முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்பு வாசிகளுக்கு நேற்று பேரூராட்சி இறுதி நோட்டீஸ். வாங்க மறுத்த குடியிருப்புகளில் நோட்டீசை ஒட்டியதால் பரபரப்பு.முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைக்கேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைக்கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி 3 மாதங்களுக்கு முன்பு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.

 இந்த நிலையில் அதே வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற வழிக்காட்டுதலின் படி சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு அகற்ற தான் அனுப்பிய மனு மீது தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை.

 மேலும் உயர் நீதி மன்றம் உத்தரவுபடி தமிழக அரசு நியமணம் செய்த தனி ஆணைப்படி அவர்கள் பணி செய்யாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர எனக்கு அனுமதித் தர வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க முடிவு செய்து கடந்த மாதம் 40 ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை பேரூராட்சியில் ஒப்படைத்தனர். 

அதன்படி சென்ற மாதம் பேரூராட்சி சார்பில் செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 10 நாள் கெடு விடுத்து நோடீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து இறுதி நோட்டீஸ் வழங்கினர். பலரும் நோட்டீசை வாங்க மறுத்தனர் அதனாலும், பலர் வீட்டில் இல்லாததாலும் அவர்களது குடியிருப்புகளில் பேரூராட்சி அலுவலர்கள் நோட்டீசை ஒட்டி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Reporter By   

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)