில் எழுந்து சஹர் செய்து ரமலான் நோன்பிருப்பதை கடைபிடித்து வருகிறார் .

வழக்கம்போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் இந்த வருடமும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பை கடைபிடித்தார் .

வழக்கம் போல் மூன்று நாட்கள் மட்டுமே நோன்பிருக்கும் தொல்.திருமாவளவன் இந்த வருடம் நான்கு நோன்பை கடைபிடித்தார் .

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை அபூ பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி ,SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர் முஹம்மது முனீர் ,இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் ,அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்போலோ ஹனீபா ,சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலைநாசர்,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் இஸ்மாயில் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் ம்ற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட  கட்சி  நிர்வாகிகள்  வாழ்த்தி பேசினர்.


தொகுப்பு ஜே :ஷேக் பரீத் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)