முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் நேற்று (04.08.2015) அன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், நிர்வாகி கண்ணதாசன், மற்றும் தில்லைவிளாகம் செந்தில், துரைத்தோபபு இலவரசன், பெருகவாழ்ந்தான் சிவம்பரசன், ஆரியலூர் டெஸ்சி மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று வேரொரு வழக்கிற்காக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த பெரியநாயகம், முருகேஷ்;, ரவி ஆகிய 3 பேரை இந்த வழங்கில் சேர்க்கப்பட்டு கைது வைத்திருந்தனர். நேரம் ஆனதும் திடீரென்று போலீசார் அவர்கள் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி கோர்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Reporter By   
முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)